search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cauvery river"

    • அணையில் இருந்து உபரிநீர் வினாடிக்கு 1687 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • அணையின் முழு கொள்ளளவான 124.80 அடியில் தற்போது நீர்மட்டம் 98.06 அடியாக உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு இன்று காலை, நீர்வரத்து 3686 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து உபரிநீர் வினாடிக்கு 1687 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணையின் முழு கொள்ளளவான 124.80 அடியில் தற்போது நீர்மட்டம் 98.06 அடியாக உள்ளது. அதேபோல் கபினி அணைக்கு இன்று காலை நீர்வரத்து வினாடிக்கு 4726 கன அடியாக இருந்தது.

    அணையில் இருந்து வினாடிக்கு 1100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் முழு கொள்ளளவு 84 அடியில் தற்போதைய நீர்மட்டம் 75.82 அடியாக உள்ளது. கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் இன்று காலை 2 ஆயிரத்து 787 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

    • தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு திறந்துவிடும் தண்ணீரை நாளுக்கு நாள் குறைத்து வந்தது.
    • காவிரி கடைமடை பகுதிகளுக்கு போதிய தண்ணீர் வராததால் குறுவை சாகுபடி பயிர்கள் அனைத்தும் காய்ந்து கிடக்கின்றன.

    சென்னை:

    காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவின்படி செப்டம்பர் 12-ந்தேதி வரை 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.

    இந்த தண்ணீர் போதாது என்று தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இதேபோல் கர்நாடக அரசு முறையிட்டு உள்ளது.

    இந்நிலையில் தமிழ் நாட்டுக்கு கர்நாடக அரசு திறந்துவிடும் தண்ணீரை நாளுக்கு நாள் குறைத்து வந்தது.

    கடந்த 3 நாட்களில் தண்ணீர் திறப்பதை 3 ஆயிரம் கனஅடியாக கர்நாடக அரசு குறைத்துவிட்டது.

    இது தமிழக அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி கர்நாடக அரசு நடந்து கொள்வதால் வருகிற 12-ந் தேதி காவிரி நதிநீர் ஒழுங் காற்று குழுவில் தமிழக அரசு புகார் அளிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காவிரி கடைமடை பகுதிகளுக்கு போதிய தண்ணீர் வராததால் குறுவை சாகுபடி பயிர்கள் அனைத்தும் காய்ந்து கிடக்கின்றன.

    இந்த சூழலில் கர்நாடக அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை முழுமையாக திறந்துவிடாமல் தினமும் குறைத்துக் கொண்டே வருகிறது. சனிக்கிழமை காலை கே.ஆர்.எஸ். மற்றும் கபினி நீர்த்தேக்கங்களில் இருந்து தமிழகத்துக்கு 2787 கனஅடி வீதம் தண்ணீர்தான் கர்நாடக அரசு திறந்துவிட்டது.

    சுப்ரீம் கோர்ட்டில் காவிரி நீர் பிரச்சினை தொடர்பான வழக்கு விசாரணை 21-ந்தேதிக்கு தான் வருகிறது.

    இந்நிலையில் திறந்து விடப்படும் தண்ணீரை மேலும் கர்நாடக அரசு குறைத்து வருவதால் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம் வருகிற 20-ந்தேதி டெல்டா மாவட்டங்களில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

    தமிழக அரசு காவிரி ஒழுங்காற்று குழுவில் முறையிட இருப்பதால் அதற்கு பதிலளிக்கும் வகையில் கர்நாடக அரசும் விரிவான விளக்கத்தை தயாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வேலையின்மை அதிகரித்து வரும் நிலையில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.
    • கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை பெற்று கொடுக்க வேண்டும்.

    திருவோணம்:

    ஒரத்தநாடு போஸ்ட் ஆபீஸ் முன்பு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வை கண்டித்தும், வேலையின்மை அதிகரித்து வரும் நிலையில் வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் எனவும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் எனவும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் எனவும் டெல்டா விவசாயிகளை பாதுகாக்க கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை பெற்று கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரத்தநாடு போஸ்ட் ஆபீஸ் முன்பு ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ்குமார், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் மோகனதாஸ்,

    அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் பாஸ்கர், பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் போலீசார் கைது செய்தனர்.

    • 22 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
    • பரிசல்கள் இயக்கத்திற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டதால் ஒகேனக்கல் பரிசல்துறை அருகே பரிசல்கள் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளன.

    ஒகேனக்கல்:

    கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

    அங்கு கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் 22 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.

    இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் அதிகரித்து வந்தது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு நீர்வரத்தை அளவீடு செய்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

    • தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரிய வந்தது.
    • பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, குட்டப்பாடி பகுதியை சேர்ந்தவர் விஜய் காளிதாஸ் (33). டீ மாஸ்டர்.

    இவர் பவானி வர்ணபுரம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் மனைவி சில்பா மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார். பவானி வரதநல்லூர் பிரிவில் தனது அக்கா நடத்தி வரும் ஆவின் பாலகத்தில் டீ மாஸ்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் மனைவி சில்பா தனது தாய் வீட்டிற்கு கோவை சென்றார். 3 நாட்களும் விஜய் காளிதாஸ் குடித்துவிட்டு கடைக்கு வேலைக்கு செல்லாமல் மோட்டார் சைக்கிளில் செல்லும் பொழுது கீழே விழுந்து உடம்பில் காயம் ஏற்பட்டுள்ளது.

    சம்பவத்தன்று தனது அக்கா கணவரிடம் காவிரி ஆற்றிற்கு சென்று குளித்துவிட்டு வருவதாக கூறிச்சென்ற விஜய் காளிதாஸ் வெகு நேரம் ஆகியும் வராத நிலையில் அவர் குளிக்க சென்ற வரதநல்லூர் மயான அருகிலுள்ள காவிரி ஆற்றிக்கு சென்று பார்க்கும் பொழுது அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரிய வந்தது.

    இச்சம்பவம் தொடர்பாக பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • காவிரி ஆற்றில் துணி துவைக்க சென்ற கனிமொழி ஆற்றில் குளித்துள்ளார்.
    • அப்போது ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது நீரில் மூழ்கி உள்ளார்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்தவர் எட்வர்ட் தாமஸ். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு கனிமொழி (15) என்ற மகள் உள்ளார். லக்காபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கனிமொழி 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மதியம் காங்கேயம் பாளையம் காவிரி ஆற்றில் துணி துவைக்க சென்ற கனிமொழி துணி துவைத்து விட்டு ஆற்றில் குளித்துள்ளார்.

    அப்போது ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது நீரில் மூழ்கி உள்ளார். அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே கனிமொழி இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

    இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடந்த 3 ஆண்டுகளாக பருவ மழை பெய்யாததால் காவிரியில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
    • ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் குறைந்த அளவே கொட்டி வருகிறது.

    தருமபுரி:

    கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உருவாகும் காவிரி ஆறு 290 கிலோ மீட்டா் பயணித்து தமிழகத்தில் பிலிகுண்டுலு பகுதியில் நுழைந்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆறு வழியாக மேட்டூர் அணையை சென்றடைகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து சுமார் 12-க்கும் மேற்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், விவசாய பயன்பாட்டுக்கும் காவிரி நீர் பயன்படுகிறது.

    ஆண்டு தோறும் ஜூன், ஜூலை மாதங்களில் காவிரியில் நீர்வரத்து அதிகரிக்கும்.

    கர்நாடக மாநிலத்தில் மழை பெய்ய தொடங்கினால் அங்குள்ள கபினி, ஹேரங்கி, ஹேமாவதி, ஆகிய அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை சென்றடையும்.

    இந்த ஆண்டு பருவ மழை தொடங்காத காரணத்தால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்றைய நிலவரப்படி வினாடிக்கு 300 கன அடியாக குறைந்துள்ளது.

    நீர்வரத்து குறைந்ததன் காரணமாக பறந்து விரிந்த காவிரி ஆறு, சிறு ஓடை போல சுருங்கி தண்ணீர் ஆங்காங்கே குளம் போல் தேங்கி நின்று காட்சி அளிக்கிறது.

    தண்ணீர்வரத்து இல்லாத காரணத்தால் ஆற்றுப்பகுதி பாறைகளாக காட்சியளிக்கிறது.

    கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி முதல் 2.85 கன அடி வரை தண்ணீா் ஒகேனக்கல் பகுதியை கடந்து சென்றது.

    தற்போது தண்ணீா் வழிந்தோடிய பகுதிகள் வறண்டு பாறை முகடுகளாக காணப்படுகிறது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கூட்டு குடிநீர் ஏற்றும் பகுதிக்கு தண்ணீர் வராததால் மணல் மூட்டைகளை அடுக்கி சிறு ஓடைகளாக ஓடும் தண்ணீரை தேக்கி நீர் ஏற்றப்படுகிறது.

