search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "netting"

    • வாலிநோக்கம்-கீழமுந்தல் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • போலீசார் லாரியை சோதனையிட்ட போது 70 மூடைகளில் 30 கிலோ எடையுள்ள பீடி இலைகள் இருப்பது தெரிய வந்தது.

    சாயல்குடி:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, மாத்திரைகள், பீடி இலைகள், தங்கம் உள்ளிட்டவை அடிக்கடி கடத்தப்பட்டு வருகிறது.

    மேலம் இலங்கையில் இருந்து ராமநாதபுரத்திற்கு சட்ட விரோதமாக கடத்தல்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்க கடலோர காவல்படை போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கத்தில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்த இருப்பதாக கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வாலிநோக்கம்-கீழமுந்தல் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு லாரியை போலீசார் மறித்தனர். உடனே அதில் இருந்த டிரைவர் உள்பட சிலர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பினர். தொடர்ந்து போலீசார் லாரியை சோதனையிட்ட போது 70 மூடைகளில் 30 கிலோ எடையுள்ள பீடி இலைகள் இருப்பது தெரிய வந்தது. அதனையும், கடத்த பயன்படுத்தப்பட்ட சரக்கு லாரியையும் பறிமுதல் செய்த போலீசார் கடத்த முயன்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வாலிநோக்கம் கடலோர காவல்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது யார்? என்பது குறித்து தப்பியோடிய நபர்களையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • தாயை கத்திரிக்கோலால் மகன் சரமாரியாக குத்தினார்.
    • தலைமறைவாக உள்ள ஜெயகுமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தாட்கோ காலனியைச் சேர்ந்தவர் அபிராமி (வயது35). இவரது கணவர் வைரமுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை குறைவால் இறந்து விட்டார். இவர்க ளது மகன் ஜெயக்குமார் (19).

    இந்த நிலையில் அபிராமிக்கும், மகனின் நண்பர் ஆரோக்கியம் என்பவருக்கும் கள்ள தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மகன் பலமுறை தாயை கண்டித்தார். அதே சமயம் தனது நண்பரையும் கண்டித்தார். ஆனாலும் அவர்களது கள்ள தொடர்பு நீடித்தது.

    இந்த நிலையில் நேற்றிரவு அபிராமிக்கும், ஆரோக்கியத்திற்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது வீட்டிற்கு வந்த ஜெயகுமார் நண்பரை கண்டித்தார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் வீட்டில் இருந்த கத்திரிக்கோலால் தாய் அபிராமியை சரமாரி யாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்த அபிராமி கொடுத்த புகாரின்பேரில் வடக்கு காவல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவாக உள்ள ஜெயகுமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • மண் கடத்திய லாரியை கலெக்டர் ஷ்ரவன்குமார் மடக்கி பிடித்தார்.
    • தலைமறைவாகியுள்ள லாரி உரிமையாளர் பேட்டரி வெங்கடேசன் மற்றும் ராமரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் ஏரிக்கரையில் இருந்து மண் கடத்திய லாரியை நேற்று முன்தினம் இரவு கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் மடக்கி பிடித்தார். இதனை சின்னசேலம் தாசில்தார் இந்திரா, இன்ஸ்பெகடர் ராஜாராம் ஆகியோரிடம் ஒப்படைத்து சென்றார். இது குறித்து சின்னசேலம் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சின்னசேலத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் பேட்டரி வெங்கடேசன் (வயது 46), சூரியபிரகாஷ் (27), சதீஷ்குமார் (45), ராமர் (58), டிரைவர் வரதராஜ் (43) ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் டிரைவர் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள லாரி உரிமையாளர் பேட்டரி வெங்கடேசன் மற்றும் ராமரை போலீசார் தேடி வருகின்றனர். அரசிடம் அனுமதி பெறாமல் ஏரி மண் எடுத்தால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என தாசில்தார் இந்திரா, இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாட்டை கொன்ற 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    • சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் குல்லூர் சந்தையை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் ராமுத்தாயி. கருத்து வேறுபாடு காரண மாக இவர் தனது கணவர் மாரிகண்ணனை பிரிந்து வந்து விட்டார்.

