search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muttur"

    • 20 ஆண்டுகளுக்கு மேலாக மளிகை கடை நடத்தி வருபவர் கந்தசாமி.
    • மளிகை கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம், முத்தூர், முத்துமங்கலம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மளிகை கடை நடத்தி வருபவர் கந்தசாமி (வயது57) . இவர் வழக்கம் போல் நேற்று 16ந் தேதி தனது மளிகை கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இன்று சனிக்கிழமை காலை வந்து பார்க்கும்போது கடையின் மேல் உள்ள சிமெண்ட் சீட்டை பிரித்து உள்ளே இறங்கி கடையில் இருந்த ரொக்கம் ரூ. 5 ஆயிரம் மற்றும் நகை திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.இது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தற்போது முத்தூர் -வெள்ளகோவில்-காங்கயம் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வருவதால் காவல்துறையினர் ரோந்து பணி மற்றும் வாகனத் தணிக்கையை தீவிர படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • பீரோவில் வைத்திருந்த 14.3/4 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.2 லட்சத்து 22 ஆயிரம் திருட்டு போனது.
    • வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில் :

    முத்தூர் சின்னமுத்தூர் ரோட்டில் வசித்து வருபவர் பழனிச்சாமி (வயது69). பர்னிச்சர் கடை வைத்துள்ளார். இவரும் அவரது மனைவி விஜயலெட்சுமி நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வேலாயுதம்பாளையத்தில் உள்ள தோட்டத்திற்கு சென்று விட்டு பிறகு மாலை வீட்டிற்கு வந்துள்ளனர்.

    அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 14.3/4 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ. 2 லட்சத்து 22 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து பழனிசாமி அளித்த புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வெள்ளக்கோவில் சாலையிலுள்ள ஓடைப்பாலம் அருகே சாலையைக் கடக்க முயன்றுள்ளாா்.
    • பொதுமக்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

    வெள்ளகோவில் :

    முத்தூா்- வெள்ளக்கோவில் சாலையிலுள்ள நம்பகவுண்டன்பாளையம் கரையூரைச் சோ்ந்தவா் கிரி (வயது 40). இவா் முத்தூரிலுள்ள ஒரு தனியாா் கட்டுமான நிறுவனத்தில் மேஸ்திரியாக வேலை செய்து வந்தாா்.

    இந்நிலையில், வெள்ளக்கோவில் சாலையிலுள்ள ஓடைப்பாலம் அருகே சாலையைக் கடக்க முயன்றுள்ளாா்.அப்போது, முத்தூா் நோக்கி வந்த காா் கிரி மீது மோதியது.இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.உயிரிழந்த கிரிக்கு மனைவி சுவேதா, குழந்தைகள் முகிலன் (10), அகிலன் (7) ஆகியோா் உள்ளனா்

    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெறும்.
    • முதல், 2-வது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.

    வெள்ளகோவில் :

    தமிழகம் முழுவதும் மக்கள் நல்வாழ்வு மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் கொரோனா வைரஸ் பரவுதல் தடுக்கும் பொருட்டு 34-வது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வருகிற 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதன்படி முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் முத்தூர் அரசு மருத்துவமனை வளாகம், மேட்டாங்காட்டுவலசு, மேட்டுப்பாளையம், ஊடையம், வீரசோழபுரம் ஆகிய துணை சுகாதார நிலையங்கள், முத்தூர் கடைவீதி, வரட்டுக்கரை ஆகிய அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 7 மையங்களில் வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது.

    இம்முகாமில் முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர், அங்கன்வாடி மைய பொறுப்பாளர்கள், பணியாளர்கள், பேரூராட்சி, ஊராட்சி நிர்வாக பணியாளர்கள் கலந்து கொண்டு அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 12 வயதுக்கு மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள், 18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள், இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட முன்களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல், 2-வது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசியை இலவசமாக போடுகின்றனர்.

    • சிவராஜ்க்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
    • வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில்:

    முத்தூர் கொடுமுடி பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் . இவர் முத்தூரில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி (வயது 35). இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகளும் 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். சிவராஜ்க்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் செல்வி மனமுடைந்து இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வெள்ளகோவில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×