search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collector's office"

    • மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் தலைமையில் காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது.
    • தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்துக்கொள்ள கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

    ஜூன் மாத விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 23-ந்தேதி வெள்ளிக் கிழமை புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் தலைமையில் காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. கடலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும். கூட்ட அரங்கில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் காலை 8 மணி முதல் 10.05 மணிக்குள் தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்துக்கொள்ள கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம். இக்குறைகளுக்கு சம்மந்தப்பட்ட துறையின் உயர் அலுவலர்கள் உரி யபதில் அளிக்கவும் மேலும் தொடர் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்ப்பினை கடலூர் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

    • கலெக்டர் அலுவலகத்திற்கு பெற்றோருடன் மாணவ-மாணவிகள் வந்தனர்.
    • ஆதிதிராவிடர் பள்ளி என பெயர் மாற்றப்பட்டுள்ளது

    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை மாணவ-மாணவிகள் கலெக்டர் சங்கீதாவை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுைர மாவட்டம் பேரையூர் வட்டம் சாப்டூர் ஊராட்சி சங்கரலிங்காபுரத்தில் உள்ள பழமையான சங்கராலிங்கபுரம் அரசு பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளிக்கு தற்போது அரசு ஆதிதிராவிடர் பள்ளி என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த பெயரை மாற்றவும் கூடாது, பழைய பெயரிலேயே செயல்பட வேண்டும். அதேபோல இந்த பள்ளியின் கட்டிடம் மிகவும் ேமாசமான நிலையில் உள்ளது.

    அதனை சரிசெய்து தரும்படியும் மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். பெற்றோர்களுடன் மாணவ-மாணவிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • அரசு அலுவலர்கள் கூட்டம், ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக் கிழமை விவசாயிகள் கூட்டம் நடைபெற்று வருகின்றது.
    • கலெக்டர் அலுவலகம் முன்பு குளிர்சாதன வசதி யுடன் அமைக்கப்பட்ட பஸ் நிறுத்தம் முழுவதும் சிதலமடைந்து பயனற்ற நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர்:

    கடலூர் செம்மண்டலம் கரும்பு ஆராய்ச்சி நிலையம் அருகே புதிய கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இங்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பணிகள் தொடர்பாகவும், கோரிக்கை மனுக்கள் அளிப்பது தொடர்பாகவும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் வாரந்தோறும் திங்கட்கிழமை மற்றும் பல்வேறு அரசு அலுவ லர்கள் கூட்டம், ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக் கிழமை விவசாயிகள் கூட்டம் நடைபெற்று வருகின்றது.

    இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடலூர் கலெக்டர் அலு வலகத்திற்கு வந்து செல்லும் நிலையில் கடலூர் பஸ் நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து செல்லக் கூடிய பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடலூர் கலெக்டர் அலுவல கத்திற்கு பேருந்தில் செல்லும் போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தாமல் செல்கின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் கடும் அவதி அடைந்து வருவ தோடு, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி யிடம் புகார் தெரிவித்தும் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை. இது மட்டும் இன்றி கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு குளிர்சாதன வசதி யுடன் அமைக்கப்பட்ட பஸ் நிறுத்தம் முழுவதும் சிதல மடைந்து பயனற்ற நிலை யில் இருப்பதும் குறிப்பிடத் தக்கதாகும். மேலும் அதிகாரி களிடம் புகார் தெரிவிக்கும் சமயத்தில் டிரைவர்கள் பேருந்து நிறுத் தத்தில் நிறுத்தி செல்கின்ற னர். பின்னர் வழக்கம் போல் கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தத்தில் பேருந்து களை நிறுத்தி செல்லாமல் ஆல்பேட்டை சோதனை சாவடி நிறுத்தம் வரை அனைவரும் சென்று அங்கிருந்து ஆட்டோ மூலம் தங்கள் பணிக்கு கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் ஏதேனும் பிரச்சனைகள் மற்றும் குறைகள் இருந்தால் கடலூர் கலெக்டர் அலுவல கத்தில் கோரிக்கை மனு அளித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆனால் கடலூர் கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்லாமலும், அதனை மீறி நிறுத்தி சென்றால் பொது மக்களுக்கும் நடத்துனருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அதன் பிறகு அவசர அவசர மாக நிறுத்தி பயணிகளை இறக்கி விடும்போது பல்வேறு விபத்துக்கள் ஏற்படும் நிலை உருவாகி யுள்ளது. ஆகையால் கடலூர் கலெக்டர் அலுவலகம் வழி யாக செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்ல வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட போக்கு வரத்து துறை அதிகாரிகள் உரிய முறையில் நடவடிக்கை எடுப்பார்களா? என பார்ப்போம். 

    • கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா உள்பட 230 மனுக்கள் பெறப்பட்டன.
    • மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்த அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார்.

    230 மனுக்கள்

    கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோரு தல், பட்டாமாறுதல், மாற்ற த்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 230 மனுக்கள் பெறப்பட்டன.

    பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா? என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், உதவி ஆணையர் (கலால்) ராஜ மனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சங்கரநாராயணன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் (பொறுப்பு) நடராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்ர் விஸ்வநாதன் மற்றும் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.
    • திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வரவேற்றார்.

    1998-ம் ஆண்டு காவலர் பயிற்சியில் இணைந்த போலீசார் வாட்ஸ்-அப் குழு மூலம் மீண்டும் காஞ்சிபுரத்தில் சந்திக்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் அருகே உள்ள காவலர் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்ர் விஸ்வநாதன் மற்றும் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

    திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வரவேற்றார். சென்னை போக்குவரத்து துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜன், ஜெயவேலு கணேசன்,செல்வராஜ்,அசோக் குமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ராஜகோபால், நாகராஜன் நன்றி கூறினர்.

    • கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார்.
    • போலீசார் விசாரணை

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள் குறித்த மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

    இந்த நிலையில் மனு கொடுக்க வந்த ஒரு பெண் கலெக்டர் அலுவலகம் முன்தனது உடலில் திடீரென மண்எண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். பின்னர் அவரை தனியாக அழைத்துச்சென்று விசா ரணை நடத்தினர்.

    இதில் அந்த பெண் சோழவந்தானை அடுத்த பொம்பன்பட்டியைச் சேர்ந்த மரியா என்பது தெரியவந்தது. அவர் போலீசாரிடம் கூறியதா வது:-

    நான் எனது கணவர் ஜான் வெஸ்லி, நாத்தனார் கலா ஆகியோருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தேன்.எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து என்னை வீட்டை விட்டு வெளியேறும்படி வற்புறுத் தினர். அப்போது நான், எனக்கும் சொத்தில் பங்கு உண்டு என்று தெரிவித்தேன். இதனால் ஆத்திரமடைந்த கலா உள்ளிட்ட 6 பேர் என்னை தாக்கினர். இது பற்றி சோழவந்தான் போலீஸ் நிலையத்திலும், எஸ்.பி. அலுவலகத்திலும் புகார் செய்தேன். இருந்த போதிலும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வாழ்க்கையில் வெறுப்ப டைந்து கலெக்டர் அலுவ லகம் முன்பு தீக்குளிக்க முடிவு செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குல்லா அணிந்து வந்த நபர் ஒருவர் கள்ளச்சாவி போட்டு இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
    • வாகனத்தின் பெட்டியில் 13 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் 2 ஏ.டி.எம். கார்டுகள் வைத்திருந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் அண்ணாதுரை. கடந்த சனிக்கிழமை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி மேற்கொள்ள வந்த அண்ணாதுரை தனது இருசக்கர வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கின் பின்புறம் நிறுத்திவிட்டு பணிக்கு சென்றுள்ளார்.

    மாலை பணி முடிந்து வந்து பார்த்தபோது அவரது இரு சக்கர வாகனம் காணவில்லை. உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி. காட்சிகளை பார்த்தபோது அதில் மதியம் 3மணியளவில் குல்லா அணிந்து வந்த நபர் ஒருவர் கள்ளச்சாவி போட்டு அண்ணாதுரையின் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது . இருசக்கர வாகனத்தின் பெட்டியில் 13 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் 2 ஏ.டி.எம். கார்டுகள் வைத்திருந்தார்.

    இது குறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி., காட்சி பதிவுகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தி லேயே இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஜாய் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கலெக்டர் அலுவலகம் மற்றும் வாசலில் ஆர்ப்பாட்டம், போராட்டம் உள்ளிட்டவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று இலங்கை வாலிபர் ஜாய்(வயது 35) என்பவர், தனது குடும்பத்தினருடன் தன்னை சேர்த்து வைக்க கோரி ரகளை செய்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தின் எதிரொலியாக கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

    அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வரும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலக வாசலின் இருபுறமும் சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு பேரி கார்டுகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    கலெக்டர் அலுவலகத்தில் பணி செய்யும் அரசு ஊழியர்கள் அடையாள அட்டை சோதனை செய்யப்பட்ட பின்னரும், மனு அளிக்க வரும் அனைவரும் தீவிர சோதனை செய்யப்பட்ட பின்னரும் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் வாசலில் ஆர்ப்பாட்டம், போராட்டம் உள்ளிட்டவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் மற்றும் தலைமை இடத்து துணை போலீஸ் கமிஷனர் அனிதா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து மாநகர தலைமை இடத்து துணை கமிஷனர் அனிதா தலைமையில் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பாளை உதவி கமிஷனர் பிரதீப் மேற்பா ர்வையில், இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    • மானூர் போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளதாக மாரியப்ப பாண்டியன் கூறினார்.
    • ஆர்.டி.ஓ. விடம் பிணை பத்திரம் எழுத்தி கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    நெல்லை:

    பாளை யூனியனுக்குட்பட்ட ராமையன்பட்டி பஞ்சாயத்து 4-வது வார்டு உறுப்பினர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் இன்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

    தர்ணா போராட்டம்

    அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் நடைபாதையில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாரியப்ப பாண்டியன் கூறியதாவது:-

    பஞ்சாயத்து உறுப்பினரான நான் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறேன்.

