மாட்டை கொன்ற 2 பேருக்கு வலைவீச்சு

மாட்டை கொன்ற 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மாட்டை கொன்ற 2 பேருக்கு வலைவீச்சு
Published on

விருதுநகர்

விருதுநகர் குல்லூர் சந்தையை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் ராமுத்தாயி. கருத்து வேறுபாடு காரண மாக இவர் தனது கணவர் மாரிகண்ணனை பிரிந்து வந்து விட்டார்.

சம்பவத்த ன்று மாமனார் வீட்டுக்கு வந்த மாரிகண்ணன் வீட்டு தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த மாட்டை கத்தியால் வெட்டி கொன்றார். இதற்கு உடந்தையாக அவரது நண்பர் பாலமுருகன் இருந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ரவி கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com