காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

பார்த்திபன் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது நீரில் மூழ்கி உள்ளார்.தீயணைப்பு துறை வீரர்கள் நீண்ட நேரம் கழித்து இரவு பிணமாக மீட்டனர்.
காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி
Published on

ஆப்பக்கூடல்:

அந்தியூர் அருகே உள்ள ஆலாம்பாளையம் கெட்டி சமுத்திரம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ்-ருக்குமணி தம்பதியினர். இவர்களது மகன் பார்த்திபன் (18). கட்டிட தொழிலாளி.

இந்நிலையில் பார்த்தி பன் தனது நண்பர்களான லட்சுமணன், மணிகண்டன் 2 பேருடன் சேர்ந்து கொண்டு ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி காவிரி ஆற்று பாலம் அருகே குளிக்க சென்று உள்ளனர்.

அப்போது பார்த்திபன் மட்டும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது நீரில் மூழ்கி உள்ளார். உடன் சென்ற நண்பர்கள் காப்பாற்ற முடியாததால் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.

பெற்றோர் சம்பவ இடத்திற்கு வந்த பார்த்து அந்தியூர் தீயணைப்புத் துறை மற்றும் ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.பார்த்திபனை ஆற்றில் தேடிய தீயணைப்பு துறை வீரர்கள் நீண்ட நேரம் கழித்து இரவு பிணமாக மீட்டனர்.

பிணமாக மீட்ட பார்த்தி பன் உடலை அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு அனு ப்பி வைத்த போலீசார் வழ க்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகி ன்றனர். இன்று பார்த்திபன் உடல் அந்தியூர் அரசு மரு த்துவமனையில் பிரேத பரிசோதனை நடக்க இருக்கி றது. இச்சம்பவம் அப்பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியு ள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com