search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி நதிநீர்"

    • சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இன்று காலை முதலே விவசாயிகள் திரண்டனர்.
    • சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு ஏராளமான போலீசார் காலை முதலே குவிக்கப்பட்டு இருந்தனர்.

    சேலம்:

    காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று சேலம் ஜங்ஷனில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது.

    அதன்படி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இன்று காலை முதலே விவசாயிகள் திரண்டனர். பின்னர் தலைமை தபால் நிலையம் அருகில் இருந்து ஊர்வலமாக சென்று ரெயில் மறியலுக்கு முயன்றனர்.

    இதையொட்டி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு ஏராளமான போலீசார் காலை முதலே குவிக்கப்பட்டு இருந்தனர். ஊர்வலமாக சென்று ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு நுழைவு வாயில் பகுதியில் ரெயில் மறியலுக்கு முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது விவசாயிகள் அதனை மீறி உள்ளே நுழைய முயன்றனர். ஆனாலும் தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை கைது செய்தனர். இதில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தலைமையில் 30 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். 

    • தஞ்சை மாவட்டத்தில் வேளாண் துறை, புள்ளியல் துறை அதிகாரிகள் அறுவடை பரிசோதனை செய்தனர்
    • ஏக்கருக்கு 45 மூட்டை கிடைத்த நிலையில் தற்போது 30 முதல் 36 மூட்டை தான் கிடைக்கிறது.

    தஞ்சாவூர்:

    டெல்டா மாவட்ட குறுவை பாசனத்திற்கான கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆரம்பத்தில் 100 அடியை தாண்டி இருந்த தண்ணீர் நாட்கள் செல்ல செல்ல படிப்படியாக குறைந்தது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது . இதனால் டெல்டா மாவட்டங்களில் 3.5 லட்சம் ஏக்கரில் குறுவை பயிர்கள் கருகிவிட்டது. எஞ்சிய பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 78486 ஹெக்டேர் அளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டன. இவற்றில் 49000 ஹெக்டேர் பரப்பளவில் அறுவடை பணிகள் முடிந்து விட்டது. ஆனால் இந்த ஆண்டு தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசு வழங்காததாலும் போதிய மழைப்பொழிவு இல்லாததாலும் பிரபாகரன் குறுவைப் பயிர்கள் கருகி வீணாகி விட்டது. இந்த ஆண்டு 33 சதவீதம் அளவுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே தஞ்சை மாவட்டத்தில் வேளாண் துறை, புள்ளியல் துறை அதிகாரிகள் அறுவடை பரிசோதனை செய்தனர். அதில் அறுவடை செய்யும்போது ஹெக்டேருக்கு சராசரியாக 6000 கிலோ நெல் கிடைத்த இடத்தில் தற்போது சராசரியாக 4232 கிலோ நெல் தான் கிடைத்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து தஞ்சை மாவட்ட விவசாயிகள் கூறும்போது:-

    முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை குறுவையில் அதிக அளவில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடாததால் தஞ்சை மாவட்டத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்களிலும் பெருமளவில் குறுவைப் பயிர்கள் வீணாகிவிட்டது. அடுத்து சம்பா சாகுபடி தொடங்கலாமா என்பதே தெரியாத நிலையில் உள்ளோம். ஏக்கருக்கு 45 மூட்டை கிடைத்த நிலையில் தற்போது 30 முதல் 36 மூட்டை தான் கிடைக்கிறது. இதற்கு முன் இந்த அளவுக்கு இழப்பு ஏற்பட்டது கிடையாது. இலக்கிய மிஞ்சி குறுவை சாகுபடி செய்தும் தற்போது அது பயன் இல்லாமல் போய்விட்டது என்றனர்.

    • தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு, இந்தாண்டு தென்மேற்கு பருவமழை கைகொடுக்கவில்லை.
    • 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நாகுடி கடைவீதியில் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அறந்தாங்கி:

    காவிரி நீரை நம்பி புதுக்கோட்டை மாவட்டங்களில் சாகுபடி செய்த விவசாயிகள், எதிர்பார்த்த நீர்வரத்து இல்லாததால் கருகும் பயிர்களை காப்பாற்ற முடியாமல் கண்ணீர் வடிக்கின்றனர்.

    சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி. கடந்த ஜூன் 12ல், டெல்டா குறுவை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    அப்போது அணை நீர்மட்டம், 103.35 அடியாக இரு ந்தது. அணையிலிருந்து, 3,000 கன அடியிலிருந்து படிப்படியாக அதிகரித்து, 13 ஆயிரம் கனஅடி வரை நீர் திறக்கப்பட்டது.

    இதையடுத்து, 5 லட்சம் ஏக்கரில் டெல்டா விவசாயிகள் பயிர் நடவு செய்யும் பணியில் இறங்கினர்.

    அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டாலும், பல இடங்களில் உள்ள கடைமடை பகுதிகளில் தண்ணீர் செல்லவில்லை. டெல்டா மாவட்டங்களில், 1.5 லட்சம் ஏக்கரில் போர்வெல் மற்றும் பிற நீர் ஆதாரங்களை நம்பியும், காவிரி நீரை நம்பி, 3.5 லட்சம் ஏக்கரிலும் விவசாயம் நடக்கிறது.

    தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு, இந்தாண்டு தென்மேற்கு பருவமழை கைகொடுக்கவில்லை. இருப்பினும், கர்நாடகா அணைகளில் போதிய நீர் இருப்பு உள்ள நிலையில், குடிநீர் தேவையை காரணம் காட்டி, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகா அரசு மறுத்து வருகிறது.

    காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவையும் மதிக்காத கர்நாடகா அரசு, தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என, திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது.

    இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கல்லணைக்கால்வாய் கடைமடை பகுதியில் சுமார் 27 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்து ள்ளனர்.

    இந்தாண்டு பருவத்தோடு மழை பெய்யத் தொடங்கியதாலும் காவிரியில் தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் விவசாயப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர்.

    தற்போது தண்ணீர் வரத்தும் இல்லை. மழையும் இல்லை. இதனால், சூல் பருவத்தில் நெற்கதிர்கள் வெளிவருவதற்கு பதிலாக, பதர்கள் கருகி வெளிவரும் அபாயம் உருவாகியுள்ளது

    இதனால் மன வேதனையடைந்த விவசாயிகள் காவிரியில் தண்ணீர் திறத்துவிட மறுக்கும் கர்நாடகாவை கண்டித்தும், தண்ணீரை பெற்றுத்தர மத்திய அரசை வலியுறுத்தியும் கல்லணை கால்வாய்கடைமடை பகுதி பாசன தாரர்கள் சங்க தலைவர் கொக்கு மடை ரமேஷ் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நாகுடி கடைவீதியில் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகள், விவசாயிகள், அரசியல் கட்சிகள் கலந்துகொண்டு, தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி முழக்கமிட்டனர்.

    • கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 100.84 அடியாக இருந்தது.
    • கடந்த திங்கட்கிழமை 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 5ஆயிரத்து 607 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    சேலம்:

    கர்நாடகாவில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 76.11 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2ஆயிரத்து 64 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 100.84 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5ஆயிரத்து 682 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1688 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 2ஆயிரத்து 688 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கடந்த திங்கட்கிழமை 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 5ஆயிரத்து 607 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்று நீர்திறப்பு 5ஆயிரத்து 598 கனஅடியாக இருந்த நிலையில் இன்று 2ஆயிரத்து 688 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    • காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
    • காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 16ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தமிழக பாஜக அறிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    2018-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி முயற்சியால் காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தமிழகத்துக்கு காவிரி நதி நீர் கிடைத்து வந்தது.

    கர்நாடக மாநிலத்தில் தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன் காவிரி நதி நீரைத் திறந்து விடாமல், திட்டமிட்டு தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.

    தமிழகத்துக்கும், கேரளா, கர்நாடகா அண்டை மாநிலங்களுக்குமிடையே தீர்க் கப்படாத நதி நீர் பங்கீடு, அணை கட்டும் பிரச்சினை, கடந்த 50 ஆண்டுகளாக நிலவி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான சிக்கல்களும், பிரச்சினைகளும், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உருவானவை. இவற்றுக்கான நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த முயற்சிக்காமல் வீண் நாடகமாடி நீண்ட காலமாக தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றி வருகிறது.

    கர்நாடகா அணைகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமான தண்ணீர் இருந்தும் காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் தி.மு.க. அரசு தண்ணீரைப் பெற்றுத்தர திறனின்றி நடத்துகின்ற போராட்டம் கண்டனத்துக்குரியது.

