என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கும் அதிகாரிக்கும் இடையே கடும் வாக்குவாதம்
    X

    குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிக்கும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் நடந்த போது எடுத்த படம்.

    விவசாயிகளுக்கும் அதிகாரிக்கும் இடையே கடும் வாக்குவாதம்

    • தர்ணாவில் ஈடுபட்டனர்
    • விவசாய குறைதீர்வு கூட்டம் நடந்தது

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடைபெற்ற விவசாய குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகளுக்கும் அதிகாரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த விவசாயிகள் வந்தவாசி நகர்ப்புற பகுதியியான கோட்டை மூலையில் நிழற்குடை அமைப்பதற்காக பல கூட்டங்களில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை எனக்கோரி நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு நெடுஞ்சாலை துறை அதிகாரி சரியாக பதிலளிக்கவில்லை. இதனால் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் விவசாயிகள் நெடுஞ்சாலை துறை அதிகாரியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.அப்போது அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நியர்குடைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை ெதாடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×