search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bandits lined up"

    • முந்திரி விவசாயம் செய்துகொண்டு வரும் தனலட்சுமி தனது மகன் விக்னேஷ் உடன் வீட்டில் இருந்து வருகிறார்.
    • பீரோவில் இருந்த 110 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே உள்ள புதுக்கூரைப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னதுரை மனைவி தனலட்சுமி(60). சின்னதுரை ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு சுதா, ராஜலட்சுமி, ஜெயலட்சுமி ஆகிய 3 மகள்களும், விக்னேஷ்(27) என்ற மகனும் உள்ளனர். சுதா, ராஜலட்சுமி இருவருக்கும் திருமணம் ஆன நிலையில் ஜெயலட்சுமி மற்றும் விக்னேஷுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. முந்திரி விவசாயம் செய்துகொண்டு வரும் தனலட்சுமி தனது மகன் விக்னேஷ் உடன் வீட்டில் இருந்து வருகிறார். ஜெயலட்சுமி காரைக்காலில் உள்ள தனியார் விவசாய கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த மார்ச் 10- ந் தேதி காலை தனலட்சுமி தனது மகனுடன் தனது விவசாய நிலத்திற்கு சென்று விட்டு மதியம் சுமார் 1 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 110 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்ற னர். இச்சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்த நகை பணத்தை போலீசார் மீட்டு தராததால் வேதனை அடைந்த தனலட்சுமி அவரது மகள் ஜெயலட்சுமி, மகன் விக்னேஷ் ஆகிய 3 பேரும் விருத்தாச்சலம் புதுக்கூரைப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் கடந்த ஜூலையில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இந்நிலையில் திருடு போன நகையை காவல்துறை இன்னும் மீட்டு தராததால் உடனடியாக மீட்டு தரக்கோரி இன்று காலை புதுக்கூரப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த விருத்தாசலம் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான காவல்துறையினர் நகையை மீட்க உடனடியாக நடவடிக்கப்படும் உறுதி கூறியதை எடுத்து அவர்கள் சமாதானம் அடைந்து தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    ×