    பா.ஜ.க.வின் சார்பில் டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன்களை காப்பாற்றுவதற்காக கும்பகோ ணத்தில் வருகிற 16-ந்தேதி (திங்கட்கிழமை) ஒருநாள் அடையாள உண் ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும்.

    இந்த போராட்டத்தை முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார். மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமை தாங்குகிறார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வரலாற்றுப்படி தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா ஆகிய 4 மாநிலங்களுக்கும் காவிரி மேல் ஒரு உரிமை உள்ளது.
    • காவிரி கர்நாடக மக்களின் தனிப்பட்ட சொத்து என்று நம்ப வைத்துள்ளனர்

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம், சுவாமிமலை பகுதியில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்த நடிகை கஸ்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி பிரச்சனையில் ஆளும் கட்சியினர் குரல் கொடுப்பதற்கும் மற்ற கட்சியினர் குரல் கொடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. காவிரி பிரச்சனையின் வரலாற்றை இன்றைய இளையதலைமுறையினர் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    வரலாற்றுப்படி தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா ஆகிய 4 மாநிலங்களுக்கும் காவிரி மேல் ஒரு உரிமை உள்ளது. இதில் தமிழகத்துக்கு மட்டும் 75 சதவீத உரிமை உள்ளது.

    காவிரி கர்நாடக மக்களின் தனிப்பட்ட சொத்து என்று நம்ப வைத்துள்ளனர். காவிரியில் நமக்கு தேவையான தண்ணீரை திறந்து விட வேண்டும். காவிரியில் தண்ணீர் தராத கர்நாடகாவுக்கு தமிழகத்தில் இருந்து மின்சாரம், உணவு பொருட்களை அனுப்பக்கூடாது

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எட்டு மாவட்டங்களில் அக்டோபர் 11 அன்று முழு கடை அடைப்பு போராட்டத்தை நடத்துவது என்று விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
    • ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பாக நடத்தப்படும் மறியல் போராட்டத்திற்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரியில் உடனடியாகத் தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய எட்டு மாவட்டங்களில் அக்டோபர் 11 அன்று முழு கடை அடைப்பு போராட்டத்தை நடத்துவது என்று விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

    இந்தப் போராட்டத்திற்கும் அன்றைய தினம் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பாக நடத்தப்படும் மறியல் போராட்டத்திற்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நாளை முதல் நடைபெற உள்ளது.
    • ஜெயிலர் படம் நான் நினைத்ததை விட மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

    சென்னை:

    ஜெயிலர் படத்திற்கு பின் நடிகர் ரஜினி தனது 170-வது படத்தில் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

    லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நாளை முதல் நடைபெற உள்ளது. படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ரஜினி கூறியதாவது:-

    ஜெயிலர் படம் நான் நினைத்ததை விட மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்ததாக நான் நடிக்கும் 170-வது படம் நல்ல கருத்துள்ள பிரமாண்ட பொழுது போக்குள்ள படமாக இருக்கும். இந்த படத்திற்கு தலைப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அடுத்து நான் நடிக்கும் 171-வது படமும் ஜனரஞ்சக படமாக இருக்கும் என்றார்.

    இதைத்தொடர்ந்து ரஜினியிடம் நிருபர்கள் கர்நாடகத்தில் காவிரி பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பினர். இந்த கேள்விக்கு ரஜினி சிரித்தபடி பதிலளிக்காமல் புறப்பட்டு சென்றார்.

    • டெல்டா மாவட்டங்களில் சுமார் 5 லட்சம் ஏக்கர் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது.
    • காவிரியில் தண்ணீர் குறைவாக வரும் காரணத்தினால் பல இடங்களில் பயிர்கள் கருக தொடங்கியது.

    நாகப்பட்டினம்:

    தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் 5 லட்சம் ஏக்கர் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் காவிரியில் தண்ணீர் குறைவாக வரும் காரணத்தினால் பல இடங்களில் பயிர்கள் கருக தொடங்கியது.

