search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் முறிந்து விழும் நிலையில் மின் கம்பம்
    X

    சாலையில் முறிந்து விழும் நிலையில் மின் கம்பம்

    • புதிதாக விரிவாக்கம் செய்து சாலை அமைக்கும் போது சாலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றி சாலை ஓரங்களில் நடுவது வழக்கம்.
    • பூதலூர் -காங்கேயம் பட்டி சாலையில் விண்ணனூர்பட்டி கிராமத்தில் சாலையோ–ரத்தில் உள்ள ஒரு சிமெண்ட் மின்கம்பம் நடுவில் முறிந்த நிலையில் உள்ளது.

    பூதலூர்:

    செங்கிப்பட்டி- திருக்காட்டுப்பள்ளி சாலையில் பூதலூர் இருந்து பெரியகாங்கேயன்பட்டி வரை உள்ள சாலை விரிவா–க்கப்பட்டு பணிகள் முடிவடைந்து உள்ளன.8 கி.மீ நீளமுள்ள இந்த சாலை முழுவதும் கிராமப்புற மக்கள் பயன்பாட்டிற்காகவும், வேளாண் விளைபொருட்கள் எடுத்துச் செல்லவும் பயன்பட்டு வருகிறது.

    இந்த வழித்தடத்தில் நகர பேருந்துகள் இயங்கி வருகின்றன.புதிதாகவிரிவாக்கம் செய்து சாலை அமைக்கும் போது சாலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றி சாலை ஓரங்களில் நடுவது வழக்கம. இதற்காக நெடுஞ்சாலைத்துறை மின்சார வாரியத்திடம் கோரிக்கை எழுப்பினால் மின்சார வாரியம் உடனடியாக செய்து தருவதும் வழக்கமான நடைமுறையில் இருந்து வருகிறது. இது போன்ற ஒரு சூழ்நிலையில் பூதலூர் -காங்கேயம் பட்டி சாலையில் விண்ணனூர்பட்டி கிராமத்தில் சாலையோ–ரத்தில் உள்ள ஒரு சிமெண்ட் மின்கம்பம் நடுவில் முறிந்த நிலையில் உள்ளது.

    அதை மாற்றி புதிதாக அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் அந்த கோரிக்கையை மின்சார வாரியத்தால் கவனிக்க–ப்படாமல் அப்படியே உள்ளது. இதுமட்டும் இல்லாமல் சாலை பணிகளுக்காக அகற்றி நட வேண்டிய ஒருமின்கம்பம் நடப்படாததால் அந்த மின் கம்பத்தை சுற்றி தார் சாலை போடப்ப–ட்டுள்ளது.இதனால் எதிரெதிரே 2 வாகனங்கள் வரும்பொழுது மின்கம்பத்தில் மோதக்கூடிய சூழ்நிலை உள்ளது. மின்சார வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் இதுபோன்று ஏற்பட்டதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    பலமுறை மின்சார வாரிய அலுவலர்களுக்கு மின்கம்ப–ங்கள் குறித்தும், சாலையில் உள்ள மின்கம்பத்தை அப்புறப்படுத்தி சாலையோரம் நட வேண்டும் என்று கோரிக்கைகளை எழுப்பியும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று இந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக மின்வாரியத்துறை அதிகாரிகள் அலட்சியப் போக்கை விடுத்து உடைந்த மின் கம்பத்தை மாற்றியும், சாலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றி சாலை ஓரத்தில் நட்டு பொதுமக்கள் பயன்பெற ஆவன செய்ய வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை எழுப்புகின்றனர்.

    Next Story
    ×