search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூங்கில்துறைப்பட்டு அருகே ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் போராட்டம்
    X

    மூங்கில்துறைப்பட்டு அருகே ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் போராட்டம்

    • 800-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி பயன் அடைந்து வருகிறார்கள்.
    • ரேஷன் கடை முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    மூங்கில்துறைப்பட்டு அருகே பொரசப்பட்டு மேலப்பாக்கம் புதூர் கிராமத்தில் ரேஷன் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையில் 800-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அத்தியா வசிய பொருட்களை வாங்கி பயன் அடைந்து வருகிறார்கள். இந்நிலையில் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பொருட்கள் வாங்க ரேஷன் கடைக்கு வந்தனர். அப்போது கடை விற்பனையாளர், பொதுமக்களிடம் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் வாங்கும் போது கூடுதலாக சோப்பு உள்ளிட்ட சில பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ரேஷன் கடை முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மூங்கில்துறைப்பட்டு காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவன், தனிப்பிரிவு காவலர் சுந்தர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின் இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    Next Story
    ×