search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dharna protest"

    வீட்டின் உரிமையாளர் மேற்கொண்டு பணம் எதுவும் கொடுக்கவில்லை என்று கூறி தர்ணா போராட்டம் நடத்தினர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள சின்னிய கவுண்டம்பாளையத்தில், தனியார் ஒருவர் வீடு கட்டி வருகிறார். வீடு கட்டுமான பணிக்காக பொறியாளர் ஒருவரிடம் கட்டுமான பணிகளை செய்வதற்கு, இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் 90 சதவீத பணிகள் முடிந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் மேற்கொண்டு பணம் எதுவும் கொடுக்கவில்லை என்று கூறி, நேற்று அவரது வீட்டு முன் பொறியாளர் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற பல்லடம் போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்தில் வந்து புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்தது.

    • 800-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி பயன் அடைந்து வருகிறார்கள்.
    • ரேஷன் கடை முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    மூங்கில்துறைப்பட்டு அருகே பொரசப்பட்டு மேலப்பாக்கம் புதூர் கிராமத்தில் ரேஷன் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையில் 800-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அத்தியா வசிய பொருட்களை வாங்கி பயன் அடைந்து வருகிறார்கள். இந்நிலையில் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பொருட்கள் வாங்க ரேஷன் கடைக்கு வந்தனர். அப்போது கடை விற்பனையாளர், பொதுமக்களிடம் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் வாங்கும் போது கூடுதலாக சோப்பு உள்ளிட்ட சில பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ரேஷன் கடை முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மூங்கில்துறைப்பட்டு காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவன், தனிப்பிரிவு காவலர் சுந்தர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின் இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

    • தர்ணாவில் ஈடுபட்டனர்
    • விவசாய குறைதீர்வு கூட்டம் நடந்தது

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடைபெற்ற விவசாய குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகளுக்கும் அதிகாரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த விவசாயிகள் வந்தவாசி நகர்ப்புற பகுதியியான கோட்டை மூலையில் நிழற்குடை அமைப்பதற்காக பல கூட்டங்களில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை எனக்கோரி நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு நெடுஞ்சாலை துறை அதிகாரி சரியாக பதிலளிக்கவில்லை. இதனால் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் விவசாயிகள் நெடுஞ்சாலை துறை அதிகாரியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.அப்போது அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நியர்குடைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை ெதாடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பிரிந்து சென்ற கணவரை சேர்த்து வைக்க வலியுறுத்தல்
    • குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது.

    வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

    இதில், முதியோர் உதவித்தொகை, இலவச வீடு, வீட்டுமனை பட்டா உள்ளிட்டவை தொடர்பாக 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

    அப்போது ஒடுகத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் கிராமத்தைச் சேர்ந்த வேண்டாமணி தனது மகனுடன் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதனைப் பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அவரை சமரசம் செய்து அதிகாரிகளிடம் அழைத்துச் சென்றனர்.

    வேண்டாமணி அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை வழங்கினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி மகன், மகள் உள்ளனர். எனக்கும், எனது கணவருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாக நான் தற்போது எனது அம்மா வீட்டில் உள்ளேன்.

    இந்த நிலையில் எனது கணவர் எனக்கு தெரியாமல் அதே பகுதியைச் சேர்ந்த வேறு பெண்ணை 2-து திருமணம் செய்து கொண்டார்.

    எனது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எனது கணவரை அழைத்து விசாரணை செய்து, என்னுடன் அவரை சேர்த்து வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பொத்தனூர் பேரூராட்சி கடந்த ஆண்டு தேசிய அளவில் சிறந்த பேரூராட்சிக்கான விருதைப் பெற்றுள்ளது.
    • ஒப்பந்த துப்புரவு மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணியாளர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்கவில்லை.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பொத்தனூர் பேரூராட்சி, கடந்த ஆண்டு தேசிய அளவில் சிறந்த பேரூராட்சிக்கான விருதைப் பெற்றுள்ளது. இந்த பேரூராட்சியில் துப்புரவு மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணியில் 50-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் உள்ளனர்.

    இந்நிலையில், இப்பேரூராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த துப்புரவு மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணியாளர்க ளுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்கவில்லை. ஏற்கனவே வழங்கிய சம்பள தொகை ரூ.14,000-ஐ, தற்போது ரூ.10,000 ஆக குறைத்துள்ளனர். ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் பணி செய்வதற்கான ஊதியம் வழங்கப்படுவதில்லை.

    நாள்தோறும் 10 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்குவதாவும் கூறி இன்று காலை பணிக்குச் செல்லாமல் ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது, தங்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்க வேண்டும், குறைக்கப்பட்ட சம்பள தொகையை உடனடியாக அதிகரித்து வழங்க வேண்டும், பணி நேரத்தை குறைக்க வேண்டும், ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் பணி செய்வதற்கான ஊதியம் முறையாக வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து தர்ணா போரா ட்டத்தில் ஈடுபட்டவர்க ளுடன் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், பேரூராட்சித் தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று கலைந்து சென்றனர். 

