search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People's Grievance Day Meeting"

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 530 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    இதில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 530 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அவற்றைக் பெற்றுக்கொண்ட கலெக்டர் பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

    தொடர்ந்து கூட்டுறவுத் துறை சார்பில் 14 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.83.50 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக் குழு கடனுதவி, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் பணியிட விபத்து மரண உதவித்தொகையாக தலா ரூ.5 லட்சம் வீதம் 2 பேருக்கு ரூ.10 லட்சம் உதவித்தொகை, 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.31,750 மதிப்பீட்டில் காதொலி கருவி, சக்கர நாற்காலி உள்ளிட்டவை என மொத்தம் 22 பயனாளிகளுக்கு ரூ.93.81 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    மேலும் மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் கீழ் உலகவங்கி நிதி உதவியுடன் செயல்பட்டு வரும் தமிழ்நாடு உரிமைகள் திட்டம், சமூகத் தரவு பதிவு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள், கையேடுகளை மாவட்ட கலெக்டர் வெளியிட்டார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், மாவட்ட வழங்கல் அலுவலர் முத்துராமலிங்கம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • கலெக்டர் வளர்மதி வழங்கினார்
    • ரூ.90ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். பொதுமக்கள் மற்றும் மாற்றுத்தி றனாளிகளிடமிருந்து மொத்தம் 243 கோரிக்கை மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கினார். பின்னர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை மனுதாரருக்கு தெரிவிக்கவும் உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.98 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பிலான செயற்கை கால்கள் வழங்கப்பட்டன. தாட்கோ மற்றும் தமிழ்நாடு சிமென்ட் கழகத்துடன் இணைந்து சிமெண்ட் விற்பனை முகவராகும் திட்டத்தின் கீழ் பயனாளிக்கு ரூ.90ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர்

    ஸ்ரீ வள்ளி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பூங்கொடி, மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார், தாட்கோ உதவி மேலாளர் அமுதா ராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா உள்பட 230 மனுக்கள் பெறப்பட்டன.
    • மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்த அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார்.

    230 மனுக்கள்

    கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோரு தல், பட்டாமாறுதல், மாற்ற த்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 230 மனுக்கள் பெறப்பட்டன.

    பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா? என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், உதவி ஆணையர் (கலால்) ராஜ மனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சங்கரநாராயணன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் (பொறுப்பு) நடராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு பாதுகாவலர் நியமன சான்றிதழை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
    • பட்டாமாறுதல் உள்பட மொத்தம் 303 மனுக்கள் கூட்டத்தில் பெறப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார்.

    இக்கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நல துறையில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 1 மாற்றுத்திறனாளிக்கு காதொலி கருவி, தேசிய உள்ளூர் குழு (எல்.சி) வாயிலாக 1 மாற்றுத்திறனாளிக்கு பாதுகாவலர் நியமன சான்றிதழையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    மாற்றுத்திறனாளிகள் நல துறையில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு மாற்றுத் திறனாளிக்கு காதொலி கருவி ரூ. 8,500 மதிப்பில் உதவி உபகரணம் மற்றும் தேசிய உள்ளுர் குழு (எல்.எல்.சி.) வாயிலாக ஒருவருக்கு பாதுகாவலர் நியமன சான்றுகளையும் வழங்கினார்.

    மேலும் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டாமாறுதல் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 303 மனுக்கள் பெறப்பட்டது.

    கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந் தப்பட்ட அனைத்துத்துறை அலுவ லர்களுக்கும் அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், வட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர நாராயணன், உதவி ஆணையர் (கலால்) ராஜ மனோகரன், மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராம சுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் மொத்தம் 280 மனுக்கள் பெறப்பட்டது.
    • மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ரவிச்சந்திரன் பெற்றுக் கொண்டார்.

    கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்திதரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 280 மனுக்கள் பெறப்பட்டது.

    பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா? என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதார ர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (பொறுப்பு) நடராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி கமிஷனர் (கலால்) ராஜமனோகரன், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன், மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 249 மனுக்கள் பெறப்பட்டன
    • நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிக ளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு. குறைகளை கேட்டறிந்தார்.

    கூட்டத்தில் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை கூட்டுறவு கடனுதவி உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பொது மக்கள் மனு அளித்தனர். மொத்தம் 249 மனுக்கள் பெறப்பட் டது.

    அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலாக ளிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    • நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது.
    • உடையார்பட்டி ஆற்றிற்கு செல்லும் நடைபாதையை சீரமைக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது. துணை மேயர் கே.ஆர்.ராஜூ, செயற்பொறியாளர் பாஸ்கரன், உதவி செயற்பொறியாளர் லெனின், உதவி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் கொடுத்த மனுவில், பாளை பஸ் நிலையத்தில் ஏற்கனவே இருந்த பெருந்தலைவர் காமராஜர் கல்வெட்டை மீண்டும் வைக்க வேண்டும். இல்லையென்றால் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

    தமிழ்புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழரசு கொடுத்த மனுவில்,பாளை காமராஜர் காலனியில் 36-வது வார்டு ரேசன் கடை மேற்கூரை இடிந்துள்ளது. எனவே அங்கு புதிய கட்டிடம் தர வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    12-வது வார்டு கவுன்சிலர் கோகிலவாணி கொடுத்த மனுவில், உடையார்பட்டி பள்ளியின் மேற்கூரையை சரிசெய்து தரவேண்டும். உடையார்பட்டி ஆற்றிற்கு செல்லும் நடைபாதையை சீரமைத்து தரவேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    • தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 353 மனுக்கள் பெறப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 353 மனுக்கள் பெறப்பட்டது. இந்தக்கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்னுலாப்தீன், மாவட்ட கலெக்டரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துமாதவன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கந்தசாமி, உதவி ஆணையர் (கலால்) ராஜமனோகரன், மாவட்ட கலெக்டரின் நோ்முக உதவியாளர் (நிலம்) ஷேக் அப்துல் காதர், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

    ×