search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி ஆற்றில் மூழ்கி"

    • பார்த்திபன் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது நீரில் மூழ்கி உள்ளார்.
    • தீயணைப்பு துறை வீரர்கள் நீண்ட நேரம் கழித்து இரவு பிணமாக மீட்டனர்.

    ஆப்பக்கூடல்:

    அந்தியூர் அருகே உள்ள ஆலாம்பாளையம் கெட்டி சமுத்திரம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ்-ருக்குமணி தம்பதியினர். இவர்களது மகன் பார்த்திபன் (18). கட்டிட தொழிலாளி.

    இந்நிலையில் பார்த்தி பன் தனது நண்பர்களான லட்சுமணன், மணிகண்டன் 2 பேருடன் சேர்ந்து கொண்டு ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி காவிரி ஆற்று பாலம் அருகே குளிக்க சென்று உள்ளனர்.

    அப்போது பார்த்திபன் மட்டும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது நீரில் மூழ்கி உள்ளார். உடன் சென்ற நண்பர்கள் காப்பாற்ற முடியாததால் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.

    பெற்றோர் சம்பவ இடத்திற்கு வந்த பார்த்து அந்தியூர் தீயணைப்புத் துறை மற்றும் ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.பார்த்திபனை ஆற்றில் தேடிய தீயணைப்பு துறை வீரர்கள் நீண்ட நேரம் கழித்து இரவு பிணமாக மீட்டனர்.

    பிணமாக மீட்ட பார்த்தி பன் உடலை அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு அனு ப்பி வைத்த போலீசார் வழ க்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகி ன்றனர். இன்று பார்த்திபன் உடல் அந்தியூர் அரசு மரு த்துவமனையில் பிரேத பரிசோதனை நடக்க இருக்கி றது. இச்சம்பவம் அப்பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியு ள்ளது.

    • தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரிய வந்தது.
    • பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, குட்டப்பாடி பகுதியை சேர்ந்தவர் விஜய் காளிதாஸ் (33). டீ மாஸ்டர்.

    இவர் பவானி வர்ணபுரம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் மனைவி சில்பா மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார். பவானி வரதநல்லூர் பிரிவில் தனது அக்கா நடத்தி வரும் ஆவின் பாலகத்தில் டீ மாஸ்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் மனைவி சில்பா தனது தாய் வீட்டிற்கு கோவை சென்றார். 3 நாட்களும் விஜய் காளிதாஸ் குடித்துவிட்டு கடைக்கு வேலைக்கு செல்லாமல் மோட்டார் சைக்கிளில் செல்லும் பொழுது கீழே விழுந்து உடம்பில் காயம் ஏற்பட்டுள்ளது.

    சம்பவத்தன்று தனது அக்கா கணவரிடம் காவிரி ஆற்றிற்கு சென்று குளித்துவிட்டு வருவதாக கூறிச்சென்ற விஜய் காளிதாஸ் வெகு நேரம் ஆகியும் வராத நிலையில் அவர் குளிக்க சென்ற வரதநல்லூர் மயான அருகிலுள்ள காவிரி ஆற்றிக்கு சென்று பார்க்கும் பொழுது அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரிய வந்தது.

    இச்சம்பவம் தொடர்பாக பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ரமேசும், கிஷோரும் திடீரென நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டனர்.
    • மகன், தந்தை நீரில் மூழ்கினர். சிறிது நேரத்தில் ரமேஷ் உடல் மீட்கப்பட்டது

    கொடுமுடி, 

    திருப்பூர் மாவட்டம் ஜவஹர் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (48). இவர் திருப்பூரில் சொந்தமாக பனியன் கம்பெனி நடத்தி வந்தார். இவரது மகன் நந்த கிஷோர் (19). கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ரமேஷ் அவருடைய அண்ணன் பாலமுருகன், அக்கா லதா ஆகியோர் குடும்பத்துடன் ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே கருவேலம்பாளையத்தில் உள்ள காவிரி ஆற்றுக்கு சென்று குளிக்க முடிவு செய்திருந்தனர்.

    இதைத் தொடர்ந்து ரமேஷ் அவரது மகன் நந்த கிஷோர் உட்பட குடும்பத்தினர் 14 பேர் காரில் புறப்பட்டு நேற்று மதியம் கருவேலம்பாளையம் வந்தனர். பின்னர் குழந்தைகள் தவிர அனைவரும் அங்குள்ள காவிரி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர்.

    அப்போது ரமேசும், அவரது மகன் நந்தகிஷோரூம் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது. இந்நிலையில் ரமேசும், கிஷோரும் திடீரென நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டனர்.

    இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர். அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்கள் அவர்களைக் காப்பாற்ற முயன்றனர். எனினும் மகன், தந்தை நீரில் மூழ்கினர். சிறிது நேரத்தில் ரமேஷ் உடல் மீட்கப்பட்டது.

    ஆனால் நந்திகிஷோர் என்ன ஆனார் என தெரியவில்லை. இது குறித்து கொடுமுடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தேடினர்.

    நீண்ட போராட்டத்துக்குப் பிறகு நந்தகிஷோர் உடலும் மீட்கப்பட்டது.

    இவரது உடல்களையும் பார்த்து அவர்களது உறவினர்கள் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    பின்னர் இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்ப ட்டது. இன்று பிரேத பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படு கிறது.

    இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • குடிபோதையில் காவிரி கரை ஆற்றில் குளிக்க சென்றார்.
    • எதிர்பாராத விதமாக பார்த்திபன் நீரில் மூழ்கினார்.

    ஈரோடு:

    ஈரோடு ரங்கம்பாளையம் சென்னிமலை ரோடு பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (37). கடந்த 15 வருடமாக பார்த்திபனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இவர் தனது தம்பியுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று பார்த்திபன் குடிபோதையில் காவிரி கரை ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக பார்த்திபன் நீரில் மூழ்கினார்.

    இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து சிறிது நேரத்தில் பார்த்திபன் உடல் மீட்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சொக்கப்பன் வீட்டிற்கு அருகே ஓடும் காவிரி ஆற்றில் குளிக்க சென்றார்.
    • அப்போது எதிர்பாரதவிதமாக தண்ணீரில் மூழ்கினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா நெரிஞ்சிப்பேட்டை மீராசா வீதியை சேர்ந்தவர் சொக்கப்பன் (56). தொழிலாளி. இவருக்கு தங்கமணி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்.

    சொக்கப்பன் வீட்டிற்கு அருகே ஓடும் காவிரி ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாரதவிதமாக தண்ணீரில் மூழ்கினார்.

    இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சொக்கப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    ×