    சம்பவத்த ன்று மாமனார் வீட்டுக்கு வந்த மாரிகண்ணன் வீட்டு தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த மாட்டை கத்தியால் வெட்டி கொன்றார். இதற்கு உடந்தையாக அவரது நண்பர் பாலமுருகன் இருந்துள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக ரவி கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை தேடி வருகின்றனர்.

    • கடைக்கு நேற்று மாலை 30 வயது மதிக்கத் தக்க ஒருவர் வந்தார்.
    • மர்ம நபருக்காக காத்திருந்த கடை உரிமை யாளர் சிறிது நேரம் காத்தி ருந்து ஏமாற்றம் அடைந்தார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் மெயின் ரோட்டில் உள்ள போலீஸ் நிைலயம் அருகே அன்சாரி (வயது 45) என்பவர் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடைக்கு நேற்று மாலை 30 வயது மதிக்கத் தக்க ஒருவர் வந்தார். அவர் கடையில் உள்ள ஒவ்வொரு இனிப்புகளின் விலையையும் கேட்டார். பின்னர் அதில் ஒரு இனிப்பை எடுக்க கூறினார்.

    அதற்காக கடை உரிமையாளர் அந்த பக்கம் திரும்பினார். அந்த நேரத்தில் அந்த மர்ம நபர் கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.5 ஆயிரத்தை அபேஸ் செய்து விட்டார். இனிப்பை எடுத்துக் கொண்டு வந்த கடை உரிமையாளர் அந்த மர்ம நபரிடம் கொடுக்க முயன்றார். உடனே அந்த மர்ம நபர் எனது இருசக்கர வாகனத்தில் பணம் உள்ளது. அதனை எடுத்து வருகிறேன் என்று கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

    அந்த மர்ம நபருக்காக காத்திருந்த கடை உரிமை யாளர் சிறிது நேரம் காத்தி ருந்து ஏமாற்றம் அடைந்தார். பின்னர் கடைக்கு வந்த மற்ற வாடிக்கையாளர்களுக்கு இனிப்புகளை விற்பனை செய்தார். அப்போது கடை யில் இருந்த கல்லாப்பெட்டி யை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். அதில் வைத்தி ருந்த 5 ஆயிரம் ரூபாயை அந்த மர்ம நபர் அபேஸ் செய்து மாயமானதை அறிந்தார். இந்த சம்பவம் குறித்து கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராபின்சன் வழக்குப்பதிவு செய்தார். கடையின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான தடயங்களை வைத்து போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்.