    400 கன அடியில் இருந்து 300 கன அடியாக நீர் வரத்து குறைந்துள்ளது.

    கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என அம்மாநில துணை முதலமைச்சரும், நீர்வளத் துறை அமைச்சருமான சிவகுமார் தெரிவித்து வருகிறார்.

    தற்பொழுது காவிரி ஆற்றில் குறைந்து வரும் நீரால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படும்.

    உடனடியாக தமிழக, மத்திய அரசு மற்றும் கர்நாடகா அரசிடம் பேசி மத்திய அரசின் நதி நீர் ஆணையம் பிறப்பித்துள்ள ஆணையின் படி தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை திறந்து விட வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளாக பருவ மழை பெய்யாததால் காவிரியில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.

    இந்த ஆண்டு நீர்வரத்து இல்லாததால் ஒகேனக்கல் காவிரி ஆறு வறண்டு வருகிறது. ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் குறைந்த அளவே கொட்டி வருகிறது.

    கடந்தாண்டு ஜூலை 15-ம் தேதி காவிரி ஆற்றில் நீர்வரத்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் முதல் 2.85 கனஅடி வரை இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடி பாசனத்துக்காக கடந்த 12-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்.
    • அணையில் இருந்து சீறிப் பாய்ந்து வெளியேறிய தண்ணீரில் மலர்களை தூவி வரவேற்றார்.

    பரமத்தி வேலூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்க ளின் குறுவை சாகுபடி பாசனத்துக்காக கடந்த 12-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். அணை யில் இருந்து சீறிப் பாய்ந்து வெளியேறிய தண்ணீரில் மலர்களை தூவி வரவேற்றார்.

    இந்த அணையின் மூலம் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் உள்ள 17.37 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. முதலில் 3 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விடப்பட்ட நிலையில், பின்னர் படிப்படியாக அதி கரிக்கப்பட்டு, அணையில் இருந்து சுமார் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவேரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி ஆற்றுப் பாலம் பகுதிக்கு வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து காவிரி ஆற்று தண்ணீர் மோகனூர் வழியாக திருச்சி சென்று கொண்டிருக்கிறது. இதனால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதிக்கு குடும்பத்துடன் ஜனார்த்தனன் சுற்றுலா வந்தார்.
    • கணவனும், மனைவியும் மகிழ்ச்சியுடன் குளித்துக் கொண்டிருந்தபோது அவர்களை அறியாமலேயே ஆழமான பகுதிக்கு இருவரும் சென்றுள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை அடுத்த குழந்தைநகர் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 27), விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி பவித்ரா (23). இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதிக்கு குடும்பத்துடன் ஜனார்த்தனன் சுற்றுலா வந்தார். அவருடன் நண்பர் ஒருவரும் குடும்பத்துடன் மற்றொரு வாகனத்தில் வந்ததாக தெரிகிறது.

    பூலாம்பட்டி கதவணை பகுதியில் குடும்பத்துடன் சுற்றி பார்த்த ஜனார்த்தனன், விசைப்படகில் சவாரி செய்தும் மகிழ்ந்தார். மேலும் படகு சவாரியின் போது 'செல்பி'யும் எடுத்து கொண்டனர். பின்னர் அங்குள்ள மோளப்பாறை பகுதிக்கு சென்ற ஜனார்த்தனன், குழந்தைகள் இருவரையும் ஒரு பாறையில் அமர வைத்து விட்டு மனைவியுடன் காவிரி ஆற்றில் குளிக்க இறங்கினார்.

    கணவனும், மனைவியும் மகிழ்ச்சியுடன் குளித்துக் கொண்டிருந்தபோது அவர்களை அறியாமலேயே ஆழமான பகுதிக்கு இருவரும் சென்றுள்ளனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்துள்ளனர். அவர்களது அபய குரல் கேட்டு குழந்தைகள் இருவரும் கரையில் இருந்து ஆற்றை பார்த்து அழுதனர்.

    குழந்தைகளின் அழுகுரலும், அந்த தம்பதியின் அபய குரலும் கேட்டு சிறிது தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் கணவன்-மனைவியை மீட்க ஆற்றுக்குள் இறங்கினர். அதற்குள் ஜனார்த்தனனும், அவருடைய மனைவியும் தண்ணீரில் மூழ்கினர்.

