என் மலர்
உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
- கோவிந்தம்மாளுக்கும் ராஜ்குமாருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
- ராஜ்குமார், கோவிந்தம்மாளை அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (வயது 56). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் முருகன் மகன் ராஜ்குமார் (35) என்பவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று கோவிந்தம்மாள் வீட்டு வாசலை பெருக்கிக் கொண்டிருந்த போது அங்கு வந்த ராஜ்குமார், கோவிந்தம்மாளை அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கோவிந்தம்மாள் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.
Next Story






