திட்டக்குடி அருகே விவசாயி வீட்டிற்கு தீ வைப்பு

காட்டுக்கொட்டகை தீப்பிடித்து எறிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டிலிருந்த கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் தீக்கிரையானது.
திட்டக்குடி அருகே விவசாயி வீட்டிற்கு தீ வைப்பு
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த புலிகாரம்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் முருகேசன் (வயது 45). விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில் காட்டுக் கொட்டகை வீடு கட்டி வசித்து வருகிறார். வீட்டிற்கு தேவையான காய்கறிகள் வாங்குவதற்கு நேற்று இரவு 8 மணி அளவில் ராமநத்தம் சென்றார். இரவு 9.45 மணிக்கு வீடு திரும்பினார். அப்ேபாது இவரது காட்டுக்கொட்டகை தீப்பிடித்து எறிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதில் காட்டு கொட்டகை வீடு முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது. வீட்டிலிருந்த கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் தீக்கிரையானது. இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திட்டக்குடி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் மேலும் விளை நிலத்திற்கு தீ பரவாமல் அணைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ராமநத்தம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து காட்டுக்கொட்டைக்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார்? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரத்தில் காட்டுக் கொட்டகை வீடு தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com