search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏலம் விடவில்லை"

    • மாளிகைமேடு ஊராட்சியில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரியசித்தேரி உள்ளது.
    • ஒன்றிய குழு அலுவலகம் முன்பு அமர்ந்து கணவர் தென்னரசுடன் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அண்ணா கிராமம் ஒன்றியம் மாளிகைமேடு ஊராட்சியில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரியசித்தேரி உள்ளது. இந்த ஏரி மாளிகை மேடு ஊராட்சிக்கு சொந்தமானது. இங்குள்ள கருவேல மரங்களை அரசு விதிகளுக்கு உட்பட்டுஏலம் நடத்திமரங்களைவெட்டி அகற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு அனுமதி அளித்து இருந்தார். ஏலம் விடாமலே ஏரியிலிருந்து மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக தெரிய வந்தது.இதனை தொடர்ந்து ஒன்றிய கவுன்சிலரும் ஒன்றிய குழு துணை தலைவருமான ஜான்சி ராணி தென்னரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அனுப்பி இருந்தார். அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று காலை அண்ணா கிராமம் ஒன்றிய குழு அலுவலகம் முன்பு அமர்ந்து கணவர் தென்னரசுடன் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்ததும் துணை வட்டார வளர்ச்சிஅலுவலர் திருநாவுக்கரசு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஒன்றிய குழு துணை தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக மரங்களை வெட்டி கடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்என்று அதிகாரிகளிடம் கூறினார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    ×