search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆவுடையானூர் அருகே சாலையின் நடுவே இருந்த மின்கம்பங்கள் ஊராட்சி மன்ற தலைவரின் முயற்சியால் மாற்றி அமைப்பு
    X

    மின்கம்பத்தை மாற்றி அமைக்கும் பணி நடைபெறும் காட்சி.


    ஆவுடையானூர் அருகே சாலையின் நடுவே இருந்த மின்கம்பங்கள் ஊராட்சி மன்ற தலைவரின் முயற்சியால் மாற்றி அமைப்பு

    • சாலையின் நடுவே இருந்த மின் கம்பங்களை அகற்றி வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைகள் வைத்து வந்தனர்.
    • ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்க ராஜன் கவனத்திற்கு ஊர் பொதுமக்கள் மற்றும் தமிழன் நல சங்கத்தின் சார்பில் கொண்டு செல்லப்பட்டது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சி மாடியனூரில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் பாதையில் ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளே சென்றுவர முடியாத அளவிற்கு போக்குவரத்திற்கு இடையூறாக சாலையின் நடுவே இருந்த மின் கம்பங்களை அகற்றி வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைகள் வைத்து வந்தனர்.

    மேலும் மின்கம்பங்களை வேறு இடத்திற்கு மாற்று வதற்கு மின்வாரியத்திற்கு குறிப்பிட்ட தொகை பணம் கட்ட வேண்டும் என்கிற சூழல் இருந்து வந்தது. இந்நிலையில் சுகாதாரத்துறையில் மின்சார வாரியத்திற்கு செலுத்த நிதிகள் இல்லை என்று கூறி வந்தனர். இதுகுறித்து ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்க ராஜன் கவனத்திற்கு ஊர் பொதுமக்கள் மற்றும் தமிழன் நல சங்கத்தின் சார்பில் கொண்டு செல்லப்பட்டது.

    உடனடியாக ஊராட்சி தலைவர் அந்த கோரிக்கையை ஏற்று மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தினார். இதனையடுத்து மின் கம்பங்களை அகற்றிவிட்டு வேறு இடத்தில் வைக்கும் பணிகள் தொடங்கியது.கோரிக்கையை ஏற்று மின்சார வாரியத்திற்கு பணம் செலுத்திய ஆவுடையானூர் ஊராட்சி தலைவர் மற்றும் மின்சார வாரியத்தின் மின்பொறியாளருக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் தமிழன் மக்கள் நலச்சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்தனர்.



    Next Story
    ×