பண்ருட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு

இதுகுறித்து சந்துருவிடம் கேட்டதற்கு உங்கள் பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறினார். பெற்றோரை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
பண்ருட்டி அருகே   மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் பண்ருட்டியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சிறுவத்தூர் திடீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சந்துரு, கூலி தொழிலாளி. இவர் பிளஸ்-2 மாணவியிடம் சென்று ஆசைவார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படு கிறது. இதை அறிந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து சந்துருவிடம் கேட்டதற்கு உங்கள் பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறினார்.

இதற்கு பெண்ணின் பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சந்துரு பெண்ணின் பெற்றோரை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். அத்துடன் அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு தொடர்ந்து கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து மாணவி யின் பெற்றோர் பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் வள்ளி யிடம் புகார் கொடுத்தனர். இதனையடுத்து கூலி தொழிலாளி சந்துரு மீது மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவிசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com