search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணி செய்ய விடாமல் தடுப்பதாக கூறி திருப்பூரில் மாநகராட்சி அதிகாரிகள் தர்ணா போராட்டம்
    X

    மாநகராட்சி அதிகாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    பணி செய்ய விடாமல் தடுப்பதாக கூறி திருப்பூரில் மாநகராட்சி அதிகாரிகள் தர்ணா போராட்டம்

    • 146 ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளது.
    • மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் தடுத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி சார்பில் நொய்யல் ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆண்டிப்பாளையம் வரை சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நொய்யல் கரையோரம் உள்ள ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.நொய்யல் ஆற்றங்கரையோரம் உள்ள சாயப்பட்டறை வீதியில் 146 ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளது. அந்த ஆக்கிரமிப்பு வீடுகளை இடிப்பதற்காக மாநகராட்சி உதவி கமிஷனர் வாசுகுமார், செயற்பொறியாளர் கோவிந்த பிரபாகர் மற்றும் அதிகாரிகள் இன்று காலை சென்றனர்.

    அப்போது ஆக்கிர மிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அந்தப்பகுதியில் உள்ளவர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் தடுத்தனர். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்தனர் . இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டனர். தங்களை பணி செய்ய விடாமல் தடுப்பதாக வும் இது குறித்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரியும் இந்த போராட்டம் நடைபெற்றது. அதிகாரிகள் போரா ட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×