    • மாளிகைமேடு ஊராட்சியில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரியசித்தேரி உள்ளது.
    • ஒன்றிய குழு அலுவலகம் முன்பு அமர்ந்து கணவர் தென்னரசுடன் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அண்ணா கிராமம் ஒன்றியம் மாளிகைமேடு ஊராட்சியில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரியசித்தேரி உள்ளது. இந்த ஏரி மாளிகை மேடு ஊராட்சிக்கு சொந்தமானது. இங்குள்ள கருவேல மரங்களை அரசு விதிகளுக்கு உட்பட்டுஏலம் நடத்திமரங்களைவெட்டி அகற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு அனுமதி அளித்து இருந்தார். ஏலம் விடாமலே ஏரியிலிருந்து மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக தெரிய வந்தது.இதனை தொடர்ந்து ஒன்றிய கவுன்சிலரும் ஒன்றிய குழு துணை தலைவருமான ஜான்சி ராணி தென்னரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அனுப்பி இருந்தார். அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று காலை அண்ணா கிராமம் ஒன்றிய குழு அலுவலகம் முன்பு அமர்ந்து கணவர் தென்னரசுடன் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்ததும் துணை வட்டார வளர்ச்சிஅலுவலர் திருநாவுக்கரசு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஒன்றிய குழு துணை தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக மரங்களை வெட்டி கடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்என்று அதிகாரிகளிடம் கூறினார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம், கூட்டரங்கில் நடைபெற்றது.
    • பொது நிதியில் திட்டப் பணிகளை தொடங்கி 9 மாத காலம் ஆகிவிட்டது. பொது நிதியில் பணிகளை மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம், கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் மாரியம்மாள் தலைமை தாங்கினார். ஆணையாளர் வெங்கடேஷ், வட்டார வளர்ச்சி அலு வலர், கிளை ஊராட்சி அலுவலர் உமா சங்கர், ஒன்றிய துணைத் தலைவர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கவுன்சி லர்கள் ரமேஷ், வெங்க டேஷ், சாமுராய் குரு, அசோகன் உள்ளிட்டோர், பொது நிதியில் திட்டப் பணிகளை தொடங்கி 9 மாத காலம் ஆகிவிட்டது. பொது நிதியில் பணிகளை மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றனர். இதற்கு, பொது நிதியில் பணிகளை மேற்கொள்ள முடியாது. போதுமான நிதியில்லை என்று ஒன்றிய தலைவர் பதில் அளித்தார். இதை யடுத்து, பொது நிதியிலிருந்து பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்றால் அனைத்து கவுன்சி லர்களும் ராஜினாமா செய்கிறோம் என்று கூறி, ஒன்றிய அலுவலக நுழைவா யிலில் அமர்ந்து கோஷமிட்ட படி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலு வலகத்தில் சிறிது நேரம் பர பரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் அதிகாரி கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • பிரதான அங்கன்வாடி மையங்களை மினி மையமாக மாற்றுவதையும், மினி மையங்களை பிரதான மையங்க ளோடு இணைப்ப தையும் தமிழக அரசு கைவிட வேண்டும்.
    • ஊட்டச்சத்தை மேம்படுத்துதல் என்ற பெயரில் மையங்கள் இணைப்பதை கைவிட வேண்டும்.

    நாமக்கல்:

    தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் வருகையை கணக்கில் கொண்டு, பிரதான அங்கன்வாடி மையங்களை மினி மையமாக மாற்றுவதையும், மினி மையங்களை பிரதான மையங்க ளோடு இணைப்ப தையும் தமிழக அரசு கைவிட வேண்டும். ஊட்டச்சத்தை மேம்படுத்துதல் என்ற பெயரில் மையங்கள் இணைப்பதை கைவிட வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் அறிவிக்கப்பட்டது.

    இதையொட்டி நாமக்கல் மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில், நாமக்கல் பார்க் ரோட்டில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் பாண்டிமாதேவி தலைமை வகித்தார். திரளான அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியா ளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு, கோரிக்கைளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    முன்னதாக சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் வேலுசாமி, துணை செயலாளர் சிவராஜ் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். 

