search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muththur"

    • முத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் எள் அறுவடை நடைபெற்று வருகிறது.
    • சனிக்கிழமையன்று தேங்காய், கொப்பரை ஏல விற்பனை நடத்தப்படுகிறது.

    காங்கயம் :

    முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஜூன் 3-ந் தேதிமுதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் எள் மறைமுக ஏலம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூட அலுவலா் தங்கவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- முத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது எள் அறுவடை நடைபெற்று வருகிறது. அருகிலுள்ள மூலனூா், வெள்ளக்கோவில், கொடுமுடி, சிவகிரி ஆகிய பகுதிகளிலும் பல விவசாயிகள் எள் சாகுபடி செய்துள்ளனா். முத்தூா் விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமையன்று தேங்காய், கொப்பரை ஏல விற்பனை நடத்தப்படுகிறது. இத்துடன் எள் விற்பனையும் நடத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

    இதையடுத்து வணிகா்கள், உயரதிகாரிகளுடன் கலந்து பேசி நடப்பு எள் அறுவடைப்பருவம் முடியும் வரை ஜூன் 3 -ந் தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் முத்தூா் விற்பனைக்கூடத்தில் எள் மறைமுக ஏலம் நடத்தப்படும். இதில் எள் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த 10 ஆண்டுகளாக லெட்சுமணன் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்.
    • மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வந்தார்.

    வெள்ளகோவில் :

    முத்தூர் அருகே உள்ள முத்துக்கமங்கலத்தில் வசிப்பவர் லெட்சுமணன் வயது (38,)இவர் கடந்த 10 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு முத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வந்த நிலையில் நேற்று பகல் 1 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத போது லட்சுமணன் வீட்டின் விட்டத்தில் கயிறு மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்து போன லெட்சுமணனுக்கு புதன்செல்வி (33) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    • வெள்ளகோவில் போலீஸ் சம்பாம்பாளையத்தில் கண்காணித்தனர்.
    • தோட்டத்தில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், முத்தூர் அருகே உள்ள சம்பாம்பாளையம் என்ற கிராமத்தில் பணம் வைத்து சூதாடுவதாக வெள்ளகோவில் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய போலீஸ் தனிப்படையினர் முத்தூர் அருகே உள்ள சம்பாம்பாளையத்தில் கண்காணித்த போது ஒரு தோட்டத்தில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.1,43,700 பணத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.
    • ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.3.10 லட்சம்.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 8.40 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனையாயின.இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை தோறும் எள், தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.

    இந்த வாரம் எள் வரத்து இல்லை.14,528 தேங்காய்கள் வரத்து இருந்தன. இவற்றின் எடை 6,120 கிலோ.தேங்காய் ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.25.20க்கும், குறைந்தபட்சமாக ரூ.20.15க்கும், சராசரியாக ரூ.24.15க்கும் விற்பனையானது.69 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. இவற்றின் எடை 2,298 கிலோ. கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.84.30க்கும், குறைந்தபட்சமாக ரூ.66.30க்கும், சராசரியாக ரூ.80.80க்கும் விற்பனையானது.ஏலத்தில் மொத்தம் 99 விவசாயிகள், 12 வணிகா்கள் பங்கேற்றனா்.ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.3.10 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    • அவசர கால மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார நிறுத்தம் செய்யப்படும்.

    காங்கயம் :

    காங்கயம் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் வெ.கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் அவசர கால மின் பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை காங்கயம் நகரம், திருப்பூர் சாலை, கரூர் சாலை, கோவை சாலை, தாராபுரம் சாலை, சென்னிமலை சாலை, பழையகோட்டை சாலை, அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அர்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம் உட்பட சுற்றுவட்டார பகுதிகள்.

    சிவன்மலை, அரசம்பாளையம், கீரனூர், படியூர், மொட்டரபாளையம், ராசாப்பாளையம், ரெட்டிவலசு, சென்னிமலைபாளையம், ராயர் வலசு, கோவில்பாளையம், காமாட்சிபுரம், பெருமாள்மலை, சாவடிபாளையம், டி.ஆர்.பாளையம், ஜி.வி.பாளையம், புதூர், நாமக்காரன்புதூர், ரோகார்டன், கோயம்பேடு, மரவபாளையம், பரஞ்சேர்வழி, ராசி பாளையம், சிவியார்பாளையம், வளையன்காட்டு தோட்டம், ஜெ.ஜெ.நகர், கரட்டுப்பாளையம், ஜம்பை, சித்தம்பலம், தீத்தாம்பாளையம், ஆலாம்பாடி, நால்ரோடு, பரஞ்சேர்வழி, நத்தக்காட்டுவலசு, வேலாயுதம்புதூர், மறவபாளையம், சாவடி, மூர்த்தி ரெட்டிபாளையம் நெய்க்காரன் பாளையம், கல்லேரி.

