search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வலைவீச்சு"

    • வாலிநோக்கம்-கீழமுந்தல் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • போலீசார் லாரியை சோதனையிட்ட போது 70 மூடைகளில் 30 கிலோ எடையுள்ள பீடி இலைகள் இருப்பது தெரிய வந்தது.

    சாயல்குடி:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, மாத்திரைகள், பீடி இலைகள், தங்கம் உள்ளிட்டவை அடிக்கடி கடத்தப்பட்டு வருகிறது.

    மேலம் இலங்கையில் இருந்து ராமநாதபுரத்திற்கு சட்ட விரோதமாக கடத்தல்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்க கடலோர காவல்படை போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கத்தில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்த இருப்பதாக கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வாலிநோக்கம்-கீழமுந்தல் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு லாரியை போலீசார் மறித்தனர். உடனே அதில் இருந்த டிரைவர் உள்பட சிலர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பினர். தொடர்ந்து போலீசார் லாரியை சோதனையிட்ட போது 70 மூடைகளில் 30 கிலோ எடையுள்ள பீடி இலைகள் இருப்பது தெரிய வந்தது. அதனையும், கடத்த பயன்படுத்தப்பட்ட சரக்கு லாரியையும் பறிமுதல் செய்த போலீசார் கடத்த முயன்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வாலிநோக்கம் கடலோர காவல்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது யார்? என்பது குறித்து தப்பியோடிய நபர்களையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • தஞ்சையில் ஒரே நாளில் நடந்த இரண்டு கொள்ளை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் ஒரேநாளில் ஆசிரியை, தபால் ஊழியர் வீடுகளின் கதவை உடைத்து நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அதன் பற்றிய விவரம் வருமாறு ;-

    தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி.காலனி கே.எம்.ஏ. உடையார் நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் சென்னையில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 46). இவர் பொய்யுண்டார் கோட்டையில் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று மகேஸ்வரி வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றார். மாலையில் வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து 19 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதேப்போல் தஞ்சை விளார்ரோடு நியுபாத்திமா நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி சுமதி (46). இவர் தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி வளாகத்தில் உள்ள தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சிய டைந்தார். பதறியடித்து பார்த்தபோது பீரோவை உடைத்து 12 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் மகேஸ்வரி, கோமதி தனி தனியாக அளித்த புகார்களின் பேரில் தமிழ்பல்கலைக்கழகம் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரது வீடுகளிலும் ஒரே கும்பல் கொள்ளையடித்தனரா ? அல்லது வேறு வேறு கும்பல் கொள்ளையடித்தனரா ? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. தஞ்சையில் ஒரே நாளில் நடந்த இரண்டு கொள்ளை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த கந்தம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சசிகலா (வயது 33) .இவரும் அதே ஊரை சேர்ந்த பாஸ்கர் மனைவி தேவியும் கடந்த 16-ந் தேதி கந்தம்பாளையம் மீன் மார்க்கெட் அருகில் மகளிர் சுய உதவிக் குழு பணம் சேமிப்புதொடர் பாக கடன் பெற்றது குறித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இவர்களுக்குள்வாய்தகராறுஏற்பட்டது.

    இருவருக்கும் கடும் வாக்கு வாதம் நடந்தது. அப்போது மீன் வெட்டிக் கொண்டிருந்த தேவியின் கணவர் பாஸ்கரன் சசிகலாவைஅசிங்கமாக திட்டி கையில் வைத்திருந்த மீன் வெட்டும் கத்தியால் சசிகலாவை வெட்ட வந்தபோது சசிகலாவின் கணவர் முருகன் தடுத்ததில் முருகனின் இடது கையில் கத்தி பட்டது.இதில் காயம் அடைந்த முருகனை அவரதுமனைவிசசிகலா அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்ற போது பாஸ்கரின் மனைவி தேவி காலால் எட்டி உதைத்து கையில் வைத்திருந்த ஐஸ் உடைக்கும் கட்டையால் சசிகலாவை அடித்து மிரட்டினார். இதனால் காயமடைந்த சசிகலா அவரது கணவர் முருகன்ஆகியோர் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில்சிகிச்சை பெற்றனர்.இதுகுறித்து சசிகலா பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில்பாஸ்கர் மற்றும் பாஸ்கரின் மனைவி தேவி மீது வழக்கு பதிவு செய்து பண்ருட்டி போலீசார்விசாரித்து வருகின்றனர்.

    • போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • நெல்லை-அம்பை சாலையில் வணிக வளாகங்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    நெல்லை:

    கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தையை சேர்ந்தவர் ஜூலியஸ்குமார் (வயது41). கட்டிட தொழிலாளி.

    இவர் நெல்லை மாவட்டம் மேல திடியூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்று வரும் கட்டிட பணிக்காக அங்கே தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். அவருடன் மேலும் சில தொழிலாளர்களும் பணியாற்றி வந்தனர்.

    இந்நிலையில் ஜூலியஸ்குமார் இன்று காலை அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் கல்லூரி வளாகத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இது குறித்து தகவலறிந்ததும் முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஜூலியஸ்குமாருக்கும், அவருடன் வேலை பார்த்து வந்த சக ஊழியர்கள் 3 பேருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடந்தது. அப்போது கல்லூரி வளாகத்தின் ஒரு பகுதியில் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் கிடந்தது. அதனை மோப்ப நாய் கவ்வி எடுத்தது.

    அதனை போலீசார் கைரேகை நிபுணர்களிடம் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் நெல்லை-அம்பை சாலையில் வணிக வளாகங்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அதில் சந்தேகப்படும் படியான யாருடைய நடமாட்டமும் இல்லை. எனவே கொலையாளிகள் கல்லூரியின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதி வழியாக தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    அதன்பேரில் கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • பெற்றோர் சிறுமியை தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் சேர்த்தனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் பெருமாள்சேரியை சேர்ந்த ஊர்த்தடியான் என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த பெற்றோர் சிறுமியை தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் சேர்த்தனர்.

    இந்த நிலையில் விடுமுறைக்கு சிறுமி ஊருக்கு வந்தார். திருவண்ணாமலை கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றார். அப்போது அங்கு வந்த ஊர்த்தடியான் சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சிறுமியின் தந்தை ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து ஊர்த்தடியானைதேடி வருகின்றனர்.

    • கணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • தலைமறைவாக உள்ள இளையராஜாவை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவரது மனைவி தேவசுமதி. இவர்களுக்கு திருமணமாகி 17 வருடம் ஆகிறது. ஒரு மகன், மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் தேவசுமதிக்கு முடித்தலை பகுதியைச் சேர்ந்த இளைய ராஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதாலாக மாறியது. இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய தேவசுமதி 4 வருடங்கள் இளையராஜாவுடன் வசித்து வந்துள்ளார்.

    அவரை தேடி கண்டு பிடித்த கணவர், குழந்தை கள் வளர்ந்துவிட்டதால் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அதை ஏற்று தேவசுமதியும் மீண்டும் வீட்டுக்கு வந்தார். ஆனால் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார்.

    இதனை கணவர் கண்டித்துள்ளார். சம்பவத்தன்றும் தேவசுமதி செல்போனில் பேசி கொண்டிருந்தார். அவரிடமிருந்து செல்போனை கணவர் வாங்கினார். அப்போது போனில் பேசியது இளையராஜா என தெரியவந்தது.

    தனது மனைவியுடன் தொடர்பை கைவிடுமாறி கூறி அவரை கணவர் கண்டித்துள்ளார். இந்த நிலையில் அங்குள்ள சர்ச்சின் அருகே ஜோசப் சென்று கொண்டிருந்த போது இளையராஜா அவரை வழிமறித்து அரிவா ளால் வெட்டியுள்ளார்.

    அதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் திரண்டதால் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார். அரிவாள் வெட்டில் காயமடைந்த ஜோசப் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள இளையராஜாவை தேடி வருகின்றனர்.

