search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை பஸ் நிலையத்தில் மீண்டும் காமராஜர் கல்வெட்டை நிறுவ வேண்டும்- மேயரிடம் காங்கிரசார் கோரிக்கை
    X

    மேயர் சரவணன் பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கிய காட்சி. அருகில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ.

    பாளை பஸ் நிலையத்தில் மீண்டும் காமராஜர் கல்வெட்டை நிறுவ வேண்டும்- மேயரிடம் காங்கிரசார் கோரிக்கை

    • நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது.
    • உடையார்பட்டி ஆற்றிற்கு செல்லும் நடைபாதையை சீரமைக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது. துணை மேயர் கே.ஆர்.ராஜூ, செயற்பொறியாளர் பாஸ்கரன், உதவி செயற்பொறியாளர் லெனின், உதவி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் கொடுத்த மனுவில், பாளை பஸ் நிலையத்தில் ஏற்கனவே இருந்த பெருந்தலைவர் காமராஜர் கல்வெட்டை மீண்டும் வைக்க வேண்டும். இல்லையென்றால் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

    தமிழ்புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழரசு கொடுத்த மனுவில்,பாளை காமராஜர் காலனியில் 36-வது வார்டு ரேசன் கடை மேற்கூரை இடிந்துள்ளது. எனவே அங்கு புதிய கட்டிடம் தர வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    12-வது வார்டு கவுன்சிலர் கோகிலவாணி கொடுத்த மனுவில், உடையார்பட்டி பள்ளியின் மேற்கூரையை சரிசெய்து தரவேண்டும். உடையார்பட்டி ஆற்றிற்கு செல்லும் நடைபாதையை சீரமைத்து தரவேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    Next Story
    ×