search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cash"

    • காசோலையை வங்கியில் செல்வராஜ் செலுத்தியபோது பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்துவிட்டது.
    • 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அடுத்த பரவாக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 82).விவசாயி.

    இவரிடம் மன்னார்குடி நியூ பைபாஸ் ரோடு புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த ஓட்டல் தொழில் செய்து வரும் சத்தியமூர்த்தி (வயது 55) என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு ரூ 4 லட்சம் செல்வராஜ் கடன் வாங்கி உள்ளார்.

    கடனை செல்வராஜ் திருப்பி கேட்ட பொழுது சத்தியமூர்த்தி கடன் தொகைக்காக காசோலை வழங்கியுள்ளார்.

    காசோலையை வங்கியில் செல்வராஜ் செலுத்தியபோது பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்துவிட்டது.

    இதனை அடுத்து மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1 -ல் செல்வராஜ் கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் வழக்கு தொடர்ந்தார்.

    கடந்த பத்தாண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் நேற்று முன்தினம் முன்னாடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார் தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட சத்தியமூர்த்தி கடன்தொகையில் இரு மடங்கு தொகையான ரூ 8 லட்சத்தை அபராதமாக செலுத்த வேண்டும்.

    மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் கூடுதலாக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.

    • வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு வெளியே சென்றுள்ளார்.
    • பூட்டை கோடாரியால் உடைத்து உள்ளே புகுந்து தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கே.கிருஷ்ணாபுரம் பிரிவில் வசிக்கும் ஆறுமுகம் மகன் சுப்பிரமணி (58) என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு வெளியே சென்றுள்ளார்.

    திரும்பி வந்து பார்க்கையில் வீட்டின் பூட்டை கோடாரியால் உடைத்து உள்ளே புகுந்து பீரோவை திறந்து வைத்திருந்த 14பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து விவசாயி சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • மூன்று வீடுகளும் முற்றிலும் எரிந்ததில் வீட்டிலிருந்த உணவு பொருட்கள் உட்பட தளவாட சாமான்கள் சேதமடைந்தது.
    • அரசு நிவாரண உதவியாக ஒரு வீட்டிற்கு ரூ. 5000 ரொக்கமும், வேஷ்டி, சேலை, அரிசி உள்ளிட்ட பொருட்களும் மூன்று வீடுகளுக்கு வழங்கப்பட்டது.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள உமையாள்புரம் ஊராட்சியில் தட்சன் இருப்பு தெருவில் வசிப்பவர் ஜெயராமன் (வயது 80). விவசாயக்கூலி.

    கூரை வீட்டில் வசித்து வந்த இவர் நேற்று வீட்டில் சுடுதண்ணீர் அடுப்பில் வைத்து விட்டு கொல்லைப்புறம் சென்று விட்டார்.

    அப்போது மேல்கூரையில் தீப்பிடித்து எரிந்தது.இதனால் அருகில் வசித்த சுந்தரமகம் மகன் சக்திவேல் (45), கணேசன் (75), ஆகியோர் வீடுகளும் தீப்பிடித்து எரிந்தன.

    உடனடியாக இதனை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பாபநாசம் தீயணைப்பு நிலையத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் அனைத்தனர்.

    மூன்று வீடுகளும் முற்றிலும் எரிந்ததில் வீட்டிலிருந்த உணவுப் பொருட்கள் உட்பட தளவாட சாமான்கள் சேதம் ஏற்பட்டது.

    இதில் ரூ.1.5 லட்சம் சேதம் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, மண்டல துணை வட்டாட்சியர் பிரியா, ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன், ஒன்றிய கவுன்சிலர் ஆனந்த், வருவாய் ஆய்வாளர் சுகுணா, கிராம நிர்வாக அலுவலர் சதீஷ், ஆகிய விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டு அவர்களுக்கு அரசு நிவாரண உதவியாக ஒரு வீட்டிற்கு 5000 ரொக்க பணமும், வேஷ்டி, சேலை, அரிசி உள்ளிட்ட பொருட்களை மூன்று வீடுகளுக்கும் வழங்கி ஆறுதல் கூறினர்.

