முத்தூர் அருகே மனநிலை பாதிக்கப்பட்டவர் தூக்கு போட்டு சாவு

கடந்த 10 ஆண்டுகளாக லெட்சுமணன் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்.மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வந்தார்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

வெள்ளகோவில் :

முத்தூர் அருகே உள்ள முத்துக்கமங்கலத்தில் வசிப்பவர் லெட்சுமணன் வயது (38,)இவர் கடந்த 10 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு முத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வந்த நிலையில் நேற்று பகல் 1 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத போது லட்சுமணன் வீட்டின் விட்டத்தில் கயிறு மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்து போன லெட்சுமணனுக்கு புதன்செல்வி (33) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com