    பொய் வழக்கு

    எனது சமூக பணிகளை சீர்குலைக்கும் வகையில் மானூர் போலீசார் என் மீது பொய் வழக்கு போட்டு ள்ளனர். ஏற்கனவே என் மீது உள்ள வழக்குகளில் ஆர்.டி.ஓ. விடம் பிணை பத்திரம் எழுத்தி கொடுத்துள்ளேன். இப்படிப்பட்ட சூழ்நிலையில் என் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    எங்கள் பகுதியில் ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுடுகாடு நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கடந்த வாரம் மனு கொடுத்தேன். அதன் பின்னர் தான் என் மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனவே அதனை ரத்து செய்ய வேண்டும். அதுவரை எனது போராட்டம் தொடரும் என கூறினார்.

    • கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது.
    • உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினாா்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் மனுக்கள் அளித்தனா்.

    இதனைத் தொடா்ந்து, ஆதரவற்ற விதவை ஓய்வூதிய திட்டத்தின்கீழ் ஊட்டி, நஞ்சநாடு கிராமத்தைச் சோ்ந்த தங்கமணி என்பவருக்கு ரூ.1000 மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினாா்.பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தினாா்.

    மேலும், அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்களின் அடிப்படை வசதிகள் கோரும் மனுக்கள் மீது முன்னுரிமை அளித்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், முதல்வரின் முகவரி திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது அனைத்து அலுவலா்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

    இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தனபிரியா, மாவட்ட வழங்கல் அலுவலா் வாசுகி உள்பட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா். மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

    • கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது.
    • கோரிக்கை மனுவும் அவர்கள் வைத்திருந்த பையில் மண்எண்ணை கேன் இருந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. அதன்படி இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை கொண்டு வந்து அதிகாரியிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர். இந்த நிலையில் புவனகிரியை சேர்ந்த சசிகலா தனது தாய் அஞ்சம்மாள் (வயது67) ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார்.

    அப்பொழுது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சோதனை செய்தபோது கோரிக்கை மனுவும் அவர்கள் வைத்திருந்த பையில் மண்எண்ணை கேன் இருந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த மண்எண்ணை கேனை போலீசார் பறிமுதல் செய்தனர் பின்னர் அவர்களிடம் இருந்த கோரிக்கை மனுவில், எனது மகள் ராதிகா பிரியா என்பவருக்கும், சதீஷ்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் ராதிகாப்பிரியா கடந்த10.2.2022 அன்று இறந்து விட்டதால் மேற்படி இறப்பு தொடர்பாக அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறதுசதீஷ்குமார் என்பவரிடம் இருந்து தனது மகளுடைய நகை, பொருட்கள் அனைத்தையும் பெற்று தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அங்கிருந்து போலீசார் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக உரிய முறையில் அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என அறிவுரை கூறி மனு அளிக்க அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. 

    • மானூர் தெற்குபட்டியை சேர்ந்தவர் சங்கரன். இவர் தனது மகன் அருண் (வயது19) என்பவருடன் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனுகொடுக்க வந்தார்.
    • எனது மகன் அருண் நெல்லையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இதற்காக அவர் அங்குள்ள விடுதியில் தங்கி வருகிறார்.

    நெல்லை:

    மானூர் தெற்குபட்டியை சேர்ந்தவர் சங்கரன். இவர் தனது மகன் அருண் (வயது19) என்பவருடன் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனுகொடுக்க வந்தார். அவருக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி முத்துவளவன், ஆதிதமிழர் கட்சி கலைக்கண்ணன், தமிழர் உரிமை மீட்புகளம் லெனி, திராவிடர் தமிழர் கட்சி திருக்குமாரன் மற்றும் பல்வேறு அமைப்பினர் வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது மகன் அருண் நெல்லையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இதற்காக அவர் அங்குள்ள விடுதியில் தங்கி வருகிறார். அந்த விடுதியை சேர்ந்த காப்பாளர் ஒருவர் தனது மகனை அவதூறாக பேசியுள்ளார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டபோது அவர்கள் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    ×