search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில்  மண்எண்ணை கேனுடன்  வந்த  2 பெண்கள்
    X

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணை கேனுடன் வந்த 2 பெண்கள்

    • கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது.
    • கோரிக்கை மனுவும் அவர்கள் வைத்திருந்த பையில் மண்எண்ணை கேன் இருந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. அதன்படி இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை கொண்டு வந்து அதிகாரியிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர். இந்த நிலையில் புவனகிரியை சேர்ந்த சசிகலா தனது தாய் அஞ்சம்மாள் (வயது67) ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார்.

    அப்பொழுது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சோதனை செய்தபோது கோரிக்கை மனுவும் அவர்கள் வைத்திருந்த பையில் மண்எண்ணை கேன் இருந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த மண்எண்ணை கேனை போலீசார் பறிமுதல் செய்தனர் பின்னர் அவர்களிடம் இருந்த கோரிக்கை மனுவில், எனது மகள் ராதிகா பிரியா என்பவருக்கும், சதீஷ்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் ராதிகாப்பிரியா கடந்த10.2.2022 அன்று இறந்து விட்டதால் மேற்படி இறப்பு தொடர்பாக அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறதுசதீஷ்குமார் என்பவரிடம் இருந்து தனது மகளுடைய நகை, பொருட்கள் அனைத்தையும் பெற்று தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அங்கிருந்து போலீசார் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக உரிய முறையில் அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என அறிவுரை கூறி மனு அளிக்க அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×