    • 20 ஆண்டுகளுக்கு மேலாக மளிகை கடை நடத்தி வருபவர் கந்தசாமி.
    • மளிகை கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம், முத்தூர், முத்துமங்கலம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மளிகை கடை நடத்தி வருபவர் கந்தசாமி (வயது57) . இவர் வழக்கம் போல் நேற்று 16ந் தேதி தனது மளிகை கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இன்று சனிக்கிழமை காலை வந்து பார்க்கும்போது கடையின் மேல் உள்ள சிமெண்ட் சீட்டை பிரித்து உள்ளே இறங்கி கடையில் இருந்த ரொக்கம் ரூ. 5 ஆயிரம் மற்றும் நகை திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.இது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தற்போது முத்தூர் -வெள்ளகோவில்-காங்கயம் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வருவதால் காவல்துறையினர் ரோந்து பணி மற்றும் வாகனத் தணிக்கையை தீவிர படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • இறுதிப் போட்டிக்கு தேர்வான 4 அணிகளுக்கு நாக்-அவுட் முறையில் போட்டி நடத்தப்பட்டது.
    • போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கம் மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம் வேளாங்கண்ணியை அடுத்த விழுந்தமாவடியில் ஊராட்சி மற்றும் விழுவை நண்பர்கள் இணைந்து மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடத்தினர். கிரிக்கெட் போட்டியில் புதுக்கோட்டை, பழனி, திண்டுக்கல், தஞ்சாவூர், கடலூர், நாகை, திருவாரூர் மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 32 அணிகள் பங்கேற்ற நிலையில், இறுதிப் போட்டிக்கு தேர்வா ன 4 அணிகளுக்கு நாக்-அவுட் முறையில் போட்டி நடத்தப்பட்டது.

    போட்டியில் தோப்புத்து றை கியூஎம்சிசி கிரிக்கெட் கிளப் அணியினர் முதல் பரிசுத் தொகையான ரூ.50 ஆயிரம் மற்றும் கோப்பையும், 2வது பரிசு 40 ஆயிரம் மற்றும் கோப்பையை விழுந்தமாவடி விஎம்டபுள்யுசிசி அணியி னரும்,

    3வது பரிசினை 30 ஆயிரம் மற்றும் கோப்பையை நாகூர் ஆர்கே என் எப்சிசிஅணியினரும் பெற்றனர்.

    இந்நிகழ்ச்சியில் விழுந்தமாவடி ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கம், துணைத் தலைவர் அகிலா வெங்கடேஷ், கிராம நாட்டாண்மை பூமாலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியை விழுவை கோவிந்த் தொகு த்து வழங்கினார்.

    • வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளது.
    • 6 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அரசு மருத்துவமனை எதிரே ராஜாஜி வீதியில் வசிப்பவர் அப்துல்வகாப் (வயது52). இவருக்கு திருமணமாகி ரோஜா (48) என்ற மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் திருமுருகன்பூண்டியில் மளிகை கடையும், திருப்பூரில் ஸ்டேசனரி கடையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள இவரது உறவினர் துக்க நிகழ்வுக்கு வீட்டை பூட்டிவிட்டு கடந்த 3-ந் தேதி குடும்பத்துடன் மைசூர் சென்றுவிட்டார். நேற்று மாலை 6 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளது.

    உள்ளே சென்று பார்த்தபோது மர பீரோ உள்ளிட்ட 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த 60 பவுன் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணம் ரூ. 6 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும். தகவலறிந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, சசாங் சாய், அவினாசி போலீஸ் துணை சூப்பிரண்டு பவுல்ராஜ், இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரனை மேற்கொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வீட்டு உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டார்.

    கொள்ளை நடந்த வீதியில் தெருவிளக்குகள் எதுவும் எரியவில்லை. நள்ளிரவு 1.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கொள்ளை நடந்த வீட்டிற்கு சிறிது தொலைவில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அந்த வீதியில் சுற்றியதாக அப்பகுதியை சேர்ந்த ஒருவர்தெரிவித்தார். அதனை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    • முன்பக்க கதவு உடைக்கப்பட்டு தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்க பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.
    • அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. பதிவுகளை கைப்பற்றி, அதனடிப்படையில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வாணாதிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்மகன் பிரகாஷ்.

    இவர் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி மதுமிதா பிரசவத்துக்காக நாகப்பட்டினத்தில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றுள்ளதால் பிரகாஷின் தந்தை ராமகிருஷ்ணன் அவ்வப்போது வந்து வீட்டை பார்த்து சென்று வந்துள்ளார்.

    கடைசியாக நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்த ராமகிருஷ்ணன் பின்னர் வீட்டை பூட்டி சென்றுள்ளார்.

    இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் அவர் வந்தபோது வீட்டின் கிரில் கதவு மற்றும் முன்பக்க கதவு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பூஜையறை உடைக்கப்பட்டு உள்ளே மர பீரோவில் வைத்திருந்த 54 சவரன் தங்க நகைகள், 1 ½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ 21ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியன கொள்ளையடிக்க ப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து ராமகிரு ஷ்ணன் குத்தாலம் காவல் நிலையத்தில் கொள்ளை சம்பவம் குறித்து புகார் தெரிவித்தார்.