    • வைர மூக்குத்திகளை திருடிய மர்ம நபருக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.
    • அதனை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இங்கு எதிரிகளை பழிவாங்க காசு வெட்டி போடும் வழக்கம் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள்.வெள்ளி, செவ்வாய், ஞாயிறு கிழமைகளில் பெண் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    இந்த நிலையில் பத்ரகாளி அம்மன் சிலையில் இருந்த வைர மூக்குத்திகளை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இதுபற்றி நேற்று காலை தெரியவந்ததும் கோவில் செயல் அலுவலர், திருப்பு வனம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் வளாகம் முழுவதும் உள்ள கண்கா ணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் ஒரு மர்ம நபரின் உருவம் பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். மேலும் இரவு பணியில் இருந்த முன்னாள் ராணுவ வீரர் சீனிவாசன் மற்றும் 2 காவலாளிகளிடம் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருட்டு போன வைர மூக்குத்திகள் பல லட்சம் மதிப்புடையது. அதனை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று மீண்டும் மாட்டுக் கொட்டைகையில் மாடு களை கட்டிவிட்டு இரவு தூங்கச் சென்றார்.
    • சதீஷ் உள்பட 3 பேர் இரவோடு இரவாக திருடி சென்றதை ஒப்புக் கொண்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர் அருகே நெடு மானூர் பகுதியைச் சேர்ந்த வர் கோவிந்தராஜ். இவரது மனைவி கமலக்கோடி (வயது 48). விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் வீட்டின் பின்புறம் மாட்டு கொட்டகை அமைத்து மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று  வழக்கம்போல் மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று மீண்டும் மாட்டுக் கொட்டைகையில் மாடு களை கட்டிவிட்டு இரவு தூங்கச் சென்றார். இன்று காலை கமல கொடி எழுந்து சென்று பார்த்த போது மாட்டு கொட்டையிலிருந்த மாடுகளில் பசுமாடு ஒன்று காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கமலகொடி பசு மாட்டை பல்வேறு இடங்க ளில் தேடிப் பார்த்தார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து கமலக்கொடி எலவனாசூர் போலீஸ் நிலை யத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் எலவனாசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் வழக்கு பதிவு செய்து மாட்டை திருடி சென்ற மர்ம கும்பலை தேடிவந்தார். இந்நிலையில் பரிந்தன் பகுதியில் ஏரிக்கரை தெருவில் உள்ள ஒரு வீட்டில் காணாமல் போன மாடு கட்டி வைக்கப்பட்டிருந்தது. உடனே போலீசார் அந்த வீட்டிற்கு சென்று வீட்டிலிருந்த சதீஷ் (27) என்பவரிடம் விசாரித்த போது கமலக்கொடியின் மாட்டை சதீஷ் உள்பட 3 பேர் இரவோடு இரவாக திருடி சென்றதை ஒப்புக் கொண்டார். உடனே மாட்டை பறிமுதல் செய்த போலீசார் சதீஷை கைது செய்தனர். மேலும் இந்த திருட்டில் ஈடுபட்டு தலைமறைவாக இருக்கும் 2 பேரை போலீ சார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    • தொண்டி அருகே கடற்கரையில் ஜெலட்டின் குச்சிகளை பதுக்கியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    • மீன் பிடிப்பதற்காக அதற்கான பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக தொண்டி கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே பாசிப்பட்டிணம் கடற்கரை பகுதியில் உள்ள கலங்கரை விளக்கத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் வெடிவைத்து மீன் பிடிப்பதற்காக அதற்கான பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக தொண்டி கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி இன்று கடலோரப் பாதுகாப்பு குழும பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ், தேவிபட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார், தொண்டி மரைன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் முஸ்தபா ஆகியோர் தலைமையிலான போலீசார்கள் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினர்

    அப்போது கடற்கரையில் குழிதோண்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 239 ஜெலட்டின் குச்சிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தொண்டி புதுக்குடியை சேர்ந்த கோட்டைராஜா மகன் கண்ணன் மற்றும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கடலில் வெடிகளை வெடிக்கச்செய்து மீன் பிடிப்பதற்காக ஜெலட்டின் குச்சிகளை பதுக்கியி ருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    • நள்ளிரவில் இந்த கோவிலுக்கு மர்ம கும்பல் வந்தது.
    • இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே திரு வெண்ணைநல்லூர் போலீஸ் சரகத்துக்குட்பட்ட பெரிய செவலை பகுதியில் குண்டு மணி அய்யனாரப்பன் கோவில் உள்ளது. இந்ந கோவிலில் வழக்கம்போல் நேற்று மாலை யில் பூஜை முடித்துவிட்டு கோவில் பூட்டப்பட்டது. நள்ளிரவில் இந்த கோவிலுக்கு மர்ம கும்பல் வந்தது. அப்போது அந்த மர்ம கும்பல் கோவிலின் சுவரை உடைத்து உள்ளே நுழைந்தது. பின் கோவிலில் உள்ளே இருந்த பித்தளை பூஜை பொருள்கள் அனைத்தையும் திருடி சென்றனர். மேலும் கோவிலின் உள்ளே மற்றும் கோவிலின் முன்பு வைக்கப்பட்டிருந்த 2 உண்டியல்களை உடைத்து அதிலிருந்த பணத்தையும் திருடி சென்றனர்.

    இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்த அதிர்ச்சி அடைந்து இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டு கோவிலின் சுவரை உடைத்து கைவரிசை காட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×