search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "congress protest"

    • இந்திராகாந்தி சிலை அருகே போராட்டம் நடத்தப்படும் என மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
    • சோனியாகாந்தி 1998-ல் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார்.

    புதுச்சேரி:

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தியை தொடர்ந்து சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உள்ளது.

    இதை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாடு முழுவதும் (வியாழக்கிழமை)போராட்டம் நடத்தப்பட உள்ளது. புதுவை காங்கிரஸ் சார்பில் 10 மணிக்கு இந்திராகாந்தி சிலை அருகே போராட்டம் நடத்தப்படும் என மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சோனியாகாந்தி 1998-ல் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார். அதன்பின் அயராத உழைப்பால் 2 முறை மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவந்தார். 2004-ல் பிரதமர் பதவி வேண்டாம் என மறுத்து மன்மோகன்சிங்கிற்கு வழங்கினார். எந்த ஆட்சி பதவியும் வகிக்காத சோனியா மீது அமலாக்கத்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். இதைகண்டித்து காங்கிரஸ் சார்பில்நடைபெறும் போராட்டத்தில் காங்கிரசார் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வில்லியனூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில தலைவர் பெருமாள், துணைத் தலைவர் முரளி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சலீம் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

    மாநில செயலாளர் அந்தோணி நோக்க உரையாற்றினார். கூட்டப்பாக்கத்தை சேர்ந்த மாணவர் விஷ்ணுக்குமார் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்.

    மாணவர் விஷ்ணுகுமார் தற்கொலைக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் அனைதிந்திய இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் எரிக்ரம்போ, உதயராஜ், எழிலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கவர்னர் கிரண்பேடி திரும்பி வரும் வரை போராட்டம் தொடரும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். #narayanasamy #congress #governorkiranbedi

    புதுச்சேரி:

    புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    துணை ராணுவ படையினர் தங்களது வேலையை செய்வார்கள். நாங்கள் எங்கள் போராட்டத்தை அமைதியாக தொடர்வோம். கவர்னர் எங்கள் போராட்டத்தை கண்டு பயந்துதான் வெளியேறி உள்ளார்.


    கவர்னர் சென்றாலும் எங்கள் போராட்டம் தொடரும். எங்களை கைது செய்தாலும் கவலை இல்லை. கவர்னர் திரும்ப வரும் வரை போராட்டம் தொடரும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார். #narayanasamy #congress #governorkiranbedi

    கழிவு நீரை அப்புறப்படுத்தாத நகராட்சியை கண்டித்து காங்கிரஸ் நிர்வாகிள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    குளச்சல்:

    குளச்சல் அரசு விருந்தினர் மாளிகை அருகே மழை நீர் கால்வாய் ஓடுகிறது. இக்கால்வாயில் ஓடும் நீர் பல நாட்களாக கால்வாயில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதோடு, கொசு உற்பத்தியாக நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அப்பகுதி மக்கள் குளச்சல் நகராட்சிக்கு புகார் கொடுத்தனர். மேலும் கழிவு நீரை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

    காங்கிரஸ் கட்சியினரும் இதுதொடர்பாக மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை கழிவு நீர் அப்புறப்படுத்தப்பட வில்லை. இதையடுத்து இன்று காலை திடீரென காங்கிரஸ் கட்சியின் மீனவர் பிரிவு நகர தலைவர் டேவிட் குமார், கழிவு நீர் தேங்கி கிடக்கும் பகுதிக்கு வந்தார். தன்னுடன் கொண்டுவந்த நாற்காலியை அதன் அருகே போட்டு அமர்ந்து கொண்டார். கையில் காங்கிரஸ் கொடியை பிடித்தபடி நகராட்சியை கண்டித்து கோஷம் எழுப்பினார்.

    மேலும் குளச்சலில் நோய் பரப்பும் கழிவு நீர் ஓடையை சுத்தம் செய்ய வேண்டும், கொசு பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்.

    இது பற்றி அறிந்த குளச்சல் நகரசபை கழிஷனர்  மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகியுடன் சமரச பேச்சு நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    பண மதிப்பிழைப்பு நீக்கம் செய்ததால் இந்திய பொருளாதாரம் சீர்குலைந்து விட்டதை கண்டித்து காங்கிரசார் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். #congressdemonstration
    வேலூர்:

    வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே மாநில பொதுச் செயலாளர் விஜயன் தலைமையில் காங்கிரசார் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் வாகித்பாஷா, வழக்கறிஞர் அணி தலைவர் கிருஷ்ணகுமார் முன்னாள் மாவட்ட தலைவர் கதிர்வேல் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ரூ.1000 மற்றும் ரூ.500 பண மதிப்பிழைப்பு நீக்கம் செய்ததால் இந்திய பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது. இதற்கு காரணமான மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் கோஷம் எழுப்பினர்.  #congressdemonstration
    சிபிஐ இயக்குனர் மீதான நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்திருப்பதால், சிபிஐ அலுவலகங்கள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #CongressProtests #AlokVerma #CBIVsCBI
    புதுடெல்லி:

    சிபிஐ அமைப்பில் லஞ்ச ஊழல் தொடர்பான மோதல் உச்சகட்டத்தை எட்டியதையடுத்து, சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர்  ராகேஷ் அஸ்தானா இருவரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.

