முத்தூரில் இளம்பெண் தற்கொலை

சிவராஜ்க்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

வெள்ளகோவில்:

முத்தூர் கொடுமுடி பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் . இவர் முத்தூரில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி (வயது 35). இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகளும் 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். சிவராஜ்க்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் செல்வி மனமுடைந்து இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வெள்ளகோவில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com