    • தலையில் கொடுவாள் கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைப் பாண்டியன் வழக்கு பதிவு செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த தெற்கு மேல்மாம்பட்டு செட்டி தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி மஞ்சுளா(47) இவர்த னக்கு சொந்தமான இடத்தில் குடிநீர் பைப்பு போடும்போது அதே பகுதியை சேர்ந்த மணி வண்ணன், பாலமுருகன், வசந்தி ஆகியோர் எங்களுக்கு பங்கு உண்டு என்று கூறி குடிநீர் பைப் போடும் பணியை தடுத்து நிறுத்தி மஞ்சுளாவின் மகன் விக்னேசை அசிங்கமாக திட்டி தலையில் கொடுவாள் கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து காடாம்புலியூர் போலீசில் மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைப் பாண்டியன் வழக்கு பதிவு செய்து மணிவண்ணன், பால முருகன், வசந்தி ஆகியோ ரை தேடி வருகின்றனர்.

    • அங்கு கார் ஒன்று நீண்ட நேரமாக சாலையோரம் நின்று இருந்தது.
    • கர்நாடகாவில் இருந்து குட்கா கடத்தி வந்த போது டயர் பஞ்சரானதால் டிரைவர் மற்றும் அதில் வந்தவர்கள் காரை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டது தெரியவந்தது.

    காரிமங்கலம், 

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் நேற்று காலை செல்ல மாரம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு கார் ஒன்று நீண்ட நேரமாக சாலையோரம் நின்று இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரில் சோதனை செய்தனர்.

    அதில் தடை செய்யப்பட்ட குட்கா மூட்டை மூட்டையாக இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். கர்நாடகாவில் இருந்து குட்கா கடத்தி வந்த போது டயர் பஞ்சரானதால் டிரைவர் மற்றும் அதில் வந்தவர்கள் காரை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் கார் மற்றும் மூட்டைகளில் இருந்த ரூ.2.65 லட்சம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்தனர்.

    குட்கா கடத்தல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவர் குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    • மருத்துவக் கல்லூரி சாலை 4-வது கேட் அருகே வேனை நிறுத்தி வைத்து விட்டு வெளியே சென்றார்.
    • திரும்பி வந்து பார்த்த போது வேனை காணவில்லை

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள நீலகிரி அருள் பிரகாசம் நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் ( வயது 43).

    இவர் தனது டூரிஸ்ட் வேனை மருத்துவக் கல்லூரி சாலை 4-வது கேட் அருகே நிறுத்தி வைத்து விட்டு வெளியே சென்றார்.

    திரும்பி வந்து பார்த்தபோது டூரிஸ்ட் வேனை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழ்ச்செல்வன் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து அவர் மருத்துவக் கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொ ண்டனர்.

    முதல் கட்ட விசாரணையில் புதுக்கோட்டை காந்திநகர் பகுதியை சேர்ந்த தினேஷ் ( 19 ) என்பவர் வேனை திருடி சென்றது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து தினேஷை போலீசார் தேடி வருகின்றனர். 

    • மாதம் 2 முறை கடையில் உள்ள நகைகளை சரி பார்ப்பது வழக்கம்.
    • நகை வாங்குவது போல் கடைக்கு வந்து, அரை பவுன் தங்க மோதிரத்தை திருடி சென்றது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    காரைக்கால் புதுத்துறையை சேர்ந்தவர் சித்ரா. இவர், காரைக்கால் மாதா கோவில் வீதியில் உள்ள நகைக்கடையில் வேலை செய்து வருகிறார். கடை உரிமையாளர் மற்றும் இவரது மகன் ஆகியோர் மாதம் 2 முறை கடையில் உள்ள நகைகளை சரி பார்ப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த 10-ந் தேதி நகைகளை சரிபார்த்து விட்டு நேற்று முன்தினமும் சரி பார்த்தனர். அப்போது, அரை பவுன் தங்க மோதிரம் குறைவது தெரியவந்தது.

    மோதிரம் குறைவதால் கடையில் உள்ள சி.சி.டிவி கேமரா பதிவுகளை பார்த்தனர். அப்போது, கடையில் இருந்த சித்ராவிடம், 45 வயது மதிக்கத்தக்க நபரும், ஒரு பெண்ணும் நகை வாங்குவது போல் கடைக்கு வந்து, அரை பவுன் தங்க மோதிரத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து திருடி சென்ற நபர்களை தேடி வந்த நிலையில் மோதிரத்தை திருடிசென்ற திருவாரூர் அய்யம்பேட்டையைச் சேர்ந்த தனலட்சுமி (வயது 45) நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் புருசோத்தமன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இவருடன் வந்த குபேரனை போலீசார் தேடி வருகின்றனர்.

