search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில்  ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தர்ணா போராட்டம்
    X

    போராட்டத்தின்போது ஆசிரியர்கள் கோஷம் எழுப்பி காட்சி.


    தென்காசியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தர்ணா போராட்டம்

    • தென்காசியில் 30 அம்ச வாழ்வாதாரக் கோரிக்கையை வலியுறுத்தி மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.
    • மாவட்டச்செயலாளர் மாரிமுத்து கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 30 அம்ச வாழ்வாதாரக் கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாலை நேர தர்ணா போராட்டம் தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்றது. தர்ணாவிற்கு மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

    மாவட்டச்செயலாளர் மாரிமுத்து வரவேற்புரை யாற்றி கோரிக்கைகள் குறித்தும் விளக்கிப் பேசினார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் துரைசிங், தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில துணைத்தலைவர் சதீஷ்குமார்,தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சட்ட செயலாளர் பிச்சைக்கனி மற்றும் கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள் சிவகுமார், ராஜ்குமார் ,மாணிக்கம் சுதர்சன், மாநில செயற்குழு உறுப்பினர் லட்சுமி,மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் துரை ராஜ், மாடசாமி, மாவட்ட துணைப் பொறுப்பாளர்கள் ராஜன்ஜான் செல்வராஜ், கிருஷ்ணன், ஜேம்ஸ் ஆரோக்கியராஜ். ஜாஹிரா ஆகியோர் சிறப்புரை யாற்றினர். தர்ணா உரையை கன்னியாகுமரி மாவட்ட மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன் விளக்கி பேசினார்.மாவட்ட பொருளாளர் மணிமேகலை நன்றி கூறினார்.இதில் மாநில செயற்குழு, பொதுக்குழு , மாவட்ட துணைப் பொறுப்பாளர்கள் , வட்டார பொறுப்பாளர்கள் உள்பட 350 பேர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×