search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "severe suffering"

    • கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி பெண் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
    • கடலூர் மாவட்டம் புவனகிரிைய சேர்ந்தஸ்டெல்லா மேரி. மாற்றுத்திறனாளி

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை என்பதால் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை குறித்து கோரிக்கை மனுக்களை நேரில் வந்து வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றத்திறனாளி திடீரென்று சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர் கடலூர் மாவட்டம் புவனகிரிைய சேர்ந்தஸ்டெல்லா மேரி. மாற்றுத்திறனாளி. பட்டதாரி என்பது தெரிய வந்தது.

    அவர் போலீசாரிடம் கூறும் போது, கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய முதலமைச்சர் இவரது தந்தைக்கு சுய தொழில் செய்வதற்கு பெட்டிக்கடை வழங்கி உள்ளார். இதனை தொடர்ந்து தற்போது மாற்றுத்திறனாளியான நான் கடையை நடத்தி வருகிறேன்.. இந்த நிலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் அனுமதி பெற்ற பிறகு கடையை நடத்த வேண்டும் என உத்தரவிட்டதால் கடந்த 3 மாதமாக வருமானம் இல்லாமல் கடும் அவதி அடைந்து வருகின்றோம். மேலும் 90 வயது எனது தாயார் மிகுந்த அவதி அடைந்து வருகின்றார். ஆகையால் சாலை ஓரத்தில் உள்ள எனது பெட்டி கடைக்கு உரிய அனுமதி வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். என ஸ்கூடெல்லா மேரி கூறினார். அப்போது உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து உரிய தீர்வு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறி போலீசார் அறிவுறுத்தினார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    ×