search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dharna protest"

    • 2 பேர் திடீரென்று சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஒரு சிலர் எங்கள் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதை மீட்டு தர கோரியும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் 2 பேர் கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தனர். பின்னர் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய அட்டையை கையில் வைத்துக் கொண்டு திடீரென்று சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் பண்ருட்டி ஆண்டிக்குப்பம் சேர்ந்தவர்கள் முருகேசன், பழனி ஆகியோர் தனது நிலத்தில் கூட்டு பட்டா நீக்க கோரியும், ஒரு சிலர் எங்கள் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதை மீட்டு தர கோரியும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்.மேலும் இத்தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து அங்கிருந்த போலீசார் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரியிடம் மனு அளித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற நடவடிக்கையில் யாரும் ஈடுபடக்கூடாது என தெரிவித்தனர்.

    • ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு உடனடியாக பணம் மற்றும் டி.ஏ வழங்கிட வேண்டும்.
    • அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    கடலூர்:

    சி.ஐ.டி.யு மற்றும் அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு உடனடியாக பணம் மற்றும் டி.ஏ வழங்கிட வேண்டும். அதிகாரிகள் தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை சிறப்பு தலைவர் பாஸ்கரன் தலைமையில் தலைவர் மணிகண்டன் முன்னிலையில் நிர்வாகிகள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கடலூர் மண்டல அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் பொதுச் செயலாளர் முருகன் கண்டன உரை ஆற்றினார்.

    இதனை தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் கடலூர் போக்குவரத்து மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அலுவலக வளாகத்தில் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நபர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    • தென்காசியில் 30 அம்ச வாழ்வாதாரக் கோரிக்கையை வலியுறுத்தி மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.
    • மாவட்டச்செயலாளர் மாரிமுத்து கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 30 அம்ச வாழ்வாதாரக் கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாலை நேர தர்ணா போராட்டம் தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்றது. தர்ணாவிற்கு மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

    மாவட்டச்செயலாளர் மாரிமுத்து வரவேற்புரை யாற்றி கோரிக்கைகள் குறித்தும் விளக்கிப் பேசினார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் துரைசிங், தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில துணைத்தலைவர் சதீஷ்குமார்,தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சட்ட செயலாளர் பிச்சைக்கனி மற்றும் கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள் சிவகுமார், ராஜ்குமார் ,மாணிக்கம் சுதர்சன், மாநில செயற்குழு உறுப்பினர் லட்சுமி,மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் துரை ராஜ், மாடசாமி, மாவட்ட துணைப் பொறுப்பாளர்கள் ராஜன்ஜான் செல்வராஜ், கிருஷ்ணன், ஜேம்ஸ் ஆரோக்கியராஜ். ஜாஹிரா ஆகியோர் சிறப்புரை யாற்றினர். தர்ணா உரையை கன்னியாகுமரி மாவட்ட மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன் விளக்கி பேசினார்.மாவட்ட பொருளாளர் மணிமேகலை நன்றி கூறினார்.இதில் மாநில செயற்குழு, பொதுக்குழு , மாவட்ட துணைப் பொறுப்பாளர்கள் , வட்டார பொறுப்பாளர்கள் உள்பட 350 பேர் கலந்து கொண்டனர்.

    • உடுமலை அரசு போக்குவரத்து கிளை மேலாளராக பணிபுரிந்த சந்திரன் என்பவரை கண்டித்து தர்ணா போராட்டம்.
    • 54 பேருக்கும் சம்பள பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு போக்குவரத்து கிளை பணிமனையில் கிளை மேலாளராக பணிபுரிந்த சந்திரன் என்பவரை கண்டித்து கிளை மேலாளர் அலுவலகம் முன்பு திமுக தொழிலாளர் சங்கத்தினர் திடீர் தர்ணாவில் போராட்ட பரபரப்பு ஏற்பட்டது.

