search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money-jewellery"

    • ரூ 20 லட்சம் பணம் மற்றும் 275 கிராம் தங்க நகைகள் கடத்தல்.
    • பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

    திருப்பதி:

    தெலுங்கானாவில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மெடிகட்டா போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபரை கண்ட போலீசார் அவரது வயிறு வீங்கியபடி இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்தனர்.

    வாலிபரை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை கண்ட வாலிபர் திருத்திருவென விழித்தார். வாலிபரை அறைக்கு அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்தனர்.

    வாலிபரின் ஆடைகளில் ஆங்காங்கே பித்யோகமாக பைகள் அமைத்து அதில் கட்டுக்கட்டாக பணம், நகைகளை வாலிபர் பதுக்கி வைத்திருந்தார்.

    இதனை கண்டு போலீசார் திகைத்து போயினர். ரூ 20 லட்சம் பணம் மற்றும் 275 கிராம் தங்க நகைகள் இருந்தது. பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

    கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் நகைகளை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வாலிபரை கைது செய்த போலீசார் நகை பணத்தை எங்கிருந்து யாருக்காக கடத்தி வந்தார் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பணம்-நகைகளை மோசடி செய்து பெண்ணுக்கு கொலை மிரட்டிய தந்தை-மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ஆலங்குளம் டி.என்.சி. காலனியை சேர்ந்தவர் சுகுணாதேவி(வயது37). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்தநிலை யில் கணவரின் நண்பரான பால்பாண்டி என்பவருடன் பழகத் தொடங்கினார். அவர் தான் ஓட்டல், டிராவல்ஸ் நடத்தி வரு வதாக சுகுணா தேவியிடம் கூறியுள்ளார். மேலும் அவரது குழந்தை களிடம் அன்பாக பழகி யுள்ளார்.

    இதைப்பார்த்து அதை நம்பிய சுகுணாதேவி அவருடன் சேர்ந்து வாழ தொடங்கினார். அவரது கணவரின் இறப்புக்காக கிடைத்த ரூ.10 லட்சம் மற்றும் நகைகளை பால்பாண்டி தனது தொழிலுக்காக கேட்டு வாங்கினார்.

    மேலும் சுகுணா தேவியின் வீட்டில் உள்ள பொருட்க ளையும் எடுத்துச் செல்ல தொடங்கினார். இதனால் சந்தேகமடைந்த சுகுணாதேவி தனது பணம், நகைகளை திருப்பிக் கொடுக்குமாறு பால்பா ண்டி யிடம் கேட்டு வந்தார். ஆனால் பால்பாண்டி பணம், நகைகளை கொடுக் காமல் தட்டிக்களித்து வந்தார்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று சுகுணாதேவியின் வீட்டுக்கு பால்பாண்டி மற்றும் அவரது தந்தை முருகன் வந்தனர். அப்போது அவர்கள் சுகுணாதேவியை அவதூறாக பேசி பணம், நகைகளை திருப்பி கேட்டால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டிச்சென்றதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சுகுணாதேவி ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 7 பவுன் சங்கிலி மற்றும் ரூ.2ஆயிரத்தை தவறவிட்டதாக போலீசில் புகார் அளித்தார்.
    • சாலையில் கிடந்த மணி பர்சை திறந்து பார்த்தனர்.

    தாராபுரம் :

    திருப்பூர் தாராபுரத்தை அடுத்த ஆச்சியூரை சேர்ந்தவர் லட்சுமி (வயது 80). இவர் தனது மணிபர்சில் வைத்திருந்த 7 பவுன் சங்கிலி மற்றும் ரூ.2ஆயிரத்தை தவறவிட்டதாக போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தாராபுரத்தை அடுத்த கொழிஞ்சிவாடி,உப்புத்துறைபாளையத்தை சேர்ந்த செல்வராஜ், இவரது மனைவி சாரதா ஆகியோர் தாராபுரம்- கரூர் சாலையில் வந்த போது சாலையில் கிடந்த மணி பர்சை திறந்து பார்த்தனர். அதில் தங்கச்சங்கிலி ரூ.2ஆயிரம் இருந்தது.

    அதனை அந்த தம்பதியினர் தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டனிடம் ஒப்படைத்து உரியவரிடம் ஒப்படைக்குமாறு கூறிவிட்டு சென்றனர். இதையடுத்து தாராபுரம் போலீசார் மூதாட்டி லட்சுமியை அழைத்து நகை,பணத்துடன் பர்சை காண்பித்தனர். அது தன்னுடைய நகை, பணம் என அடையாளம்் கூறினார். இதையடுத்து அவரிடம் 7 பவுன் சங்கிலி மற்றும் ரூ.2 ஆயிரத்தை போலீசார் ஒப்படைத்தனர். சாலையில் கிடந்த நகை மற்றும் பணத்தை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த செல்வராஜ், சாரதா தம்பதிைய போலீசார் சால்வை அணிவித்து பாராட்டினர்.

    ×