என் மலர்
புதுச்சேரி

இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
- வில்லியனூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்.
புதுச்சேரி:
வில்லியனூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில தலைவர் பெருமாள், துணைத் தலைவர் முரளி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சலீம் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
மாநில செயலாளர் அந்தோணி நோக்க உரையாற்றினார். கூட்டப்பாக்கத்தை சேர்ந்த மாணவர் விஷ்ணுக்குமார் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்.
மாணவர் விஷ்ணுகுமார் தற்கொலைக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் அனைதிந்திய இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் எரிக்ரம்போ, உதயராஜ், எழிலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






