search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Death threats"

    • ரிஷிவந்தியம் அருகே முன்விரோத தகராறில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • சம்பவத்தன்று இருவருக்கும் பொதுவான வயலில் உள்ள தென்னை மரத்தில் தண்டபாணி தேங்காய் பறித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    ரிஷிவந்தியம் அருகே பாசார் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி(வயது38). இவருக்கும், இவரது அண்ணன் கந்தசாமி(40) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் பொதுவான வயலில் உள்ள தென்னை மரத்தில் தண்டபாணி தேங்காய் பறித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கந்தசாமி, மற்றும் அவர் மனைவி முனியம்மாள், மகன் ஏழுமலை(21) ஆகியோர் தண்டபாணியின் வீட்டு மின் இணைப்பை துண்டித்து அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் தண்டபாணி கொடுத்த புகாரின் பேரில் கந்தசாமி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • புவனகிரி அருகே நர்சிங் மாணவியை ஏமாற்றிய வாலிபர் கைதுசெய்யப்பட்டார்.
    • பழனிவேல் மகன் வீரமுத்துவை பார்ப்பதற்காக, எறும்பூரை சேர்ந்த ராயர் மகன் அருண் அடிக்கடி வந்து செல்வார்.

    கடலூர்:

    புவனகிரி அடுத்த பெரியநெல்லிகொல்லை அடுத்த துறிஞ்சிகொல்லை  கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை மகள் சிந்து (வயது 19). இவர் வடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். இவர் வசிக்கும் வீதியில் உள்ள பழனிவேல் மகன் வீரமுத்துவை பார்ப்பதற்காக, எறும்பூரை சேர்ந்த ராயர் மகன் அருண் அடிக்கடி வந்து செல்வார். இவருடன் சிந்துக்கு பழக்கம் ஏற்பட்டது. இதில் இருவரும் அடிக்கடி போனில் பேசியுள்ளனர். சிந்துவை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறிய அருண், சிந்துவுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார்.

    இதனையடுத்து, அருணுக்கும் வேறொரு பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்தது. இதனை யறிந்த சிந்து மனஉலைச்சலில் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொ லைக்கு முயன்றார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சிந்து, நடந்த விஷயங்களை தனது பெற்றோரிடம் கூறினார். சிந்துவின் பெற்றோர், அருண் வீட்டிற்கு சென்று, தனது மகளை திருமணம் செய்துகொள்ள கேட்டுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த அருண் மற்றும் குடும்பத்தார், சிந்து மற்றும் அவரது பெற்றோரை அசிங்கமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இது தொடர்பாக சிந்து மற்றும் அவரது பெற்றோர் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி, சிந்துவை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய அருண் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

    • இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள முனியப்பன் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றார்.
    • அப்போது ஜோதியின் கழுத்தில் இருந்த 4 பவுன் செயின் காணாமல் போனது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே புது உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையன் மனைவி ஜோதி (வயது 30). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள முனியப்பன் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றார். அப்பொழுது அங்கிருந்த அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன்கள் சுரேந்திரன், வேலுமணி, ரத்தினன் மகன் ரமேஷ், சாமிதுரை மகன் செல்லமுத்து ஆகியோர் ஜோதியை பார்த்து கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டு கொள்ளாமல் அவர் வீடு திரும்பினார்.

    ஆனால், 4 பேரும் ஜோதியை பின்தொடர்ந்து வந்தனர். பின்னர், அவரது வீட்டுக்கு சென்று ஜோதியை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அப்போது ஜோதியின் கழுத்தில் இருந்த 4 பவுன் செயின் காணாமல் போனது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் என தெரிகிறது. இது குறித்து ஜோதி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • இளம்பெண்-குழந்தைகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்குப்பதிந்துள்ளனர்.
    • அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி கார்த்திகேயன் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    வெம்பகோட்டை அருகே உள்ள சிவலிங்கா புரத்தை சேர்ந்தவர் விமலா(வயது34). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் கடந்த 2012ம் ஆண்டு எனக்கும், தென்காசி மாவட்டம் குறிஞ்சா குளத்தை சேர்ந்த கார்த்தி கேயன்(43) என்பவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது 55 பவுன் நகை, ரூ.1 லட்சம் சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது.

