search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "river was also recovered"

    • ரமேசும், கிஷோரும் திடீரென நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டனர்.
    • மகன், தந்தை நீரில் மூழ்கினர். சிறிது நேரத்தில் ரமேஷ் உடல் மீட்கப்பட்டது

    கொடுமுடி, 

    திருப்பூர் மாவட்டம் ஜவஹர் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (48). இவர் திருப்பூரில் சொந்தமாக பனியன் கம்பெனி நடத்தி வந்தார். இவரது மகன் நந்த கிஷோர் (19). கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ரமேஷ் அவருடைய அண்ணன் பாலமுருகன், அக்கா லதா ஆகியோர் குடும்பத்துடன் ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே கருவேலம்பாளையத்தில் உள்ள காவிரி ஆற்றுக்கு சென்று குளிக்க முடிவு செய்திருந்தனர்.

    இதைத் தொடர்ந்து ரமேஷ் அவரது மகன் நந்த கிஷோர் உட்பட குடும்பத்தினர் 14 பேர் காரில் புறப்பட்டு நேற்று மதியம் கருவேலம்பாளையம் வந்தனர். பின்னர் குழந்தைகள் தவிர அனைவரும் அங்குள்ள காவிரி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர்.

    அப்போது ரமேசும், அவரது மகன் நந்தகிஷோரூம் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது. இந்நிலையில் ரமேசும், கிஷோரும் திடீரென நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டனர்.

    இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர். அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்கள் அவர்களைக் காப்பாற்ற முயன்றனர். எனினும் மகன், தந்தை நீரில் மூழ்கினர். சிறிது நேரத்தில் ரமேஷ் உடல் மீட்கப்பட்டது.

    ஆனால் நந்திகிஷோர் என்ன ஆனார் என தெரியவில்லை. இது குறித்து கொடுமுடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தேடினர்.

    நீண்ட போராட்டத்துக்குப் பிறகு நந்தகிஷோர் உடலும் மீட்கப்பட்டது.

    இவரது உடல்களையும் பார்த்து அவர்களது உறவினர்கள் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    பின்னர் இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்ப ட்டது. இன்று பிரேத பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படு கிறது.

    இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×