search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி வீடு"

    • காட்டுக்கொட்டகை தீப்பிடித்து எறிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • வீட்டிலிருந்த கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் தீக்கிரையானது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த புலிகாரம்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் முருகேசன் (வயது 45). விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில் காட்டுக் கொட்டகை வீடு கட்டி வசித்து வருகிறார். வீட்டிற்கு தேவையான காய்கறிகள் வாங்குவதற்கு நேற்று இரவு 8 மணி அளவில் ராமநத்தம் சென்றார். இரவு 9.45 மணிக்கு வீடு திரும்பினார். அப்ேபாது இவரது காட்டுக்கொட்டகை தீப்பிடித்து எறிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதில் காட்டு கொட்டகை வீடு முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது. வீட்டிலிருந்த கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் தீக்கிரையானது. இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திட்டக்குடி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் மேலும் விளை நிலத்திற்கு தீ பரவாமல் அணைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ராமநத்தம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து காட்டுக்கொட்டைக்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார்? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரத்தில் காட்டுக் கொட்டகை வீடு தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    • ராஜபாளையத்தில் விவசாயி வீட்டில் திருட்டு நடந்துள்ளது.
    • இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் பெத்தையாபிள்ளை தெருவை சேர்ந்தவர் ரகுநாதன் (வயது 51). விவசாயியான இவருக்கு ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி காந்தி நகர் பகுதியில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது.

    தினமும் காலையில் அந்த வீட்டுக்கு சென்று திரும்புவது வழக்கம். சம்பவத்தன்று இவர் தங்கை பிரிய தர்ஷினி, வேலைக்கார பெண்ணுடன் அங்கு சென்று சுத்தப்படுத்திவிட்டு வீட்டு கதவை பூட்டி திரும்பி விட்டனர்.

    நேற்று காலை வழக்கம் போல் அந்த வீட்டுக்கு சென்று பார்த்தபோது வெளிப்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த ரகுநாதன் உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தது. பூஜை அறையில் இருந்த வெள்ளி செம்பு, காமாட்சி விளக்கு உள்ளிட்ட வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும்.

    இது குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் ரகுநாதன் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு வெளியே சென்றுள்ளார்.
    • பூட்டை கோடாரியால் உடைத்து உள்ளே புகுந்து தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கே.கிருஷ்ணாபுரம் பிரிவில் வசிக்கும் ஆறுமுகம் மகன் சுப்பிரமணி (58) என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு வெளியே சென்றுள்ளார்.

    திரும்பி வந்து பார்க்கையில் வீட்டின் பூட்டை கோடாரியால் உடைத்து உள்ளே புகுந்து பீரோவை திறந்து வைத்திருந்த 14பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து விவசாயி சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • சிதம்பரத்தில் பரபரப்பு கோவிலுக்கு சென்ற விவசாயி வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • மயிலாடுதுறையில் உள்ள இவரது உறவினர் ஒருவர் வீட்டில் தங்கினார்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே வல்லம்படுகை பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் (வயது 62) விவசாயி இவர் நேற்று முன்தினம் மயிலாடுதுறையில் உள்ள திருநாகேஸ்வரர் கோவிலுக்கு தனது குடும்பத்துடன் பரிகாரம் செய்து சாமி தரிசனம் செய்யச் சென்றார். அதன் பின்னர் மயிலாடுதுறையில் உள்ள இவரது உறவினர் ஒருவர் வீட்டில் தங்கினார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் அவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுளைந்து கொள்ளையடித்து சென்றனர். இதைப் பார்த்த அக்கம்பக்கம் உள்ளவர்கள் வீட்டின்பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை வீட்டின் உரிமையாளர் அன்பழகனுக்கு தெரிவித்தார். உடனே தகவல் அறிந்த அன்பழகன் வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்து 6.30 பவுன் மற்றும் ரொக்க பணம் ரூ.80,000 கொள்ளை போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து அண்ணாமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த அண்ணாமலை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து இதற்கு காரணமான மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்

    ×