மாணவனை தாக்கிய விடுதி காப்பாளர் -கலெக்டர் அலுவலகத்தில் புகார்

மானூர் தெற்குபட்டியை சேர்ந்தவர் சங்கரன். இவர் தனது மகன் அருண் (வயது19) என்பவருடன் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனுகொடுக்க வந்தார். எனது மகன் அருண் நெல்லையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இதற்காக அவர் அங்குள்ள விடுதியில் தங்கி வருகிறார்.
மாணவனை தாக்கிய விடுதி காப்பாளர் -கலெக்டர் அலுவலகத்தில் புகார்
Published on

நெல்லை:

மானூர் தெற்குபட்டியை சேர்ந்தவர் சங்கரன். இவர் தனது மகன் அருண் (வயது19) என்பவருடன் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனுகொடுக்க வந்தார். அவருக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி முத்துவளவன், ஆதிதமிழர் கட்சி கலைக்கண்ணன், தமிழர் உரிமை மீட்புகளம் லெனி, திராவிடர் தமிழர் கட்சி திருக்குமாரன் மற்றும் பல்வேறு அமைப்பினர் வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது மகன் அருண் நெல்லையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இதற்காக அவர் அங்குள்ள விடுதியில் தங்கி வருகிறார். அந்த விடுதியை சேர்ந்த காப்பாளர் ஒருவர் தனது மகனை அவதூறாக பேசியுள்ளார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டபோது அவர்கள் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com