முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 8.40 டன் வேளாண் விளைபொருட்கள் விற்பனை

தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.3.10 லட்சம்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

வெள்ளகோவில் :

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 8.40 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனையாயின.இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை தோறும் எள், தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.

இந்த வாரம் எள் வரத்து இல்லை.14,528 தேங்காய்கள் வரத்து இருந்தன. இவற்றின் எடை 6,120 கிலோ.தேங்காய் ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.25.20க்கும், குறைந்தபட்சமாக ரூ.20.15க்கும், சராசரியாக ரூ.24.15க்கும் விற்பனையானது.69 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. இவற்றின் எடை 2,298 கிலோ. கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.84.30க்கும், குறைந்தபட்சமாக ரூ.66.30க்கும், சராசரியாக ரூ.80.80க்கும் விற்பனையானது.ஏலத்தில் மொத்தம் 99 விவசாயிகள், 12 வணிகா்கள் பங்கேற்றனா்.ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.3.10 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com