    இதைத் தொடர்ந்து விவசாயிகள் மற்ற நீர்நிலைகளை வைத்து காப்பாற்ற போராடி வருகின்றனர். மேலும் பல இடங்களில் குடங்களில் தண்ணீர் கொண்டு சென்று வயல்களில் ஊற்றும் அவலநிலை உள்ளது. காவிரி தண்ணீர் திறந்து விடகோரி விவசாயிகள் பல இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று குறுவை சாகுபடிக்கு கர்நாடகா அரசு தண்ணீர் கொடுக்க மறுப்பதை கண்டித்தும், காவிரி நீரை பெற்று தர உரிய அழுத்தம் கொடுக்காத மத்திய, மாநில அரசை கண்டித்தும் நாகை மாவட்டம் கீழ்வேளூர் ரெயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பாக ரெயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

    நாகையில் இருந்து திருச்சிக்கு சென்ற பயணிகள் ரெயிலை மறிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த ரெயில் மறியலில் ஈடுபட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • கர்நாடகத்திற்கு கூடுதலாக தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ளவே மேகதாது அணை கட்டப்பட வேண்டும் என்று கர்நாடக அரசு கூறுகிறது.
    • கர்நாடக அரசு, மேகதாது அணையை கட்டினால் அதிலும் தண்ணீரை சேமித்து வைத்துக்கொண்டு தமிழ்நாட்டிற்கு உரிய நீரை தர மறுக்கும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவேரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கு 205 டி.எம்.சி. அடி நீர் திறந்துவிட வேண்டும் என்ற காவேரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு, 192 டி.எம்.சி. அடி நீராக இறுதித் தீர்ப்பில் குறைக்கப்பட்டு, பின்னர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் 177.25 டி.எம்.சி. அடி அளவுக்கு குறைக்கப்பட்டு இறுதி செய்யப்பட்ட நிலையில், அந்தத் தண்ணீரைக்கூட கர்நாடக அரசு தர மறுப்பது உபரி நீரைத்தான் தர முடியும், உரிய நீரை தரமுடியாது என்பதைத் தான் தெளிவுபடுத்துகிறது.

    கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருந்தும் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறக்கமுடியாது என்று கூறுவதும், மேகதாது அணை கட்டினால் தண்ணீர் பிரச்சனை வராது என்று கூறுவதும் தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் எதிரான செயல். இப்பொழுதே தமிழ்நாட்டிற்கு உரிய நீரை தர மறுக்கும் கர்நாடக அரசு, மேகதாது அணையை கட்டினால் அதிலும் தண்ணீரை சேமித்து வைத்துக்கொண்டு தமிழ்நாட்டிற்கு உரிய நீரை தர மறுக்கும்.

    கர்நாடகத்திற்கு கூடுதலாக தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ளவே மேகதாது அணை கட்டப்பட வேண்டும் என்று கர்நாடக அரசு கூறுகிறதே தவிர, தமிழ்நாட்டிற்கு உரிய நீரை தருவதற்காக அல்ல. எனவே, மேகதாது அணை கட்டினால் தண்ணீர் பிரச்சினை வராது என்று க ர்நாடக முதலமைச்சர் கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம். கர்நாடக அரசின் செயல்பாடுகள் அனைத்துமே நீதிமன்ற அவமதிப்பு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் உரிமையை பாதிக்கும் செயலாகும்.

    உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழ்நாட்டிற்கு உரிய நீரை பெற்றிட ஏதுவாக, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து மத்திய அரசின் மூலமாகவும், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து காங்கிரஸ் மேலிடம் மூலமாகவும் கர்நாடக அரசுக்கு அழுத்தம் தரவும், காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் உச்ச நீதிமன்றம் மூலமாக வாதிடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2176 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • கபினி அணைக்கு வினாடிக்கு 854 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு4153 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2176 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதே போல் கபினி அணைக்கு வினாடிக்கு 854 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 3848 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று வினாடிக்கு 3176 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    • கர்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்புகள் மற்றும் விவசாய சங்கங்களின் சார்பில் இன்று முழு அழைப்பு போராட்டம் நடைபெற்றது.
    • கன்னட கூட்டமைப்புகளின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    ஓசூர்:

    காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்புகள் மற்றும் விவசாய சங்கங்களின் சார்பில் இன்று முழு அழைப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.

    கர்நாடகத்தில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் கன்னட அமைப்புகளின் சார்பில் சமீப நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று, கர்நாடக ரக்ஷன வேதிகே (சிவராம் கவுடா அணி) கன்னட ஜாக்ருதி வேதிகே, மற்றும் கன்னட கூட்டமைப்புகளின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    முன்னதாக, அத்திப்பள்ளியிலிருந்து மாநில தலைவர் சிவராம் கவுடா, மஞ்சுநாத் தேவா, நாகராஜ் ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக வந்த கன்னட அமைப்பினர், பின்னர் திடீரென தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில், பெண்கள் உள்பட சுமார் 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ×