search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோட்டக்குப்பம் பேக்கரி கடை கல்லாப்பெட்டியில் இருந்த பணம் அபேஸ்: மர்ம நபருக்கு வலைவீச்சு
    X

    கோட்டக்குப்பம் பேக்கரி கடை கல்லாப்பெட்டியில் இருந்த பணம் அபேஸ்: மர்ம நபருக்கு வலைவீச்சு

    • கடைக்கு நேற்று மாலை 30 வயது மதிக்கத் தக்க ஒருவர் வந்தார்.
    • மர்ம நபருக்காக காத்திருந்த கடை உரிமை யாளர் சிறிது நேரம் காத்தி ருந்து ஏமாற்றம் அடைந்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் மெயின் ரோட்டில் உள்ள போலீஸ் நிைலயம் அருகே அன்சாரி (வயது 45) என்பவர் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடைக்கு நேற்று மாலை 30 வயது மதிக்கத் தக்க ஒருவர் வந்தார். அவர் கடையில் உள்ள ஒவ்வொரு இனிப்புகளின் விலையையும் கேட்டார். பின்னர் அதில் ஒரு இனிப்பை எடுக்க கூறினார்.

    அதற்காக கடை உரிமையாளர் அந்த பக்கம் திரும்பினார். அந்த நேரத்தில் அந்த மர்ம நபர் கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.5 ஆயிரத்தை அபேஸ் செய்து விட்டார். இனிப்பை எடுத்துக் கொண்டு வந்த கடை உரிமையாளர் அந்த மர்ம நபரிடம் கொடுக்க முயன்றார். உடனே அந்த மர்ம நபர் எனது இருசக்கர வாகனத்தில் பணம் உள்ளது. அதனை எடுத்து வருகிறேன் என்று கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

    அந்த மர்ம நபருக்காக காத்திருந்த கடை உரிமை யாளர் சிறிது நேரம் காத்தி ருந்து ஏமாற்றம் அடைந்தார். பின்னர் கடைக்கு வந்த மற்ற வாடிக்கையாளர்களுக்கு இனிப்புகளை விற்பனை செய்தார். அப்போது கடை யில் இருந்த கல்லாப்பெட்டி யை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். அதில் வைத்தி ருந்த 5 ஆயிரம் ரூபாயை அந்த மர்ம நபர் அபேஸ் செய்து மாயமானதை அறிந்தார். இந்த சம்பவம் குறித்து கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராபின்சன் வழக்குப்பதிவு செய்தார். கடையின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான தடயங்களை வைத்து போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×