புவனகிரி அருகே நர்சிங் மாணவியை ஏமாற்றிய வாலிபர் கைது

புவனகிரி அருகே நர்சிங் மாணவியை ஏமாற்றிய வாலிபர் கைதுசெய்யப்பட்டார்.பழனிவேல் மகன் வீரமுத்துவை பார்ப்பதற்காக, எறும்பூரை சேர்ந்த ராயர் மகன் அருண் அடிக்கடி வந்து செல்வார்.
புவனகிரி அருகே நர்சிங் மாணவியை ஏமாற்றிய வாலிபர் கைது
Published on

கடலூர்:

புவனகிரி அடுத்த பெரியநெல்லிகொல்லை அடுத்த துறிஞ்சிகொல்லை  கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை மகள் சிந்து (வயது 19). இவர் வடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். இவர் வசிக்கும் வீதியில் உள்ள பழனிவேல் மகன் வீரமுத்துவை பார்ப்பதற்காக, எறும்பூரை சேர்ந்த ராயர் மகன் அருண் அடிக்கடி வந்து செல்வார். இவருடன் சிந்துக்கு பழக்கம் ஏற்பட்டது. இதில் இருவரும் அடிக்கடி போனில் பேசியுள்ளனர். சிந்துவை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறிய அருண், சிந்துவுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார்.

இதனையடுத்து, அருணுக்கும் வேறொரு பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்தது. இதனை யறிந்த சிந்து மனஉலைச்சலில் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொ லைக்கு முயன்றார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சிந்து, நடந்த விஷயங்களை தனது பெற்றோரிடம் கூறினார். சிந்துவின் பெற்றோர், அருண் வீட்டிற்கு சென்று, தனது மகளை திருமணம் செய்துகொள்ள கேட்டுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த அருண் மற்றும் குடும்பத்தார், சிந்து மற்றும் அவரது பெற்றோரை அசிங்கமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இது தொடர்பாக சிந்து மற்றும் அவரது பெற்றோர் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி, சிந்துவை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய அருண் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com