சிதம்பரத்தில் பரபரப்பு கோவிலுக்கு சென்ற விவசாயி வீட்டில் நகை-பணம் கொள்ளை

சிதம்பரத்தில் பரபரப்பு கோவிலுக்கு சென்ற விவசாயி வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.மயிலாடுதுறையில் உள்ள இவரது உறவினர் ஒருவர் வீட்டில் தங்கினார்.
சிதம்பரத்தில் பரபரப்பு கோவிலுக்கு  சென்ற விவசாயி வீட்டில் நகை-பணம் கொள்ளை
Published on

கடலூர்:

சிதம்பரம் அருகே வல்லம்படுகை பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் (வயது 62) விவசாயி இவர் நேற்று முன்தினம் மயிலாடுதுறையில் உள்ள திருநாகேஸ்வரர் கோவிலுக்கு தனது குடும்பத்துடன் பரிகாரம் செய்து சாமி தரிசனம் செய்யச் சென்றார். அதன் பின்னர் மயிலாடுதுறையில் உள்ள இவரது உறவினர் ஒருவர் வீட்டில் தங்கினார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் அவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுளைந்து கொள்ளையடித்து சென்றனர். இதைப் பார்த்த அக்கம்பக்கம் உள்ளவர்கள் வீட்டின்பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை வீட்டின் உரிமையாளர் அன்பழகனுக்கு தெரிவித்தார். உடனே தகவல் அறிந்த அன்பழகன் வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்து 6.30 பவுன் மற்றும் ரொக்க பணம் ரூ.80,000 கொள்ளை போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து அண்ணாமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த அண்ணாமலை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து இதற்கு காரணமான மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com