என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்திற்கு பெற்றோருடன் வந்த மாணவ-மாணவிகள்
- கலெக்டர் அலுவலகத்திற்கு பெற்றோருடன் மாணவ-மாணவிகள் வந்தனர்.
- ஆதிதிராவிடர் பள்ளி என பெயர் மாற்றப்பட்டுள்ளது
மதுரை
மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை மாணவ-மாணவிகள் கலெக்டர் சங்கீதாவை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மதுைர மாவட்டம் பேரையூர் வட்டம் சாப்டூர் ஊராட்சி சங்கரலிங்காபுரத்தில் உள்ள பழமையான சங்கராலிங்கபுரம் அரசு பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளிக்கு தற்போது அரசு ஆதிதிராவிடர் பள்ளி என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த பெயரை மாற்றவும் கூடாது, பழைய பெயரிலேயே செயல்பட வேண்டும். அதேபோல இந்த பள்ளியின் கட்டிடம் மிகவும் ேமாசமான நிலையில் உள்ளது.
அதனை சரிசெய்து தரும்படியும் மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். பெற்றோர்களுடன் மாணவ-மாணவிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






