search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில் கால்நடைகளுடன் விவசாயிகள் தர்ணா போராட்டம்
    X

    விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    உடுமலையில் கால்நடைகளுடன் விவசாயிகள் தர்ணா போராட்டம்

    • ராகல்பாவி மற்றும் ஆர்.வேலூர் இணைப்பு சாலை வரை செல்வதற்கு நிலவியல் பாதை உள்ளதாக கூறப்படுகிறது.
    • விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் அந்த இடத்தை அளக்காமல் திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை அடுத்துள்ள போடி பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சுண்டக்கம்பாளையத்தில் இருந்து ராகல் பாவி மற்றும் ஆர். வேலூர் இணைப்பு சாலை வரை செல்வதற்கு நிலவியல் பாதை உள்ளதாக கூறப்படுகிறது. அந்தப் பாதையை அந்தப் பகுதியை சுற்றி உள்ள விவசாயிகள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது அருகில் உள்ளவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிகிறது.

    இதையடுத்து சுற்றுப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வலியுறுத்தலின் பேரில் அந்த இடத்தை அளப்பதற்கு வருவாய் துறையினர் போலீசாருடன் அங்கு சென்றபோது, அந்த பகுதியில் பட்டா இடத்தில் இருக்கும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் அந்த இடத்தை அளக்காமல் திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.இதைத் தொடர்ந்து அந்த இடத்தை நிலவியல் பாதையாக பயன்படுத்தி வந்த சுமார் 20 விவசாயிகள் மற்றும்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தலைமையில் உடுமலை தாலுகா அலுவலகத்திற்கு ஆடு மாடுகள் உடன் வந்தனர். அவர்கள் அந்தப் பாதையை பயன்பாட்டிற்கு மீட்டு தரக்கோரி தாலுகா அலுவலக வளாகத்தில் தரர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் பிடித்திருந்தனர். ஆடு மாடுகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அங்கு போலீசார் குறிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. தாசில்தார் கண்ணாமணி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழி வேல், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் ,ராஜ் கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கனகராஜ், ஜெகதீசன், பாலதண்டபாணி மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இன்று ஆர். டி. ஓ. ஜஸ்வந்த் கண்ணன் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆடு மாடுகளுடன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    Next Story
    ×