    இந்தநிலையில் திடீரெ ன்று கணவர் விவாகரத்து பத்திரத்தில் கையெ ழுத்திடுமாறு வற்புறுத்தி யுள்ளார். இதற்கு மறுக்கவே, கூடுதலாக ரூ.5 லட்சம் ரொக்கம், 50 பவுன் நகை கொண்டு வருமாறு கார்த்திகேயன் கூறியுள்ளார். இதற்கும் மறுத்ததால் துன்புறுத்தி னார்.

    இது தொடர்பான பிரச்சினையில் கணவர் மற்றும் அவரது பெற்றோர் மோகன்-கிருஷ்ணவேணி ஆகியோர் தகராறு செய்து எனக்கும் , என் குழந்தைகளுக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனை விசாரித்த நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கு மாறு போலீசாருக்கு உத்த ரவிட்டது. அதன் அடிப்படையில் ராஜ பாளையம் அனைத்து மகளிர் போலீசார் விசா ரணை நடத்தி கார்த்திகேயன் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீபாவளி சீட்டு பணம் கட்டியதற்குண்டான பொருட்களை வனிதா வழங்கவில்லை.
    • ரம்யாவை ரூபன் மானபங்கம் படுத்தியதாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் வனிதா. இவரிடம் கடலூர் சொத்திக்குப்பத்தை சேர்ந்த ரம்யா, ராணி ஆகியோர் கடந்த 2022-ம் ஆண்டு தீபாவளி சீட்டு கட்டியுள்ளனர். தீபாவளி சீட்டு பணம் கட்டியதற்குண்டான பொருட்களை வனிதா வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ரம்யா, ராணி ஆகியோர், தங்கள் கட்டிய பணத்தை வனிதாவிடம் கேட்டனர். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று ரம்யா, ராணி ஆகியோர் பணத்தைக் கேட்டு வனிதாவிடம் மீண்டும் சென்றனர். அப்போது 2 பேரையும் வனிதா, ரூபன் ஆகியோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், ரம்யாவை ரூபன் மானபங்கம் படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ரம்யா, ராணி ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து தேவனாம்பட்டினம் போலீசார் வனிதா, ரூபன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தினமும் நிலத்திற்கு செல்லும் சிவக்குமாரை பார்த்து டிப்டாப் ஆசாமி புன்னகைத்தார்.
    • இதனை நம்பிய சிவக்குமார், தனக்கு வனத்துறையில் வேலை வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சிவக்குமார் (வயது 42). ஆரம்ப கல்வி மட்டுமே பயின்றவர். விவசாயம் செய்து வருகிறார். இவருடைய நிலத்திற்கு செல்லும் வழியில் வனத்துறை அலுவலகம் உள்ளது. இங்கு ஒரு டிப்டாப் ஆசாமி தினமும் நின்று கொண்டு அங்குள்ள வனத்துறை ஊழியர்களிடம் பேசிக் கொண்டிருப்பார். இதனை பார்த்துக் கொண்டு தினமும் நிலத்திற்கு செல்லும் சிவக்குமாரை பார்த்து டிப்டாப் ஆசாமி புன்னகை த்தார். பதிலுக்கு புன்ன கைத்த சிவக்குமாரிடம் டிப்டாப் ஆசாமி நாள டைவில் நண்பராகி விட்டார்.திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தண்டராம்பட்டை சேர்ந்த குணசேகரன் மகன் சக்தி (38) என்பது சிவக்குமாருக்கு தெரியவந்தது. இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து விவசாயம் குறித்து பேசிவந்தனர். விவசாயம் செய்வதை விட்டுவிட்டு, வனத்துறைக்கு வேலைக்கு செல்கிறாயா என்று சிவக்குமாரிடம் டிப்டாப் ஆசாமி சக்தி கேட்டுள்ளார். தனக்கு வனத்துறை உயர் அதிகாரிகள் மிகவும் நெருக்கம், அதனால் தான் இங்குள்ளவர்கள் எனக்கு மறியாதை அளிக்கின்றனர் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய சிவக்குமார், தனக்கு வனத்துறையில் வேலை வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.