    • அரசு ஊழியரை போல் மகப்பேறு விடுப்பு 1 வருடம் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.
    • அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் வரையறுக்கப்பட்ட ஒய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    தென்காசி:

    தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்க பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்குவது போல், பச்சிளம் குழந்தைகளை பாதுகாக்க மே மாதம் முழுவதும் அங்கன்வாடி மையங்க ளுக்கு விடுமுறை வழங்கிட வும், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் வரையறுக்கப்பட்ட ஒய்வூதியம், 10 ஆண்டு பணி முடித்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு உடன் பதவி உயர்வு, 10 வருடம் பணி முடித்து 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எவ்வித நிபந்தனை இன்றி அங்கன்வாடி பணியாளராக பதவி உயர்வு வழங்கவும், குறுமையத்திலிருந்து பிரதான மையத்திற்கு பதவி உயர்வில் சென்றவர்களுக்கு ஊதிய உயர்வு, குழந்தைகள் வருகை குறைவாக உள்ள அங்கன்வாடி மையங்களை இணைக்கும் திட்டத்தை கைவிடவும், பொது வருங்கால வைப்பு நிதியில் இருந்து ஊழியர்களுக்கு லோன் வழங்க வேண்டும், பணி ஒய்வு பெற்றவர்களுக்கு உடனடியாக பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வட்டியுடன் வழங்குமாறும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள ஆயிரக்கணக்காண காலிப் பணியிடங்களை உடளே நிரப்பிடவும், மகப்பேறு விடுப்பு அரசு ஊழியரை போல் 1 வருடம் வழங்கிடவும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவூட்டு செலவீனத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இந்த தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் தென்காசியில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் திருப்பதி முன்னிலை வகித்தார். சண்முக சுந்தரி, லெட்சுமி, செல்லத்துரைச்சி, ராதா உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொருளாளர் சி.ஐ.டி.யு. தர்மராஜ் ,மாவட்ட செயலாளர் தேவி ஆகியோர் விளக்க உரையாற்றினார். மாவட்ட தலைவர்அயூப்கான், சி.ஐ.டி.யு. மார்த்தாண்ட பூபதி, மாவட்ட துணை தலைவர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாடசாமி, மாவட்ட தலைவர் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம், மாவட்ட செயலாளர் ராஜசேகர் , தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் , சங்கத்தினர், மாவட்ட செயலாளர் சி.ஐ.டி.யு. மணிகண்டன் ஆகியோர் நிறைவுரை யாற்றினர். மாவட்ட துணை தலைவர் சரஸ்வதி நன்றி கூறினார்.

    • கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி பெண் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
    • கடலூர் மாவட்டம் புவனகிரிைய சேர்ந்தஸ்டெல்லா மேரி. மாற்றுத்திறனாளி

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை என்பதால் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை குறித்து கோரிக்கை மனுக்களை நேரில் வந்து வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றத்திறனாளி திடீரென்று சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர் கடலூர் மாவட்டம் புவனகிரிைய சேர்ந்தஸ்டெல்லா மேரி. மாற்றுத்திறனாளி. பட்டதாரி என்பது தெரிய வந்தது.

    அவர் போலீசாரிடம் கூறும் போது, கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய முதலமைச்சர் இவரது தந்தைக்கு சுய தொழில் செய்வதற்கு பெட்டிக்கடை வழங்கி உள்ளார். இதனை தொடர்ந்து தற்போது மாற்றுத்திறனாளியான நான் கடையை நடத்தி வருகிறேன்.. இந்த நிலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் அனுமதி பெற்ற பிறகு கடையை நடத்த வேண்டும் என உத்தரவிட்டதால் கடந்த 3 மாதமாக வருமானம் இல்லாமல் கடும் அவதி அடைந்து வருகின்றோம். மேலும் 90 வயது எனது தாயார் மிகுந்த அவதி அடைந்து வருகின்றார். ஆகையால் சாலை ஓரத்தில் உள்ள எனது பெட்டி கடைக்கு உரிய அனுமதி வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். என ஸ்கூடெல்லா மேரி கூறினார். அப்போது உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து உரிய தீர்வு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறி போலீசார் அறிவுறுத்தினார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • 146 ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளது.
    • மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் தடுத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி சார்பில் நொய்யல் ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆண்டிப்பாளையம் வரை சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நொய்யல் கரையோரம் உள்ள ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.நொய்யல் ஆற்றங்கரையோரம் உள்ள சாயப்பட்டறை வீதியில் 146 ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளது. அந்த ஆக்கிரமிப்பு வீடுகளை இடிப்பதற்காக மாநகராட்சி உதவி கமிஷனர் வாசுகுமார், செயற்பொறியாளர் கோவிந்த பிரபாகர் மற்றும் அதிகாரிகள் இன்று காலை சென்றனர்.

    அப்போது ஆக்கிர மிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அந்தப்பகுதியில் உள்ளவர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் தடுத்தனர். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்தனர் . இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டனர். தங்களை பணி செய்ய விடாமல் தடுப்பதாக வும் இது குறித்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரியும் இந்த போராட்டம் நடைபெற்றது. அதிகாரிகள் போரா ட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  

    • அதிகாரிகள் பேச்சுவார்த்தை
    • 8 கி.மீ. தொலைவுக்கு நடைப் பயணம் சென்றனர்

    வேலூர்:

    வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் உழவர் களஞ்சியம் மற்றும் கண்காட்சி துவக்க விழா இன்று நடந்தது.