    சி.பி.ஐ இயக்குனர் அலோக் வர்மாவை நீக்கிய விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. ரபேல் ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை அலோக் வர்மா சேகரித்து வந்த நிலையில், அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

    இந்நிலையில் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியதைக் கண்டித்து நாடு முழுவதிலும் உள்ள சிபிஐ அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்தது. டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பு நடைபெறும் போராட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது.



    அதன்படி இன்று அனைத்து சிபிஐ அலுவலகங்கள் முன்பும் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினர் தயாராகினர். காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்துள்ளதால், சிபிஐ அலுவலகங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    காங்கிரசின் இந்த போராட்டத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெல்லியில் ராகுல் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. #CongressProtests #AlokVerma #CBIVsCBI
    மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு நாளை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திரமாக செயல்பட்டு குற்ற வழக்குகளை நேர்மையோடு விசாரித்து வந்து நீதியை நிலைநாட்டிய சி.பி.ஐ. துறையை அரசின் சுயலாபத்திற்காக அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.

    தங்களின் கைப்பாவையாக மாற்றி ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் மோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆணைப்படி புதுவை மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள்.

    மேலும், புதுவை மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், அனைத்து பிரிவு நிர்வாகிகள் தொகுதி நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு நமச்சிவாயம் கூறியுள்ளார்.

    உத்தரப்பிரதேசத்தில் சாலையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். #Allahabad #JawaharlalNehruStatue #Congress
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் அலகாபாத் நகரில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கும்பமேளா நடத்த முடிவாகியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அலகாபாத் நகரில் சாலை நடுவே அமைக்கப்பட்டு இருந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு சிலையை அகற்ற நகராட்சி அதிகாரிகள் முடிவெடுத்தனர். இதையடுத்து, சாலையில் வைக்கப்பட்டு இருந்த ஜவஹர்லால் சிலையை நகராட்சி அதிகாரிகள் அங்கிருந்து அகற்றினர்.



    நேரு சிலை அகற்றப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அப்பகுதி காங்கிர்ஸ் கட்சியினர் அங்கு திரண்டனர். அவர்கள் ஆளும் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது யோகி ஆதித்யநாத்தின் பழிவாங்கும் செயல் என அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், அதே பகுதியில் உளள பூங்கா ஒன்றில் நேரு சிலை அமைக்கப்படும் என தெரிவித்தனர். #Allahabad #JawaharlalNehruStatue #Congress
    பந்த் போராட்டத்தையொட்டி புதுவையில் பல இடங்களில் காங்கிரஸ், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் மறியல் போராட்டம் நடத்தினர். #BharathBandh #PetrolDieselPriceHike

    புதுச்சேரி:

    பந்த் போராட்டத்தையொட்டி புதுவையில் பல இடங்களில் காங்கிரஸ், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் மறியல் போராட்டம் நடந்தது. இடதுசாரி கட்சிகளான இந்தியகம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, கம்யூனிஸ்டு (எம்.எல்) சார்பில் சுப்பையா சிலை சந்திப்பில் இருந்து ஊர்வலம் வந்தது. ஊர்வலத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், அபிஷேகம், சேதுசெல்வம், தினேஷ்பொன்னையா, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், முன்னாள் செயலாளர்கள் பெருமாள், முருகன், கம்யூனிஸ்டு (எம்.எல் )மாநில செயலாளர் பழனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊர்வலம் பஸ் நிலையம் அருகே வந்தது. அங்கு மறியல் போராட்டம் நடத்தினர்.

    மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப்பெறக்கோரியும் கோ‌ஷம் எழுப்பினர். புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் தலைமையில் வில்லியனூரில் இருந்து இளைஞர் காங்கிரசார் மோட்டார் சைக்கிளில் கிராமப்பகுதியில் சுற்றிவிட்டு நகர பகுதிக்கு ஊர்வலமாக வந்தனர்.

    புதுவை பஸ் நிலையம் அருகே வந்தபோது பஸ் நிலையத்தில் சென்னைக்கு தமிழக அரசு பஸ் புறப்பட தயாராக இருந்தது. இதைக்கண்ட அவர்கள் பஸ்நிலையம் முன்பு அமர்ந்து மறியல் செய்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து நகர பகுதியில் வலம் வந்த அவர்கள் திறந்திருந்த கடைகளை அடைக்கச்செய்தனர். புதுவை பஸ் நிலையம் முன்பு காங்கிரஸ் வட்டார தலைவர் அப்துல்ரகுமான், மற்றும் மத்திய மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆறுமுகம் தலைமையில் காங்கிரசார் மறியல் போராட்டம் நடத்தினர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    காங்கிரஸ் சார்பில் மரப்பாலம் சந்திப்பில் மறியல் நடந்தது. மறியலில் ஈடுபட்டவர்கள் மறைத்து வைத்திருந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை ரோட்டில் போட்டு தீ வைத்து எரித்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல எஸ்.யூ.சி.ஐ. கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 4 இடத்தில் மறியல் நடந்தது. வெங்கடசுப்பாரெட்டியார் சிலை அருகில் மாநில செயலளார் லெனின்துரை தலைமையிலும், அரியாங்குப்பத்தில் முத்து தலைமையிலும், சிவாஜி சிலை அருகில் பிரளயன் தலைமையிலும், சேதராப்பட்டில் ஏ.ஐ.யூ.டி.யூ.சி. மாநில தலைவர் சிவக்குமார் தலைமையிலும் மறியல் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    முத்தியால்பேட்டையில் முன்னாள் காங்கிரஸ் செயலாளர் பி.எம்.சரவணன் மற்றும் இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் லட்சுமிகாந்தன், வட்டார காங்கிரஸ் தலைவர் செல்வாம்பிகை, முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் கலியபெருமாள் ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    நகர பகுதியில் மறியல் செய்து கைது செய்யப்பட்டவர்கள் தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள கரிகுடோவுனில் அடைக்கப்பட்டனர். அவர்களை மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் சந்தித்தார். #BharathBandh #PetrolDieselPriceHike 

    பெட்ரோல் -டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய பாரதீய ஜனதா அரசை கண்டித்து காங்கிரசார் மறியல் போராட்டம் நடத்தினர். #BharathBandh #PetrolDieselPriceHike

    புதுச்சேரி:

    பெட்ரோல் -டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய பாரதீய ஜனதா அரசை கண்டித்து புதுவையில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார் ஆங்காங்கே மறியலிலும் ஈடுபட்டனர்.

    அதுபோல் தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் அனந்தராமன் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் வட்டார காங்கிரஸ் தலைவர் ராமு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட காங்கிரசார் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார் பெட்ரோல் -டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெண்கள் நடுரோட்டில் விறகு அடுப்பை வைத்து சமையல் செய்தனர் மேலும் பெட்ரோல்- டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை எடுத்து காட்டும் வகையில் மாட்டு வண்டிகளில், மோட்டார் சைக்கிள் மற்றும் கியாஸ் சிலிண்டரை வைத்து அனந்தராமன் எம்.எல்.ஏ. தலைமையில் ஊர்வலமாக கொண்டு சென்றனர். #BharathBandh #PetrolDieselPriceHike

    மத்திய அரசின் பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து தஞ்சை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் தஞ்சை ரெயிலடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தஞ்சாவூர்:

    மத்திய அரசின் பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து தஞ்சை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் தஞ்சை ரெயிலடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் யாதவ கிருஷ்ணன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    மாநகர் மாவட்ட செயலாளர் அலாவுதீன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராம்பிரசாத், ராஜமார்த்தாண்டன், மாநகர பிரதிநிதி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ், முத்து கிருஷ்ணன், ரமேஷ், இஸ்மாயில், கண்டபிள்ளை, சதா, வெங்கட்ராமன், சீனிவாசன், திருவையாறு பூபதி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    போர் விமானம் வாங்கியதில் மத்திய அரசு நிகழ்த்தியுள்ள ஊழலை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். #Congress
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவின் பாதுகாப்புதுறைக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரபேல் போர் விமானம் வாங்கியதில் மத்திய அரசு நிகழ்த்தியுள்ள சுமார் ரூ.1 லட்சத்து 41 ஆயிரம் கோடி ஊழலை கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களில் வருகிற 10-ந்தேதி முதல் 15-ந்தேதி ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட உள்ளது. சென்னையில் 12-ந்தேதி நடக்கிறது.

    பேரணியில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் மற்றும் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். ஆர்ப்பாட்ட பேரணியில் பங்கேற்கும் தலைவர்கள் விவரம் வருமாறு:-

    சென்னை-குமரிஅனந்தன், யசோதா, செல்வ பெருந்தகை.

    திருவள்ளூர்-டாக்டர் ஜெயக்குமார்.

    திருவண்ணாமலை- தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி

    நாமக்கல்-எச்.வசந்த குமார்

    திருப்பூர்-முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்

    சிவகங்கை-ப.சிதம்பரம்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Congress
    ×