    ரூ.5 லட்சம் கொடு, அதனை வனத்துறை அதிகாரிடம் கொடுத்து உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று டிப்டாப் ஆசாமி சக்தி, சிவக்கு மாரிடம் கேட்டுள்ளார். இதனை நம்பிய சிவக்குமார், பல்வேறு இடங்களில் கடன் வாங்கி ரூ.5 லட்சத்தை சக்தியிடம் கடந்த மே மாதம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கி சென்றது முதல் சிவக்கு மாரை பார்க்க சக்தி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிவக்குமார், சக்தியை தேடி கண்டுபிடித்தார். உனக்கு வேலை வாங்கவே அலைந்து கொண்டி ருக்கிறேன், செப்டம்பரில் உனக்கு வேலை கிடைக்கும் என்று கூறிய சக்தி, சிவக்குமாரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சக்தியை தேடி சிவக்குமார் சென்றார். அவர் அளித்த பதில் சிவக்குமாருக்கு திருப்தி அளிக்காததால், எனக்கு வனத்துறை வேலை வேண்டாம், பணத்தை திருப்பிக் கொடு என்று கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சக்தி, சிவக்குமாரை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிவக்குமார், இது குறித்து சங்கராபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெ க்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

    • மது போதையில் தினமும் ரேகாவிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
    • வழக்கு பதிவு செய்து துரைசாமியை கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பாண்டியன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த முருகன். அவரது மனைவி ரேகா (வயது 30) இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த துரைசாமி (50) என்பவர் மது போதையில் தினமும் ரேகாவிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று ரேகாவை துரைசாமி கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் ரேகா புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து துரைசாமியை கைது செய்தனர். பின்னர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ரூ.1 லட்சம் மதிப்பிலான முந்திரி கொட்டைகளை வாங்கிக் கொண்டு அதற்கான தொகையை 1 ஆண்டு காலமாக தராமல் இருந்து வந்துள்ளார்.
    • 4 பவுன் தங்க நகைகளை பிடுங்கிக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த நரியன்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கேசவன். இவரது மகன் தேவநாதன் (36)கமிஷனுக்கு முந்திரி கொட்டை வாங்கி உடைத்து முந்திரி பயிர் வியாபாரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர்காடாம்புலியூர் என்.வி.கேஷ்யூஸ் கம்பெனி உரிமையாளர்களான சண்முகம்,கார்த்தி ஆகியோரிடம் ரூ.1 லட்சம் மதிப்பிலான முந்திரி கொட்டைகளை வாங்கிக் கொண்டு அதற்கான தொகையை 1 ஆண்டு காலமாக தராமல் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று தேவநாதன்,வீரசிங்கண் குப்பத்தை சேர்ந்த ஞானசேகர் என்பவரிடம் 496 கிலோ முந்திரிப் பயிரை விற்பனைக்காக கொண்டு வந்து கொடுத்தபோது எதிரிகள் பின் தொடர்ந்து வந்து தேவநாதனை தாக்கி அவர்கள் கொண்டு வந்த வாகனத்தில் தேவநாதனையும் முந்திரி பயிரையும் ஏற்றிக்கொண்டு காடாம்புலியூர் கம்பெனிக்கு கொண்டு சென்று முந்திரி பயிரை பிடுங்கிக் கொண்டு தேவநாதனை தாக்கினர்.மேலும் அவரது தம்பி தேவேந்திரனை வரவழைத்து அவரையும் தாக்கி அவரிடம் இந்த செல்போன் 4 பவுன் தங்க நகைகளை பிடுங்கிக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்துகாடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர்ராஜா தாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தடியால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த னர்.
    • சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அடுத்த சி.மெய்யூர் பிள்ளை யார் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெமினி (வயது 33). செங்கல் சூளை தொழிலாளி. இவரது வீட்டின் எதிரில் 3 சென்ட் இடம் உள்ளது. இவரது பெரியப்பா கண்ணன் (60), இந்த 3 சென்ட் இடத்தில் தனக்கும் பங்கு இருப்பதாக கேட்டுள்ளார்.

    இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதை யடுத்து கண்ணன், அவரது மனைவி லட்சுமி (50), மகன் அய்யப்பன் (27) ஆகியோர் சேர்ந்து ஜெமினி யை தடியால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த னர். தலையில் பலத்த காயமடைந்த ஜெமினி, திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டி யம்பாக்கம் அரசு மருத்தவ மனையில் அனுமதிக்கப்ப ட்டுள்ளார். இது குறித்த புகாரின் அடிப்படையில் திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஜெமினியை தாக்கிய கண்ணன், லட்சுமி, அய்யப்பன் ஆகியோ ரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    • மணிபாலன், முருகேசன் என்பவரும் சமையல் வேலை செய்து வருகின்றனர்.
    • மணி பாலன் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த காரணப்பட்டை மணிபாலன். இவரும் முருகேசன் என்பவரும் சமையல் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் மணிபாலன், முருகேசனை தவறாக பேசியதாக கேள்விப்பட்டு அவரது வீட்டுக்கு தனது நண்பர்களுடன் சென்று உள்ளார். பின்னர் முருகேசன் மற்றும் அவரது நண்பர்கள் மணி பாலன் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் நிலையத்தில் ரமணி கொடுத்த புகாரின் பேரில் முருகேசன், நாகராஜன், புருஷோத்தமன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர்.

    • ஏழுமலை மனைவி பாஞ்சாலை என்பவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
    • கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே சோமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையபெருமாள் (வயது 45). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மனைவி பாஞ்சாலை என்பவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இளையபெருமாளின் மனைவி மணிமேகலை, சம்பவத்தன்று பாஞ்சாலை யிடம் வீட்டுமனை சம்பந்தமாக பேசியுள்ளார். இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது பாஞ்சாலை அவரது மகன்கள் முருகன், அன்பழகன், சிவா ஆகியோர் சேர்ந்து மணிமேகலை மற்றும் அவரது கணவர் இளையபெருமாளை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதில் காயமடைந்த மணிமேகலை, இளைய பெருமாள் ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது குறித்து மணிமேகலை கொடுத்த புகாரின் அடிப்படையில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அன்பழகன் (25) என்பவரை கைது செய்தனர்.

    • தலையில் கொடுவாள் கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைப் பாண்டியன் வழக்கு பதிவு செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த தெற்கு மேல்மாம்பட்டு செட்டி தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி மஞ்சுளா(47) இவர்த னக்கு சொந்தமான இடத்தில் குடிநீர் பைப்பு போடும்போது அதே பகுதியை சேர்ந்த மணி வண்ணன், பாலமுருகன், வசந்தி ஆகியோர் எங்களுக்கு பங்கு உண்டு என்று கூறி குடிநீர் பைப் போடும் பணியை தடுத்து நிறுத்தி மஞ்சுளாவின் மகன் விக்னேசை அசிங்கமாக திட்டி தலையில் கொடுவாள் கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து காடாம்புலியூர் போலீசில் மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைப் பாண்டியன் வழக்கு பதிவு செய்து மணிவண்ணன், பால முருகன், வசந்தி ஆகியோ ரை தேடி வருகின்றனர்.

    ×