    நிகழ்ச்சியில் வி.ஐ.டி. பதிவாளர் ஜெயபாரதி இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், துணைவேந்தர் ராம்பாபு கோடாலி வி.ஐ.டி. துணைத் தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன், ஜி .வி.செல்வம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் குமாரசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினார்.

    தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம்,வேளாண்மை துறை கூடுதல இயக்குனர் ராஜேந்திரன், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் ராஜு ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக உழவர் களஞ்சியம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு நடைபெறுவது மகிழ்ச்சி அடைகிறது.

    கடந்த ஒரு ஆண்டாக பாலாற்றில் தண்ணீர் வற்றாமல் சென்று கொண்டு உள்ளது. நான் வக்கீலாக, அமைச்சராக, வேந்தராக, எம்.எல்.ஏ.வாக இருந்த போதிலும் அடிப்படையில் நானும் ஒரு விவசாயி தான். என்னுடைய தந்தை தேங்காயை விற்று என்னை படிக்க வைத்தார்.

    அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்பவர்களுக்கு வார விடுமுறை உண்டு ஆனால் விவசாயிகளுக்கு விடுமுறையே கிடையாது எனவே விவசாயிகளுக்கு உரிய அந்தஸ்தை வழங்க முடியுமா என நாம் சிந்திக்க வேண்டும்.

    தமிழ்நாட்டிலேயே வட ஆற்காடு தென் ஆற்காடு மாவட்டங்களை முன்னேறிய மாவட்டங்களாக மாற்றி காட்ட வேண்டும் கல்வி பொருளாதாரத்தில் நம்முடைய மாவட்டங்கள் பின்தங்கி இருந்தது.

    தற்போது முன்னேற்றம் அடைந்து வருகிறது. நிரப்பரப்பில் நாலு சதவீதமும் மக்கள் தொகையில் ஏழு சதவீதமும் நீர் ஆதாரம் 3 சதவீதம் உள்ளது இதை வைத்துக்கொண்டு விவசாயிகள் விவசாயத்தில் வெற்றிக்கான வேண்டும்.

    சீனாவில் நம்மை விட குறைந்த அளவு நிலப்பரப்பு உள்ளது ஆனால் அவர்கள் நம்மை விட 2 மடங்கு வேளாண் பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.

    கடந்த 1995 முதல் 2014 வரை கடன் தொல்லையால் 2.91 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

    விவசாயிகளின் தற்கொலையை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த 2021-ல் ஒரு நாளைக்கு 15 பேர் தற்கொலை செய்து கொண்டனர் மகாராஷ்டிராவில் தான் அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.

    அடுத்தது கர்நாடகா, ஆந்திரா ,மத்திய பிரதேசம், தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. விவசாயிகள் வாங்கிய கடனுக்காக விவசாயிகளின் நிலம் மற்றும் பொருட்களை ஜப்தி செய்யும்போது அவமானத்தில் தற்கொலை செய்து கொள்கின்றனர் அரசுகள் இதனை கவனிக்க வேண்டும். ரூ 10 ,20 ஆயிரம் கோடி கடன் பெறுபவர்கள் பெறுபவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றனர்.

    நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்

    தமிழகத்தில் ஆறு ஏரி கால்வாய்களை சரிவர குடிமராமத்து பணி செய்யவில்லை தமிழ்நாட்டில் மொத்தம் 42 ஆயிரம் ஏரிகள் இருந்தது தற்போது 39 ஆயிரம் ஏரிகள் மட்டுமே உள்ளன. அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும்.

    நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் ஏரிகள் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதிக அளவு மழை பெய்யும் காலங்களில் தடுப்பணைகளை கட்டி தண்ணீரை தடுத்து நிறுத்த வேண்டும். மழைக்காலங்களில் 500 முதல் 1000 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாக சென்று கலக்கிறது.

    மேட்டூர் வைகை அணைகளை தூர்வாராததால் 30 சதவீத அளவுக்கு நீர் இருப்பு குறைந்து விட்டது அணைகளில் இருந்து தூர்வாரி அகற்ற வேண்டும் பாலாற்றில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டிய இரண்டு தடுப்பணைகள் மட்டும் தான் உள்ளது.

    ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் 17 தடுப்பணைகள் கட்டினார்.அந்த தடுப்பணைகளை தாண்டித்தான் பாலாற்றில் வெள்ளம் வருகிறது. விவசாயிகள் வேளாண் பொருள் உற்பத்தி திறனை அதிகப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து வேளாண் பொருட்கள் கண்காட்சியை வேந்தர் விசுவநாதன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    ×