search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாமான்கள்"

    • மூன்று வீடுகளும் முற்றிலும் எரிந்ததில் வீட்டிலிருந்த உணவு பொருட்கள் உட்பட தளவாட சாமான்கள் சேதமடைந்தது.
    • அரசு நிவாரண உதவியாக ஒரு வீட்டிற்கு ரூ. 5000 ரொக்கமும், வேஷ்டி, சேலை, அரிசி உள்ளிட்ட பொருட்களும் மூன்று வீடுகளுக்கு வழங்கப்பட்டது.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள உமையாள்புரம் ஊராட்சியில் தட்சன் இருப்பு தெருவில் வசிப்பவர் ஜெயராமன் (வயது 80). விவசாயக்கூலி.

    கூரை வீட்டில் வசித்து வந்த இவர் நேற்று வீட்டில் சுடுதண்ணீர் அடுப்பில் வைத்து விட்டு கொல்லைப்புறம் சென்று விட்டார்.

    அப்போது மேல்கூரையில் தீப்பிடித்து எரிந்தது.இதனால் அருகில் வசித்த சுந்தரமகம் மகன் சக்திவேல் (45), கணேசன் (75), ஆகியோர் வீடுகளும் தீப்பிடித்து எரிந்தன.

    உடனடியாக இதனை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பாபநாசம் தீயணைப்பு நிலையத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் அனைத்தனர்.

    மூன்று வீடுகளும் முற்றிலும் எரிந்ததில் வீட்டிலிருந்த உணவுப் பொருட்கள் உட்பட தளவாட சாமான்கள் சேதம் ஏற்பட்டது.

    இதில் ரூ.1.5 லட்சம் சேதம் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, மண்டல துணை வட்டாட்சியர் பிரியா, ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன், ஒன்றிய கவுன்சிலர் ஆனந்த், வருவாய் ஆய்வாளர் சுகுணா, கிராம நிர்வாக அலுவலர் சதீஷ், ஆகிய விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டு அவர்களுக்கு அரசு நிவாரண உதவியாக ஒரு வீட்டிற்கு 5000 ரொக்க பணமும், வேஷ்டி, சேலை, அரிசி உள்ளிட்ட பொருட்களை மூன்று வீடுகளுக்கும் வழங்கி ஆறுதல் கூறினர்.

    ×