குடிபோதையில் காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

குடிபோதையில் காவிரி கரை ஆற்றில் குளிக்க சென்றார்.எதிர்பாராத விதமாக பார்த்திபன் நீரில் மூழ்கினார்.
குடிபோதையில் காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி
Published on

ஈரோடு:

ஈரோடு ரங்கம்பாளையம் சென்னிமலை ரோடு பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (37). கடந்த 15 வருடமாக பார்த்திபனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இவர் தனது தம்பியுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று பார்த்திபன் குடிபோதையில் காவிரி கரை ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக பார்த்திபன் நீரில் மூழ்கினார்.

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சிறிது நேரத்தில் பார்த்திபன் உடல் மீட்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com