    • தினேஷ் வேலை தேடி கோயம்புத்தூருக்கு சென்றார்.
    • உள்ளே சென்று பார்த்த போது பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மகாசக்தி நகரை சேர்ந்தவர் தினேஷ் (வயது 32). இவரது மனைவி பிரியா (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக, தினேஷ் வேலை தேடி கோயம்புத்தூருக்கு சென்றார். இதனால் பிரியா மற்றும் அவரது குழந்தைகள், பக்கத்து தெருவில் வசிக்கும் தாயார் வீட்டிற்கு இரவில் தூங்கச் சென்று விடுவார்கள். காலையில் எழுந்து வீட்டிற்கு வந்து விடுவார்கள்.

    இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் பிரியா தனது தாயார் வீட்டுக்கு தூங்கச் சென்றார். இன்று காலை வந்து பார்த்த பொழுது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த 5 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி, ரூ.50 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக சின்னசேலம் போலீசாருக்கு தனது பெற்றோர் உதவியுடன் பிரியா தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் தேடி வருகின்றனர்.

    • திமுக ஊராட்சி செயலாளர் உள்பட 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
    • போலீஸ் நிலையம் முன்பு தலித் இளைஞரை காலில் விழ வைத்த விவகாரம்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் வாளரக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசன். பாஜக ஒன்றிய செயலாளராக இருக்கும் இவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர். இவரது மகளுக்கு கடந்த 8-ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதற்கு அங்குள்ள ஆதிச்சன நல்லூர் கிராமத்தில் இருந்து தாய்மாமன் சீர்வரிசை எடுத்து வரப்பட்டது. அப்போது அன்பரசன் தரப்பினர் அங்குள்ள ஒரு தெருவில் பட்டாசு வெடித்துள்ளனர்.மறுநாள் அன்பரசனின் இளைய சகோதரர் திருநாவுக்கரசு போதையில் மேற்கண்ட தெருவில் பெட்டிக்கடையில் நின்று கொண்டு சிகரெட் வாங்கி பற்ற வைத்ததாக கூறப்படுகிறது.அப்போது அங்கிருந்த ஒருவர் என்னடா வெடி வெடிக்கிறீங்க. சிகரெட் வாங்கி குடிக்கிறீங்க பெரிய ஆள் ஆகி விட்டீர்களா என கேட்டு தகராறு செய்தார. இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதுகுறித்த தகவல் அறிந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் திமுக ஊராட்சி செயலாளருமான கண்ணன் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து கூட்டத்தை கலைத்தனர்.மறுநாள் காவல் நிலையம் முன்பு திருநாவுக்கரசு ஊர் மக்கள் முன்பு காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.இதை அறிந்த அன்பரசன் அதிர்ச்சி அடைந்தார்.பாஜக தெற்கு ஒன்றிய கழகச் செயலாளராக இருக்கும் அவர் காவல் நிலையம் முன்பு காலனி தெருவை சேர்ந்தவரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தது தீண்டாமை அல்லவா என பதிவிட்டு பதிவு தபால் மூலம் குடியரசுத் தலைவர், தமிழக கவர்னர்,மாவட்ட காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர்களுக்கு புகார் மனு அனுப்பினார்.இதைத்தொடர்ந்து அன்பரசன் கொடுத்த புகாரின் பேரில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த திமுக ஊராட்சி செயலாளர் கண்ணன், ராஜேஷ் ,ராமச்சந்திரன், ரமேஷ் ,அருண், வேலுச்சாமி, உள்ளிட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் ராஜேஷ் கைது செய்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர். அவர் மீது எஸ்சி எஸ்டி தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தலைமறைவாக உள்ள திமுக ஊராட்சி செயலாளர் கண்ணன் உள்ளிட்ட 5 பேரை இரண்டு தனிப்படை போலீசார் வலைவீசி தேடுகின்றனர். இந்த சம்பவம் மேற்கண்ட பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×