search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Death threats"

    • சிவகாளிமுத்து கடந்த 2020-ம் ஆண்டு திரு.பட்டினம் போலீசில் புகார் அளித்திருந்தனர்.
    • தாதா எழிலரசியை போலீ சார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட பிரபல பெண் தாதா எழிலரசி, கடந்த 2019-ம் ஆண்டு வாஞ்சூர் பகுதியில் உள்ள மறைந்த தொழில் அதிபர் ராமுவின் முதல் மனைவி வினோதாவின் மகன்கன் அஜேஸ் ராமு, சிவகாளி முத்து ஆகியோ ருக்கு சொந்தமான மதுபான கடையை கூலிப்படை யினர் மூலம் தாக்குதல் நடத்தியது, அஜேஷ் ராம் மற்றும் சிவகாளி முத்துவை மிரட்டி மதுபான கடையை எழுதி வாங்கியது தொடர்பாக அஜேஷ் ராம் மற்றும் சிவகாளிமுத்து கடந்த 2020-ம் ஆண்டு திரு.பட்டினம் போலீசில் புகார் அளித்திருந்தனர்.

    அதன் பேரில், பெண் தாதா எழிலரசியை போலீ சார் கைது செய்தனர். அதன் பிறகு ஜாமினில் வெளியே வந்த எழிலரசி, கடந்த சில தினங்களுக்கு முன்பு, கூலிப்படையினரை கொண்டு சிவகாளி முத்து வுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படு கிறது. இந்த கொலை மிரட்டல் தொடர்பாக சிவகாளிமுத்து அளித்த புகாரை தொடர்ந்து, திருப்பட்டினம் போலீசார், நிரவியில் உள்ள சிவகாளி முத்து வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 2 பேர் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • இசக்கிமுத்து என்ற ராஜா என்பவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் பணம் கேட்டு தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தூத்துக்குடி ராஜகோபால்நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து என்ற ராஜா (29) என்பதும், அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் பணம் கேட்டு தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் ராஜாவை கைது செய்தனர். 

    • இதுகுறித்து சந்துருவிடம் கேட்டதற்கு உங்கள் பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறினார்.
    • பெற்றோரை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் பண்ருட்டியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சிறுவத்தூர் திடீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சந்துரு, கூலி தொழிலாளி. இவர் பிளஸ்-2 மாணவியிடம் சென்று ஆசைவார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படு கிறது. இதை அறிந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து சந்துருவிடம் கேட்டதற்கு உங்கள் பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறினார்.

    இதற்கு பெண்ணின் பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சந்துரு பெண்ணின் பெற்றோரை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். அத்துடன் அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு தொடர்ந்து கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து மாணவி யின் பெற்றோர் பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் வள்ளி யிடம் புகார் கொடுத்தனர். இதனையடுத்து கூலி தொழிலாளி சந்துரு மீது மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவிசி தேடி வருகின்றனர்.

    • சந்திரசேகரை வழிமறித்த ஞானவேல், அசிங்கமாக திட்டி தடியால் அடித்ததாக கூறப்படுகிறது.
    • ஆத்திரமடைந்த ஞானவேல், விஜயாவை தடியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பியோடிவிட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி வட்டம் காடாம்புலியூர் அடுத்த கானாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 38). அதே பகுதியை சேர்ந்தவர் ஞானவேல் (35). இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சாலையில் நடந்து சென்ற சந்திரசேகரை வழிமறித்த ஞானவேல், அசிங்கமாக திட்டி தடியால் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த விஜயா (40) என்ற பெண் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார். இதனால் ஆத்திரமடைந்த ஞானவேல், விஜயாவை தடியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பியோடிவிட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காடாம்புலியூர் போலீசார், தப்பியோடிய ஞானவேலுவை தேடி வருகின்றனர்.

    • தியாகதுருகம் அருகே விருகாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமாறன் வக்கீல்.
    • மணிமாறனை ஆபாசமாக திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே விருகாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமாறன் (வயது 31). வக்கீல். இவர் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன்கள் சிட்டிபாபு (21), பிரகாஷ் (23), பிரபு (24) ஆகியோர் மணிமாறனை ஆபாசமாக திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வக்கீல் மணிமாறன் கொடுத்த புகாரின் பேரில் சிட்டிபாபு, பிரகாஷ், பிரபு ஆகிய 3 பேர் மீதும் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    • குள்ளஞ்சாவடியில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த போதை வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • ஆனந்தன் என்பவர் போலீஸ் கட்டுப்பட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளது தெரிய வந்தது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த குள்ளஞ்சாவடி பகுதியிலிருந்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் வந்தது. அதில் பேசிய நபர் தனது தாயை ஒருவர் அடிப்பதாக புகார் செய்தார். இதனை தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து குள்ளஞ்சாவடி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    அதன் பேரில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தார். அப்போது ஆனந்தன் என்பவர் போலீஸ் கட்டுப்பட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளது தெரிய வந்தது. ஆனந்தன் சகோதரர் கலையரசன் குடிபோதையில் இருந்தார். இதனால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதம் , கலையரசனை காலையில் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என தெரிவித்து விட்டு சென்றார். அப்போது குடிபோதையில் இருந்த கலையரசன் மோட்டார் சைக்கிளில் சென்று சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதத்தை பணி செய்ய விடாமல் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து கலையரசனை கைது செய்தனர்.

    • கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.
    • அருப்புக்கோட்டை அனை த்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பாலசரஸ்வதி (வயது 32). இவருக்கும் சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    திருமணத்தின்போது 15 பவுன் நகை, ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு சரவணன், மனைவியை அடிக்கடி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதை யடுத்து பாலசரஸ்வதி தனது தாய்வீட்டுக்கு வந்துவிட்டார். பின்னர் சரவணன் சமரசம் பேசி மனைவியை அழைத்து சென்றார். இதற்கிடையில் மீண்டும், சரவணன் மனைவி யிடம் கூடுதலாக வரதட்சணை கேட்க பாலசரஸ்வதி தனது பெற்றோர் வீட்டில் இருந்து 14 பவுன் நகையை வாங்கி கொடுத்துள்ளார்.

    ஆனால் சரவணன் மனைவியை அடித்து துன்புறுத்தியதோடு, மாமனார் குமார் தகாத முறையில் நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் பாலசரஸ்வதிக்கு கொலைமிரட்டல் விடுத்தனர்.

    இதுதொடர்பான வழக்கு சென்னை மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. பின்னர் மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி விருதுநகர் மாவட்ட கோர்ட்டுக்கு வழக்கு மாற்றப்பட்டது. மேலும் இதுதொடர்பாக அருப்புக்கோட்டை அனை த்து மகளிர் போலீசார் சரவணன், அவரது பெற்றோர் குமார்- ராேஜஸ்வரி, உறவினர் பொன்மாரி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து உள்ளனர்.

    • பணம்-நகைகளை மோசடி செய்து பெண்ணுக்கு கொலை மிரட்டிய தந்தை-மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ஆலங்குளம் டி.என்.சி. காலனியை சேர்ந்தவர் சுகுணாதேவி(வயது37). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்தநிலை யில் கணவரின் நண்பரான பால்பாண்டி என்பவருடன் பழகத் தொடங்கினார். அவர் தான் ஓட்டல், டிராவல்ஸ் நடத்தி வரு வதாக சுகுணா தேவியிடம் கூறியுள்ளார். மேலும் அவரது குழந்தை களிடம் அன்பாக பழகி யுள்ளார்.

    இதைப்பார்த்து அதை நம்பிய சுகுணாதேவி அவருடன் சேர்ந்து வாழ தொடங்கினார். அவரது கணவரின் இறப்புக்காக கிடைத்த ரூ.10 லட்சம் மற்றும் நகைகளை பால்பாண்டி தனது தொழிலுக்காக கேட்டு வாங்கினார்.

    மேலும் சுகுணா தேவியின் வீட்டில் உள்ள பொருட்க ளையும் எடுத்துச் செல்ல தொடங்கினார். இதனால் சந்தேகமடைந்த சுகுணாதேவி தனது பணம், நகைகளை திருப்பிக் கொடுக்குமாறு பால்பா ண்டி யிடம் கேட்டு வந்தார். ஆனால் பால்பாண்டி பணம், நகைகளை கொடுக் காமல் தட்டிக்களித்து வந்தார்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று சுகுணாதேவியின் வீட்டுக்கு பால்பாண்டி மற்றும் அவரது தந்தை முருகன் வந்தனர். அப்போது அவர்கள் சுகுணாதேவியை அவதூறாக பேசி பணம், நகைகளை திருப்பி கேட்டால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டிச்சென்றதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சுகுணாதேவி ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜரினாபீயிடம் சலிமா ரூ.10 லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது.
    • சலிமா மற்றும் அவரது மகள் நிஷா ஆகியோர் தேவபாண்டலம் வந்து ஜரினாபீயை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே தேவபாண்டலத்தை சேர்ந்தவர் கமருதீன் மனைவி ஜரினாபீ (வயது51). இவரின் உறவினரான தியாகதுருகம் அன்சர் மனைவி சலிமா (வயது42) என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு ரூ.10 லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஜரினாபீ செல்போன் மூலம் சலிமாவிடம் வாங்கிய கடனை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சலிமா மற்றும் அவரது மகள் நிஷா ஆகியோர் தேவபாண்டலம் வந்து ஜரினாபீயை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சலீமா, நிஷா ஆகியோர் மீது சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • திருமலை தனது மனைவி மற்றும் மகனை சரமாரியாக கட்டையால் தாக்கினார்.
    • மனைவி மணலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    திருவொற்றியூர்:

    மணலியை சேர்ந்தவர் திருமலை (45). சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமலையின் மனைவி அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் திருமலை தனது மனைவியிடம் அவரது டெய்லர் கடைக்கு அடிக்கடி வரும் இளம்பெண்களை தனது உல்லாசத்திற்கு ஏற்பாடு செய்து தருமாறு கேட்டு வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்றும் இதே போல் கேட்டு திருமலை மனைவியிடம் ரகளைசெய்து அடித்து துன்புறுத்தினார்.

    இதனை வீட்டில் இருந்த அவரது மூத்த மகன் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த திருமலை தனது மனைவி மற்றும் மகனை சரமாரியாக கட்டையால் தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார்.

    இது குறித்து திருமலையின் மனைவி மணலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருமலையை கைது செய்தனர்.

    • கடந்த பிப்ரவரி மாதம் தனது அறையில் அளவுக்கு அதிகமாக ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
    • திடீரென்று காவலர் பிரித்விராஜை போலீஸ் பணியை செய்யவிடாமல் தடுத்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மத்திய சிறையில் போலீசாரை கைதி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கடலூர் அடுத்த கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு சுமார் 800-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அவர்கள் செய்த குற்றத்திற்காக அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் சென்னை எண்ணூரை சேர்ந்த பிரபல ரவுடியான எண்ணூர் தனசேகர் கடந்த ஒரு வருட காலமாக கைதியாக உள்ளார். இவர் மீது கொலை வழக்குகள் உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இவரது அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் சிறை உதவி அலுவலர் மணிகண்டனுக்கும் இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த முன்விரோ தம் காரணமாக எண்ணூர் தனசேகர், மணிகண்டன் குடும்பத்தினரை உயிருடன் எரித்து கொலை செய்ய முயற்சிதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சிறை காவலர் ஒருவர் உடந்தையாக இருந்ததாகவும் கூறி அவரையும் கைது செய்தனர்.

    கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மீண்டும் எண்ணூர் தனசேகர் அறையில் இருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் அவர் கடலூர் மத்திய சிறையில் உள்ள வெளிச்சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவருக்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் தனது அறையில் அளவுக்கு அதிகமாக ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதன் பிறகு அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக எண்ணூர் தனசேகரன் ஆஜர்ப்படுத்தப்பட்டார். பின்னர் மாலை மீண்டும் சிறை வளாகத்திற்கு எண்ணூர் தனசேகரனை போலீசார் அழைத்து வந்தனர். இதனையடுத்து இன்று காலை கடலூர் மத்திய சிறை அலுவலர் தமிழ்மாறன் உத்தரவின் பேரில் சிறப்பு சோதனை குழுவில் 2-ம் நிலை காவலராக பணிபுரியும் பிரித்விராஜ் (வயது 28) கைதி எண்ணூர் தனசேகர் அடைக்கப்பட்டுள்ள வெளிச்சிறை எண் 1-க்கு சென்று செல்போன் ஏதும் இருக்கிறதா? என்று சோதனை செய்தார்.

    அப்போது கைதி எண்ணூர் தனசேகர், காவலர் பிரித்விராஜிடம் நான் இருக்கும் அறையை யாரும் சோதனை செய்யக் கூடாது. அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன் எனக் கூறி போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். பின்னர் திடீரென்று காவலர் பிரித்விராஜை போலீஸ் பணியை செய்யவிடாமல் தடுத்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த காவலர்கள் பிரித்திவிராஜை மீட்டு உடனடியாக சிறை வளாகத்தில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் எண்ணூர் தனசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூர் மத்திய சிறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கோவிந்தம்மாளுக்கும் ராஜ்குமாருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
    • ராஜ்குமார், கோவிந்தம்மாளை அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (வயது 56). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் முருகன் மகன் ராஜ்குமார் (35) என்பவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று கோவிந்தம்மாள் வீட்டு வாசலை பெருக்கிக் கொண்டிருந்த போது அங்கு வந்த ராஜ்குமார், கோவிந்தம்மாளை அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கோவிந்தம்மாள் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.

    ×