search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில்  விவசாயிகளின் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம்வருகிற 23-ந்தேதி நடக்கிறது
    X

    கடலூரில் விவசாயிகளின் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம்வருகிற 23-ந்தேதி நடக்கிறது

    • மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் தலைமையில் காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது.
    • தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்துக்கொள்ள கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

    ஜூன் மாத விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 23-ந்தேதி வெள்ளிக் கிழமை புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் தலைமையில் காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. கடலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும். கூட்ட அரங்கில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் காலை 8 மணி முதல் 10.05 மணிக்குள் தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்துக்கொள்ள கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம். இக்குறைகளுக்கு சம்மந்தப்பட்ட துறையின் உயர் அலுவலர்கள் உரி யபதில் அளிக்கவும் மேலும் தொடர் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்ப்பினை கடலூர் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×