    கடந்த 28, 29, 30 ஆம் தேதிகளில் திமுக தொழிலாளர் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் முறையாக அரசு போக்குவரத்து கிளையில் விடுப்பு கடிதம் கொடுத்த பிறகும் தற்பொழுது 54 பேருக்கும் சம்பள பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கிளை மேலாளர் அலுவலகம் முன்பு தற்சமயம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

    தி.மு.க தொழிற்சங்க த்தினர் கூறியதாவது:-

    உடுமலை அரசு போக்குவரத்து கிளையில் பணிபுரிந்து இடமாற்றம் மாறுதலாகி சென்ற சந்திரன் என்ற கிளை மேலாளர் தொழிலாளர்களை வஞ்சிக்கும் நோக்கில் 54 பேருக்கு சம்பள பிடித்தம் செய்து விடுப்பு போடப்பட்டுள்ளதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் 54 தொழிலாளர்களுக்கும் முறையான சம்பளம் வழங்க வேண்டுமென தற்சமயம் கிளை மேலாளராக உள்ள நடராஜன் என்பவரிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட காரணத்தால் தற்சமயம் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றோம். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர். உடுமலை அரசு போக்குவரத்து கிளை அலுவலகத்தில் திமுக தொழிற்சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டு வரும் சம்பவம் இப்பதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • முந்திரி விவசாயம் செய்துகொண்டு வரும் தனலட்சுமி தனது மகன் விக்னேஷ் உடன் வீட்டில் இருந்து வருகிறார்.
    • பீரோவில் இருந்த 110 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே உள்ள புதுக்கூரைப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னதுரை மனைவி தனலட்சுமி(60). சின்னதுரை ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு சுதா, ராஜலட்சுமி, ஜெயலட்சுமி ஆகிய 3 மகள்களும், விக்னேஷ்(27) என்ற மகனும் உள்ளனர். சுதா, ராஜலட்சுமி இருவருக்கும் திருமணம் ஆன நிலையில் ஜெயலட்சுமி மற்றும் விக்னேஷுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. முந்திரி விவசாயம் செய்துகொண்டு வரும் தனலட்சுமி தனது மகன் விக்னேஷ் உடன் வீட்டில் இருந்து வருகிறார். ஜெயலட்சுமி காரைக்காலில் உள்ள தனியார் விவசாய கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த மார்ச் 10- ந் தேதி காலை தனலட்சுமி தனது மகனுடன் தனது விவசாய நிலத்திற்கு சென்று விட்டு மதியம் சுமார் 1 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 110 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்ற னர். இச்சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்த நகை பணத்தை போலீசார் மீட்டு தராததால் வேதனை அடைந்த தனலட்சுமி அவரது மகள் ஜெயலட்சுமி, மகன் விக்னேஷ் ஆகிய 3 பேரும் விருத்தாச்சலம் புதுக்கூரைப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் கடந்த ஜூலையில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இந்நிலையில் திருடு போன நகையை காவல்துறை இன்னும் மீட்டு தராததால் உடனடியாக மீட்டு தரக்கோரி இன்று காலை புதுக்கூரப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த விருத்தாசலம் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான காவல்துறையினர் நகையை மீட்க உடனடியாக நடவடிக்கப்படும் உறுதி கூறியதை எடுத்து அவர்கள் சமாதானம் அடைந்து தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தல்
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அருண்பாட்சா தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் பார்த்திபன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    இதில் மத்திய அரசு வழங்கும் அதே நாளில் தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வு நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

    தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியான 70 வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்பட வேண்டும். ரெயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த ரெயில் பயண கட்டண சலுகையை மத்திய அரசு உடனடியாக மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் ஓய்வூதியர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.

    • கடலூரில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • மாவட்ட செயலாளர் பழநி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

    கடலூர்:

    தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் கடலூர் மாவட்டம் சார்பாக 01.01.2022 முதல் 3 சதவீதம் அகவிலைப்படி நிலுவை தொகையினை வழங்க வேண்டும். 1.07.2022 முதல் மருத்துவ காப்பீட்டு சந்தா தொகை 497 ரூபாயாக உயர்த்தியதை ரத்து செய்து 350 ரூபாயாக குறைத்திடவேண்டும். கொரோனா சிகிச்சை கட்டணம் செலவுத் தொகையை உடன் திரும்ப வழங்கிட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர், வருவாய் கிராம ஊழியர், வனக்காவலர்கள், கிராமபுற நூலகர்களுக்கு ஓய்வூதியம் 7850 ரூபாய் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி அவர்கள் கடலூர் பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் தர்ணா போராட்டம் செய்தனர். மாவட்ட தலைவர் காசிநாதன் தலைமை தாங்கினார். வட்டக்கிளை நிர்வாகிகள் ராமதாஸ் , அன்பழகன், முத்தமிழ்ச்செல்வி, பன்னீர்செல்வன் ,செல்வராஜ், குமாரவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட இணைச் செயலாளர் பாலு, பச்சையப்பன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பழநி கோரிக்கைகளை விளக்கி பேசினார் . ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் புருஷோத்தமன் தொடங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன், தொழிலாளர் நலத்துறை ஓய்வூதியர் சங்க பூண்டியாங்குப்பம் சாம்பசிவம், குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் தேவராஜ் வோளண்மை அனைத்து ஊழியர் சங்க மாவட்டத் தவைர் சுந்தரமூர்த்தி, மாவட்ட தவைர்சிவராமன், பொதுச் செயலாளர் மருதவானன், இந்து சமய அறயநிலைத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் சுப்ரமணியம் அலுலக உதவியாளர் அலுவலக பணியாளர் ஓய்வூதியர் சங்கம் மாவட்டத் தலைவர் பக்தவச்சலம், சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராமநாதன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊரட்சி துறை அனைத்து ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ஆதவன், ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார்கள். இதில் நிர்வாகிகள் கருணாகரன் , சிவப்பிரகாசம் , கலியமூர்த்தி , பத்பநாபன், ராமனுஜம் , ஞானமணி . சிகாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சி.குழந்தைவேலு நன்றி கூறினார். 

    • ராகல்பாவி மற்றும் ஆர்.வேலூர் இணைப்பு சாலை வரை செல்வதற்கு நிலவியல் பாதை உள்ளதாக கூறப்படுகிறது.
    • விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் அந்த இடத்தை அளக்காமல் திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை அடுத்துள்ள போடி பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சுண்டக்கம்பாளையத்தில் இருந்து ராகல் பாவி மற்றும் ஆர். வேலூர் இணைப்பு சாலை வரை செல்வதற்கு நிலவியல் பாதை உள்ளதாக கூறப்படுகிறது. அந்தப் பாதையை அந்தப் பகுதியை சுற்றி உள்ள விவசாயிகள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது அருகில் உள்ளவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிகிறது.

    இதையடுத்து சுற்றுப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வலியுறுத்தலின் பேரில் அந்த இடத்தை அளப்பதற்கு வருவாய் துறையினர் போலீசாருடன் அங்கு சென்றபோது, அந்த பகுதியில் பட்டா இடத்தில் இருக்கும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் அந்த இடத்தை அளக்காமல் திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.இதைத் தொடர்ந்து அந்த இடத்தை நிலவியல் பாதையாக பயன்படுத்தி வந்த சுமார் 20 விவசாயிகள் மற்றும்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தலைமையில் உடுமலை தாலுகா அலுவலகத்திற்கு ஆடு மாடுகள் உடன் வந்தனர். அவர்கள் அந்தப் பாதையை பயன்பாட்டிற்கு மீட்டு தரக்கோரி தாலுகா அலுவலக வளாகத்தில் தரர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் பிடித்திருந்தனர். ஆடு மாடுகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அங்கு போலீசார் குறிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. தாசில்தார் கண்ணாமணி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழி வேல், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் ,ராஜ் கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கனகராஜ், ஜெகதீசன், பாலதண்டபாணி மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இன்று ஆர். டி. ஓ. ஜஸ்வந்த் கண்ணன் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆடு மாடுகளுடன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.
    • தர்ணா போராட்டத்திற்கு நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார்.

    பல்லடம் :

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது மத்திய அரசு பொய் வழக்கு போட்டதை கண்டித்து பல்லடம் நகர, வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில், தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.

    தர்ணா போராட்டத்திற்கு நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார்.வட்டார காங்கிரஸ் தலைவர்கள் புண்ணியமூர்த்தி, கணேசன், மாவட்ட பொதுச்செயலாளர் நரேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகர காங்கிரஸ் செயல் தலைவர் மணிராஜ் வரவேற்றார். பின்னர் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தபால் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

    இதில் ருத்ரமூர்த்தி, ராமச்சந்திரன்,அர்ஜுனன் அமராவதியப்பன், சாகுல் அமீது மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    போச்சம்பள்ளி அருகே சரியாக பாடம் சொல்லி தராத ஆசிரியரை மாற்றக்கோரி குடும்பத்தினருடன் சேர்ந்து வாலிபர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்ம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி அடுத்துள்ள பழனம்பாடி பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (30). இவருடை குழந்தைகள் பழனம்பாடி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் பயின்று வருகிறார்கள். 

