என் மலர்
நீங்கள் தேடியது "gas price hike"
- ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்வதை சரக்குக் கப்பல்கள் பெருமளவில் நிறுத்திவிட்டன.
- உள்நாட்டுத் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு விநியோகத்தை இந்திய அரசு குறைத்துள்ளது.
கத்தார் எனர்ஜி (QatarEnergy) தனது திரவ இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தியை முழுமையாக நிறுத்தியுள்ளது. இதனால் ஐரோப்பிய எரிவாயு விலைகள் 54% வரை உயர்ந்துள்ளன. ராஸ் லஃபான் மற்றும் மெசைட் ஆகியவற்றில் உள்ள எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியத் தொடர்ந்து கத்தார் இந்த முடிவை எடுத்துள்ளது.
ஒரு பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாகவும், சேதங்களை மதிப்பீடு செய்யவும் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக கத்தார் அரசு அறிவித்துள்ளது. கத்தார் எனர்ஜியின் ராஸ் லாஃபான் ஆலை, எல்என்ஜி விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பகுதியை வழங்குகிறது. இதனால் தற்போது ஏற்பட்டுள்ள இந்த முன்னெப்பொழுதும் இல்லாத உற்பத்தி நிறுத்தம், உலகளாவிய சந்தைகளை அதிரவைத்துள்ளது.
முக்கியமாக கத்தாரின் இந்த முடிவால் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 2022-ல் உக்ரைன் மீது ரஷ்யா போர்தொடுத்த சமயத்தில் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடிக்குப் பிறகு, ஐரோப்பாவின் முக்கிய எரிவாயு சந்தை விலைகள் தற்போது மிக அதிக அளவில் உயர்ந்துள்ளன.
ஏற்கனவே மத்திய கிழக்கில் நிலவியுள்ள போர் பதற்றட்டத்தால், எரிபொருள் ஓட்டத்தின் முக்கிய நரம்பாகத் திகழும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்வதை சரக்குக் கப்பல்கள் பெருமளவில் நிறுத்திவிட்டன. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 50% மற்றும் இயற்கை எரிவாயு (LNG) இறக்குமதியில் 60% இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகிறது.
இந்நிலையில் கத்தாரும் தனது உற்பத்தியை நிறுத்தியுள்ளது. இதனால் ஐரோப்பிய சந்தைகளில் இயற்கை எரிவாயு விலை ஒரே நாளில் 50% வரை அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் விலை உயர்ந்துள்ளது. மேலும் உள்நாட்டுத் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு விநியோகத்தை இந்திய அரசு குறைத்துள்ளது.
புதுச்சேரி:
பெட்ரோல் -டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய பாரதீய ஜனதா அரசை கண்டித்து புதுவையில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார் ஆங்காங்கே மறியலிலும் ஈடுபட்டனர்.
அதுபோல் தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் அனந்தராமன் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் வட்டார காங்கிரஸ் தலைவர் ராமு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட காங்கிரசார் பங்கேற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார் பெட்ரோல் -டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெண்கள் நடுரோட்டில் விறகு அடுப்பை வைத்து சமையல் செய்தனர் மேலும் பெட்ரோல்- டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை எடுத்து காட்டும் வகையில் மாட்டு வண்டிகளில், மோட்டார் சைக்கிள் மற்றும் கியாஸ் சிலிண்டரை வைத்து அனந்தராமன் எம்.எல்.ஏ. தலைமையில் ஊர்வலமாக கொண்டு சென்றனர். #BharathBandh #PetrolDieselPriceHike