    உடனடியாக மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் நிஷா, டி.ஸ்.பி வசந்தராஜ் மற்றும் குத்தாலம் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி, அதன் அடிப்ப டையில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    பிரதான சாலைப் பகுதியில் அமைந்துள்ள அவ்வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

    • வெள்ளகோவில் போலீஸ் சம்பாம்பாளையத்தில் கண்காணித்தனர்.
    • தோட்டத்தில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், முத்தூர் அருகே உள்ள சம்பாம்பாளையம் என்ற கிராமத்தில் பணம் வைத்து சூதாடுவதாக வெள்ளகோவில் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய போலீஸ் தனிப்படையினர் முத்தூர் அருகே உள்ள சம்பாம்பாளையத்தில் கண்காணித்த போது ஒரு தோட்டத்தில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.1,43,700 பணத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஒரு சில இடங்களில் பெட்டிக்கடைகளில் மதுப்பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார்கள் சென்றது.
    • மதுப்பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்ட பட்டுக்கோட்டையில் 3 இடங்களில் 700 மதுபாட்டில்களும், ரூ.20 ஆயிரம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கும் முன்பாகவும், கடைகள் மூடிய பின்னரும் மதுப்பாட்டில்களை பார்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அதே போல் ஒரு சில இடங்களில் பெட்டிக்கடைகளில் மதுப்பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார்கள் சென்றது.இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார், தலைமை காவலர்கள் உமாசங்கர், ராஜேஷ், காவலர்கள் அருள்மொழிவர்மன், அழகுசுந்தரம், நவீன் ஆகியோர், பட்டுக்கோ ட்டையில் டாஸ்மாக் பார்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    இதில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் முன்பே பார்கள் திறந்து அதில் மதுப்பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்ட பட்டுக்கோட்டையில் 3 இடங்களில் 700 மதுபாட்டில்களும், ரூ.20 ஆயிரம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பட்டு க்கோட்டை ஆலடி க்குமுளையைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 50), முதல்சேரி பாலுசாமி (47), ஒரத்தநாடு ரமேஷ் (46) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சேலம் சிவதாபுரம் பனங்காடு சித்தர்கோவில் மெயின் ரோடு பகுதியில் 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
    • 4 பேர் கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

    கொண்டலாம்பட்டி:

    சேலம் சிவதாபுரம் பனங்காடு சித்தர்கோவில் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் வீரமுத்து. இவரது மகன் தீனதயாளன் (வயது 28). இவர் செவ்வாய்பேட்டை பங்களா தெருவில் வெள்ளி பட்டறையில் வேலை செய்து வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் வேலை முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் கந்தம்பட்டி அருகே உள்ள ரெயில்வே தரை பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு பின்னால் மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் தீனதயாளனை வழிமறித்து தாக்கி ஒரு பவுன் தங்க சங்கிலி மற்றும் ரூ.4800 பணத்தைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தீனதயாளன் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடுகிறார்கள்.

    • கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச ஆடு வழங்கப்பட்டது.
    • அவரவர் வங்கிக் கணக்கில் ரொக்கமாக ரூ.17 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது.

    தரங்கம்பாடி:

    தமிழக முதல்-அமை ச்சர் மு.க. ஸ்டாலின் ஆணை க்கிணங்கமயிலாடு துறை மாவட்ட தி.மு.க. செயலாளரும், பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. வுமான நிவேதா முருகன் பரிந்துரையின் கீழ் செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச ஆடு வழங்கும் விழா செம்பனார்கோயிலில் நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினிஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைத் தலைவர் மைனர் பாஸ்கர், வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், தெற்கு ஒன்றிய செயலாளர் மாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை மருத்துவர் அன்பரசன் வரவேற்றார். 100 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கப்பட்டது. இதில் அவரவர் வங்கிக் கணக்கில் ரொக்கமாக ரூ.17 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இதை வளர்த்துக்கொண்டு வருமானத்தை மேம்படு த்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் ரஜினி, மோகன்தாஸ், கால்நடை மருத்துவர்கள் சிவரஞ்சனி, சரத்குமார், சரவணன், மோகனகிருஷ்ணன் மற்றும் உதவியாளர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் ஊராட்சி செயலர் சாமிநாதன் நன்றி கூறினார்.

    • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கோழிகால்நத்தம் பகுதியில் வாலிபரை தாக்கி செல்போன் -பணம் பறித்து சென்றனர்.
    • 2 வாலிபர்கள் சீனிவாசனிடம் தகராறில் ஈடுபட்டு பீர் பாட்டிலால் மண்டையில் தாக்கினர்.

    கொண்டலாம்பட்டி:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கோழிகால்நத்தம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் சீனிவாசன் (வயது 27). நேற்று மாலை சேலத்திற்கு வந்த இவர் புதியதாக செல்போன் வாங்கி கொண்டு புதிய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் சீனிவாசனிடம் தகராறில் ஈடுபட்டு பீர் பாட்டிலால் மண்டையில் தாக்கி அவரிடம் இருந்து புதிய செல்போன் மற்றும் 2500 ரூபாய் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.படுகாயமடைந்த சீனிவாசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    ×