    பள்ளியில் உதவி ஆசிரியராக செந்தில் என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த சுமார் 19 ஆண்டுகளாக இப் பள்ளியில் பணியாற்றி வரும் இவர் மாணவர்களுக்கு சரியாக பாடம் சொல்லி தருவதில்லை என குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் மனு அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது நாள்வரை செந்தில் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பது தெரியவந்தது.

    இதனால் ஆத்திரம் அடைந்த திருப்பதி நேற்று மாலை பள்ளியின் முன்பு தனது குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக செந்தில் ஆசிரியரை பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தர்ணாவில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்துவந்த பாரூர் போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட திருப்பதியை சமாதானம் செய்து, பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். 
    வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் டெல்லியில் 24-ந்தேதி தர்ணா போராட்டம் நடத்தயிருக்கிறோம் என்று விக்கிரம ராஜா தெரிவித்துள்ளார். #vikramaraja

    திசையன்விளை:

    திசையன்விளை அனைத்து வியாபாரிகள் கலந்தாய்வு கூட்டம் வியாபாரிகள் சங்க தலைவர் டிம்பர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா கலந்து கொண்டு பேசினார். பின்பு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் உணவு பாதுகாப்பு சட்டத்தில் கடைபிடிக்க முடியாத சட்ட விதிகளை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு சட்ட விதிகளை நிர்ணயம்படுத்த வேண்டும், 28 சதவிகிதம், 18 சதவிகிதம் வரி விதிப்புகளை முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும், சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கமாட்டோம் என்று சொன்ன அரசு மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுகின்ற நேரத்தில் இன்று பிலிப்காட் நிறுவனத்தை வாங்கி வால்மார்ட் நிறுவனம் பொய்யான புள்ளி விபரங்களை தருகிறார்கள்.

    ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவோம் என்று அப்பட்டமான பொய் புகாரோடு வால்மார்ட் நிறுவனம் உள்ளே நுழைந்து கொண்டிருக்கிறது. இது உடனடியாக தடை செய்யப்பட வேண்டும். பிலிப்காட் நிறுவனம் வாங்கிய 87 சதவிதம் பங்குகளை உடனடியாக திருப்பி பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் வரும் 24-ந் தேதி ஆயிரக்கணக்காண வணிகர்களை தமிழகத்தில் இருந்து அழைத்து சென்று பேரணி மற்றும் தர்ணா நடத்தயிருக்கிறோம்.

    இவ்வாறு விக்கிரம ராஜா கூறினார். #vikramaraja

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு புதிய கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
    தேனி:

    தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரைநாள் தர்ணா போராட்டம் நடந்தது. ஓய்வூதியர்களுக்கும், ஓய்வூதியர்களின் குடும்பத்துக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மருத்துவ காப்பீடு திட்டத்தின் அடுத்த 4 ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட உள்ளது. இதில், ஓய்வூதியர்களுக்கு ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நீக்கவும், புதிய கோரிக்கைகளை நிறைவேற்றவும் வழிவகை செய்யும் வகையில் ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

    போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுப.பழனி தலைமை தாங்கினார். ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் ஆண்டவர் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.மாநில செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் துரைராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். மாநில செயலாளர் ஆறுமுகம் போராட்டத்தை முடித்து வைத்து பேசினார். முடிவில் வட்டக்கிளை செயலாளர் பழனிச்சாமி நன்றி கூறினார்.

    போராட்டத்தின் போது, 4 ஆண்டு காலத்துக்கு ரூ.4 லட்சம் உச்சவரம்பின்றி வழங்க வேண்டும். மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை இரண்டுக்கும் முழுமையான செலவு தொகையை காப்பீட்டு நிறுவனம் மருத்துவமனைக்கு வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைக்கப்படாமல் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, அங்கன்வாடி, சத்துணவு, கிராம ஊழியர்கள், போக்குவரத்து, மின்சாரத்துறை உள்ளிட்ட அனைத்து ஓய்வூதியர்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக்குழு ஏற்படுத்த வேண்டும். அதில் காப்பீட்டு நிறுவனம்,ஓய்வூதிய சங்க பிரதிநிதிகள், அரசு டாக்டர்கள் இடம்பெற்று இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர்.

    இதில் ஓய்வூதியர்கள் பலர் கலந்துகொண்டனர். காலை 10.30 மணியளவில் தொடங்கிய போராட்டம் பிற்பகல் 2 மணியளவில் முடிவடைந்தது.
    ×