தாயை கத்திரிக்கோலால் சரமாரியாக குத்திய மகன்

தாயை கத்திரிக்கோலால் மகன் சரமாரியாக குத்தினார்.தலைமறைவாக உள்ள ஜெயகுமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தாயை கத்திரிக்கோலால் சரமாரியாக குத்திய மகன்
Published on

ராஜபாளையம்

ராஜபாளையம் தாட்கோ காலனியைச் சேர்ந்தவர் அபிராமி (வயது35). இவரது கணவர் வைரமுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை குறைவால் இறந்து விட்டார். இவர்க ளது மகன் ஜெயக்குமார் (19).

இந்த நிலையில் அபிராமிக்கும், மகனின் நண்பர் ஆரோக்கியம் என்பவருக்கும் கள்ள தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மகன் பலமுறை தாயை கண்டித்தார். அதே சமயம் தனது நண்பரையும் கண்டித்தார். ஆனாலும் அவர்களது கள்ள தொடர்பு நீடித்தது.

இந்த நிலையில் நேற்றிரவு அபிராமிக்கும், ஆரோக்கியத்திற்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது வீட்டிற்கு வந்த ஜெயகுமார் நண்பரை கண்டித்தார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் வீட்டில் இருந்த கத்திரிக்கோலால் தாய் அபிராமியை சரமாரி யாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த அபிராமி கொடுத்த புகாரின்பேரில் வடக்கு காவல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவாக உள்ள ஜெயகுமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com