    ஆற்றுக்குள் இறங்கிய மீனவர்கள் கணவன்-மனைவி இருவரையும் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு பிணமாக மீட்டனர். பெற்றோரின் உடல்களை பார்த்து குழந்தைகள் இருவரும் பரிதவித்த காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆற்றில் மூழ்கிய தம்பதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    • தண்ணீரில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டு உடல் மிதப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
    • இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள ஒலகடம், எட்டிக்குட்டை பாலக்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (57). இவர் பி.எஸ்.என்.எல். டி.டி.ஆக பணியாற்றி தற்போது விருப்ப ஓய்வு பெற்று மனைவி மற்றும் மகன் ஆகியோருடன் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் ரங்கசாமி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில் அந்த தொழிலில் மிகுந்த நஷ்டம் காரணமாக கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் கடந்த சில நாட்களாக மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று தனது மனைவியிடம் வெளியே சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்து சென்றார். பின்னர் இரவு வரை ரங்கசாமி வீட்டிற்கு வராததால் அவரை உறவினர்கள் மற்றும் மகன் சந்தோஷ் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

    அப்போது குட்ட முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் சந்தோசுக்கு போன் செய்து ரங்கசாமி தந்தை பவானி அருகில் உள்ள ஜீவா நகரையொட்டி காவிரி ஆற்றில் உடைகளை ஒரு பாறையில் வைத்து விட்டு தண்ணீரில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டு உடல் மிதப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.

    இச்சம்பவம் குறித்து சந்தோஷ் பவானி போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவயிடம் சென்று காவிரி ஆற்றில் பிணமாக மிதந்த ரங்கசாமி உடலை மீட்டு பவானி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மின் நிலைய பராமரிப்புக்காக தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
    • காவிரி ஆற்றில் சிறிய வகை மீன் குஞ்சுகள் ஏராளமாக செத்து மிதந்தன.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த செக்கானூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை மின்நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் கதவனை மின் நிலையத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது.

    இதனால் காவிரி ஆற்றில் சிறிய வகை மீன் குஞ்சுகள் ஏராளமாக செத்து மிதந்தன. இதனைக் கண்ட அந்த கிராம மக்கள் மீன்குஞ்சுகளை குவியலாக அள்ளிச் சென்றனர். ஒரு சிலர் மீன் குஞ்சுகளை ஆற்றங்கரையில் உள்ள பாறைகளில் காய வைத்து கருவாடாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

    சீர்காழி அருகே மேலையூரில் உள்ள காவிரி ஆற்றின் கடைசி கதவணைக்கு வந்த மேட்டூர் நீைர பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலையூரில் காவிரி ஆற்றின் கடைசி கதவணை அமைந்துள்ளது. கர்நாடக மாநிலம் குடகு மலையில் உருவாகும் காவிரி ஆறு பல்லாயிரம் மைல்கள் கடந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலையூரில் உள்ள கடைசி கதவணை வழியாக பூம்புகார் கடலில் சங்கமிக்கும்.

    ஒவ்வொரு வருடமும் மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் இந்த கடைசி கதவனையை வந்தடையும். அவ்வாறு இந்த ஆண்டு மேட்டூரில் கடந்த 24ம் தேதி தமிழக முதல்வரால் திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் 10 நாட்களில் இக்கதவணையை இன்று வந்தடைந்தது. கதவணை வந்தடைந்த காவிரி தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள், மயிலாடுதுறை உபகாட்ட செயற் பொறியாளர் சண்முகம், உதவி பொறியாளர் சரவணன் மற்றும் விவசாயிகள் படையலிட்டும், மலர்தூவியும் வணங்கி வரவேற்றனர்.

    இக்கதவணையில் தண்ணீர் தேக்கி வைத்து ஒவ்வொரு பாசன ஆறுகள், கிளை வாய்க்கால்களுக்கும் மற்றும் பெருந்தோட்டம் ஏரிக்கும் முறைவைத்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். 

    இதன் மூலம் 3057 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதோடு பெருந்தோட்டம் ஏரி பாசனத்தின் மூலம் 2020 ஏக்கர் விளை நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

    தண்ணீர் வந்தடைந்தது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு உரிய நேரத்தில் காவிரி தண்ணீர் வந்து சேர்ந்த நிலையில் இந்த ஆண்டு 20 நாட்களுக்கு முன்னரே கிடைத்துள்ளதால் மகிழ்சியோடு கூடுதல் பரப்பளவில் சாகுபடியை தொடங்குவோம் என தெரிவித்தனார்.அதே நேரம் முறைவைக்காமல் தண்ணீரை தொடர்ந்து வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×