    முத்தூர் கடைவீதி, காங்கயம் சாலை, ஈரோடு சாலை, வெள்ளகோவில் சாலை, கொடுமுடி சாலை, ஈரோடு சாலை, நத்தக்காடையூர் சாலை, வள்ளியரச்சல், ஊடையம், சின்னமுத்தூர், செங்கோடம்பாளையம், ஆலாம்பாளையம், சக்கரபாளையம், புதுப்பாளையம், செங்கோடம்பாளையம், வேலாயுதம்பாளையம், மேட்டுக்கடை, கரட்டுப்பாளையம், மலையத்தாபாளையம், வேலம்பாளையம் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தாராபரம் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் பாலன் கூறி இருப்பதாவது:-

    தாராபுரம் துணை மின் நிலைய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாராபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகள், வீராட்சிமங்கலம், நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், மடத்துப்பாளையம், வண்ணாபட்டி, உப்பார்டேம், பஞ்சப்பட்டி, சின்னப்புத்தூர், கோவிந்தாபுரம், செட்டிபாளையம் மற்றும் இது சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

    • முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 14,272 தேங்காய்கள் வரத்து இருந்தன.
    • தேங்காய் கிலோ ரூ.20.75 முதல் ரூ.24.05 வரை விற்பனையானது.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 7.10 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனையாயின.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 14,272 தேங்காய்கள் வரத்து இருந்தன.

    இவற்றின் எடை 5,706 கிலோ.தேங்காய் கிலோ ரூ.20.75 முதல் ரூ.24.05 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.23.45.81 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. எடை 1,987 கிலோ. கொப்பரை கிலோ ரூ.68.70 முதல் ரூ.81.70 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.77.35.ஏலத்தில் மொத்தம் 109 விவசாயிகள், 12 வணிகா்கள் பங்கேற்றனா்.ஒட்டுமொத்த விற்பனைத்தொகை ரூ.2.65 லட்சம் என விற்பனைக்கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    • 15 ஆயிரத்து 908 தேங்காய்களும் கொண்டு வரப்பட்டு டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது.
    • கடந்த 14 வார காலமாக ரூ.90-க்கும் கீழே விலை சரிந்து ஏலம் விடப்பட்டு வருகிறது.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருட்களின் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 17 சிவப்பு ரகம் அடங்கிய எள் மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் டெண்டர் முறையில் நடைபெற்ற ஏலத்தில் சிவப்பு ரக எள் அதிகபட்சமாக ரூ.115.09-க்கும், குறைந்தபட்சமாக ரூ.92.94-க்கும் ஏலம் விடப்பட்டது.

    மேலும் 15 ஆயி–ரத்து 908 தேங்காய்களும் கொண்டு வரப்பட்டு டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது. இதில் 1 கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.26.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.20.15-க்கும் ஏலம் விடப்பட்டது. மேலும் 44 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் 1 கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக ரூ.85.79-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.57.70-க்கும் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது.

    மேலும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 9 சிவப்பு ரக எள் மூட்டைகள் குறைவாகவும், 5 ஆயிரத்து 365 தேங்காய்கள் கூடுதலாகவும், 22 தேங்காய் பருப்பு மூட்டைகள் குறைவாகவும் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதில் எள் ஒரு கிலோவிற்கு ரூ.11.80-ம், தேங்காய் 1 கிலோவிற்கு கடந்த வாரத்தை விட இந்த வாரம் 35 பைசாவும், தேங்காய் பருப்பு 1 கிலோவிற்கு ரூ.1.39-ம் கூடுதலாகவே விவசாயிகளுக்கு கிடைத்தது. மேலும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தேங்காய் பருப்பு விலை கிலோ ரூ.90-ஐ தாண்டி ஏலம் விடப்பட்டு வந்த நிலையில் கடந்த 14 வார காலமாக ரூ.90-க்கும் கீழே விலை சரிந்து ஏலம் விடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு, எள் மூட்டைகள் 9¼ டன் அளவில் மொத்தம் ரூ‌.3 லட்சத்து 65 ஆயிரத்து 426-க்கு வேளாண் விளைபொருட்கள் ஏலம் விடப்பட்டது.இந்த தகவலை முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் கே.தங்கவேல் தெரிவித்தார்.

    ×