search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "grocery shop"

    • 20 ஆண்டுகளுக்கு மேலாக மளிகை கடை நடத்தி வருபவர் கந்தசாமி.
    • மளிகை கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம், முத்தூர், முத்துமங்கலம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மளிகை கடை நடத்தி வருபவர் கந்தசாமி (வயது57) . இவர் வழக்கம் போல் நேற்று 16ந் தேதி தனது மளிகை கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இன்று சனிக்கிழமை காலை வந்து பார்க்கும்போது கடையின் மேல் உள்ள சிமெண்ட் சீட்டை பிரித்து உள்ளே இறங்கி கடையில் இருந்த ரொக்கம் ரூ. 5 ஆயிரம் மற்றும் நகை திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.இது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தற்போது முத்தூர் -வெள்ளகோவில்-காங்கயம் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வருவதால் காவல்துறையினர் ரோந்து பணி மற்றும் வாகனத் தணிக்கையை தீவிர படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    திருவட்டார் அருகே மளிகை கடைக்காரரை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். 3 பேர் பெயர்களும் ரவுடி பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.
    திருவட்டார்:

    திருவட்டார் அருகே பூவான்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டாலின் ஜெயக்குமார் (வயது 50). இவர் வேர்கிளம்பி சந்தையில் மளிகை கடை வைத்துள்ளார். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் மளிகை கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது முளகுவிளையைச் சேர்ந்த ஜோஸ் (வயது 24), அவரது சகோதரர்கள் சுபின் (22), யூஜின் (21) மற்றும் கண்டால் தெரியும் நபர்கள் சிலர் ஜெயக்குமாரை வழி மறித்தனர்.

    அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜோஸ் மற்றும் அவரது சகோதரர்கள் சேர்ந்து ஸ்டாலின் ஜெயக்குமாரை கத்தியால் சரமாரியாக குத்தினார்கள். இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இதையடுத்து ஸ்டாலின் ஜெயக்குமார் சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்தியில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து திருவட்டார் போலீசிலும் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். ஜோஸ்,சுபின், யூஜின் மீது கொலை முயற்சி உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இவர்கள் 3 பேர் பெயர்களும் ரவுடி பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.
    ×